உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 19 நவம்பர், 2015

விளங்கக் கேட்கும் ரகசியங்களின் விடியல்



தூக்கம் தொலையும் படி செய்துவிட்ட இரவுகளின்
கூரையொழுக பெய்துகொண்டிருக்கிறது
நேற்று


கதகதப்பு வேண்டும் கனவுகள்
நனவிலி மனதின் சுவடு


திரும்பும் வழியறியாது பெய்துவிட்ட
காரணங்களின் சீலிங் பொத்தல்
நிறைய வைத்த பாத்திரத்தின் கொள்ளளவு


தெறித்து விழும் துளிகளின் இயலாமை
ரசம் பூசிச் சிரிக்கும் கண்ணாடி ரகசியங்கள்

பிரதிபலிப்பில் மாறிக்கொள்ளும் பிம்பம்
காட்சிப்படுத்தும் தோரணையின் அசெளகர்யம்
சொட்டு சொட்டாக்கித் துளிர்க்க விடுகிறது
வெளிச்சத்தை

-ரேவா

0 கருத்துகள்: