உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 19 நவம்பர், 2015

கைகுலுக்கும் சந்திப்பின் தடம்


எதிர்பாராத நேரத்தில் இணைகிறாய்
அசெளகர்யங்களின் கைகுலுக்களில்
வியர்வை வழிய ஒட்டிக் கொள்கிறது
பச்சாதாபம்

யூகிக்கமுடியாதபடி நடைபாதை பூக்கற்களில்
முளைக்கும் முட்கள் பதம் பார்க்கின்றன
காரணக் கால்களை

ஊன்றிட வலிக்கும் உண்மை
ஒதுங்கத் தேடும் இடத்தில்
பொய்யின் நிறம் வரைந்துகொள்கிறது
இன்னொரு சந்திப்பிற்கான சந்தர்ப்பத்தை

மிச்சம் வைக்கப்படும் தேனீரில்
ஆடைக்கட்டி கசந்திருக்கிறது
பழைய காத்திருப்பு

பருகக் கிடைத்த நிதானத்தில்
தீரும் உரையாடல் திருப்பித் தரும்
கையசைவில் உப்புத் தடம்

-ரேவா

0 கருத்துகள்: