உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 9 பிப்ரவரி, 2012

அட எது தான் காதல்.....?!!!!!


இதயம் தொடங்கி
இதழில் முடியும்
வ்ண்ண கோலமோ
காதல்...

புரிந்து கொண்டே 
அவிழ்க்க முடியா 
அசுர முடிச்சோ
காதல்...

உன்னுள் என்னை 
தொலைய வைத்த 
கொள்ளைக்காரனோ 
காதல் 

ரகசியங்களின் 
பிரபஞ்ச ரகசியமோ
காதல் 

தெரிந்த கேள்விக்கு 
விடைதெரியா பதிலோ 
காதல்..

விடுபட்டு போனாலும் 
தேடித்திரிக்கின்ற விலாசமோ
காதல்..

புன்னகை செய்தாலும் 
உள்ளுக்கும் ரணம் கக்கும் 
விஷமா
காதல்

குட்டிக் குழந்தையிடம்
கொட்டிக்கிடக்கின்ற 
பொம்மையா
காதல்...

திட்டித் தீர்த்தாலும்
திருப்பிப் பார்க்கும்
அன்பா 
காதல்...

ஒருவர் கண்ணீரில் 
இன்னொருவரும் கரைகின்ற
கலையா
காதல்

வானவில் நேரத்தில் 
வந்து விழும் 
வான் மழையோ 
காதல்...

அட இதுதான் 
என்றில்லாமல்,
உயிருக்குள் உயிர் சுமக்கும் 
கலையே காதல்..

பெரிதான காதலிடம் 
சிறிதான காமம் வந்து,
சிறிதினும் பெரிது 
கேட்கும் 
அன்பு நிலையே
காதல்... 

நம்மை நமக்கே 
அடையாளம் காட்டும் 
கலவு பிம்பமே
காதல்...

அது இது என்றில்லாமல்
எல்லாமும் அன்பில்
தொடங்கி,
அன்பாகவே அனைத்தும் 
தெரிகின்ற
இன்ப நிலையே 
காதல்..

காதல் காதல் 
காதல்
இந்த 
காந்த சொல்லுக்குள்
ஒளிந்திருக்கும்
சொல்ல முடியா ஒன்றாய்,
உணர்த்தும் வெளிகாட்ட 
முடியா காற்றாய்,
 நம் ஆயுள் நிரப்பும்
அற்புத தவமே
காதல்...♥♥♥

 காதல் ஸ்பெஷல் : சின்ன சின்னதாய் காதல்..1 


                                            சின்ன சின்னதாய் காதல்...2 

 

 

18 கருத்துகள்:

சித்தாரா மகேஷ். சொன்னது…

காதலை அருமையாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள் அக்கா.கவிதை வரிகள் மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

அற்புதத் தவமே காதல்
அது தந்த உயரிய வரமே இந்தக் கவிதை
மனம் கவர்ந்த அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Marc சொன்னது…

வார்த்தைகளை திருகி வழியும் காதல் கவிதை அருமை அருமை

நிரூபன் சொன்னது…

காதல் பற்றி கொஞ்சும் தமிழில் அழகிய காதல் கவிதையை தந்திருக்கிறீங்க.
காதலின் இயல்புகளை கவிதை காதலுடன் சொல்லி நிற்கிறது.

Unknown சொன்னது…

அர்ப்புத///அற்புத?????

Unknown சொன்னது…

அது இது என்றில்லாமல்
எல்லாமும் அன்பில்
தொடங்கி,
அன்பாகவே அனைத்தும்
தெரிகின்ற
இன்ப நிலையே
காதல்..//

அன்பே சிவம் நல்லா இருக்கு ரேவதி
வாழ்த்த வயதில்லை வாழ்த்துக்கள் :)

Unknown சொன்னது…

சித்தாரா மகேஷ். கூறியது...

காதலை அருமையாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள் அக்கா.கவிதை வரிகள் மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி சகோ உன் வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கும்... :)

Unknown சொன்னது…

Ramani கூறியது...

அற்புதத் தவமே காதல்
அது தந்த உயரிய வரமே இந்தக் கவிதை
மனம் கவர்ந்த அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

மிக்க நன்றி ஐயா, இங்கே என் தவறையும் சுட்டிக்காட்டி, திருத்தி எழுதிய உங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி....

Unknown சொன்னது…

dhanasekaran .S கூறியது...

வார்த்தைகளை திருகி வழியும் காதல் கவிதை அருமை அருமை


மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் :)

Unknown சொன்னது…

நிரூபன் கூறியது...

காதல் பற்றி கொஞ்சும் தமிழில் அழகிய காதல் கவிதையை தந்திருக்கிறீங்க.
காதலின் இயல்புகளை கவிதை காதலுடன் சொல்லி நிற்கிறது.

கொஞ்சும் தமிழில் ஐய் இது நல்லா இருக்கே.. நன்றி சகோ உன் மறுமொழிக்கு :)

Unknown சொன்னது…

siva sankar கூறியது...

அர்ப்புத///அற்புத?????

தவறுகள் திருத்தப்பட்டது சிவா... நன்றி சுட்டிக்காட்டலுக்கு :)

Unknown சொன்னது…

siva sankar கூறியது...

அது இது என்றில்லாமல்
எல்லாமும் அன்பில்
தொடங்கி,
அன்பாகவே அனைத்தும்
தெரிகின்ற
இன்ப நிலையே
காதல்..//

அன்பே சிவம் நல்லா இருக்கு ரேவதி
வாழ்த்த வயதில்லை வாழ்த்துக்கள் :)


மிக்க நன்றி சிவா உங்கள் வாழ்த்துக்கு, வாழ்த்த வயதெதற்க்கு, மனமிருந்தால் போதுமே.... நன்றி உங்கள் கருத்துரைக்கு :)

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

தலைப்பில் கேள்வியை கேட்டுவிட்டு கவிதைக்குள் பதிலை சொல்லி முடித்துவிட்டீர்கள்!

நன்றாக இருக்கிறது!

முத்தரசு சொன்னது…

காதல் காதல் எங்கும் காதல் எதிலும் காதல் அன்பே காதல்.

முத்தரசு சொன்னது…

கவிதை காதல் கவிதை பிடிச்சிருக்கு

எவனோ ஒருவன் சொன்னது…

இந்த மாதம் காதல் மாதமா ரேவா :) அசத்தல் :)

மதுரை சரவணன் சொன்னது…

ஒருவர் கண்ணீரில்
இன்னொருவரும் கரைகின்ற
கலையா
காதல்


arumai...vaalththukkal

மதுரை சரவணன் சொன்னது…

arumai..vaalththukkal