உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
மனங்களோடு ஓர் விவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனங்களோடு ஓர் விவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஜனவரி, 2015

மனக் கிறுக்கல்கள் 3



தொலைவுகளில் நெருக்கத்தையும், நெருக்கத்தில் தொலைவையும் அனுபவிக்கும் பயணம் என்றைக்கும் திகில் நிறைந்தது. அதன் ஏற்ற இறக்க வளைவுகளின் கவனச்சிதறல், கொண்டு நிறுத்தும் அதளப்பாதாளம், வழித்துணியற்ற காட்டுப்பாதையை கண் முன் விரிப்பதாகவே இருக்கிறது.

யாருக்காகவோ துணையாகும் பயணமும், துணைவருவதாய் உடன் சேர்ந்த கைகளும், காட்சிக்கு வராது போன இருட்டில் தாண்டிச் செல்வதின் வெளிச்சம் விரிக்கும் வைட்டமின்,  வெயில் பார்க்க பழக்குவதாகவே இதுவரையும் இருந்திருக்கிறது. வெயில் பார்த்ததும், பார்க்கும் அனைத்திலும் கண் வரையும் இருட்டை நிதானித்துப் பார்க்கும் அறிவே, எது சரியானது என்பதின் சூட்சும வித்தையைச் சொல்லித்தருவதாகவும் இருக்கிறது..

தனித்திருத்தல் பெரும் வரம். அதன் கூட்டாளிகளாய் மனம் விளையாண்டு பார்க்கும் ஆடுபுலி ஆட்டத்தின் காய் நகர்த்தல்கள்
காண்பதை எல்லாம் குறைசொல்வதில் தொடங்கி தான், எனது, என்ற ஆதித் திமிரால் ஆட்டமிழக்கும் பயணத்தில் தேங்கிவிடுவதும், எழுந்து நடப்பதும் எதுவரை நாம்? எதற்காக நாம் என்ற கேள்விக்குள்ளிருக்கும் விடையால் தெளிவது. 

தப்பித்தல்கள் தவறோடு சேர்ந்துகொள்ள, தப்புகள் சூத்திரங்களாகும் பழக்கத்தில் பிழைக்கும் கணக்கும், பிழையாகும் கணக்கும் வேறு வேறு தானே..

எதனோடும் போட்டிப்போடாது மனதோடு துணைபோகும் காலங்கள், பருவமாற்றங்களை யூகித்தறிய நமக்கு  காலம் கொடுக்கும் மருந்து தான். என்றைக்கும் கசந்து கிடக்கும் மருந்தோ, துரோகங்க்ளோ, புறக்கணிப்போ தான் புதிய பாய்ச்சலை, அல்லது புதிய உத்வேகத்தை நமக்குக் கொடுப்பதாகவே இருக்கிறது..


இனிய தொடக்கங்கள் எங்கிருந்து வேண்டுமானலும் தொடங்கும். மேற்கொண்டு அதை கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகளை மனம் எனும் பயணப்பையில் சேர்த்து வைத்தல் அவரவர் கடமை...

முட்டி மோதி வெளிக்கிளம்பும் விதைகளே மரங்களாகும்...

மரங்களாவோம்.

மனதோடு இன்னும் பேசுவோம்...

 நமக்குள் நாமே பேசிப்பார்க்கும் பழக்கம் இருக்கும் வரை வாழ்தல் இனிது...


painting :Lori McNee

சனி, 4 ஜூன், 2011

அவளின் சந்தேகத்தால்...


மாலைப் பொழுது லேசாய் அயர்ந்து கொண்டிருக்க, எப்பொழுதும் இந்த நேரத்தில் வந்திருக்கும் கணவன் வராததை நினைத்து வருத்தத்தில் இருந்தால் பவித்ரா..மணி 10 நெருங்கி கொண்டிருக்கையில்  கணவன் மாதவனிடம் இருந்து அழைப்பு வர... தாமதத்தின் காரணம் தெரிந்தவுடன் அமைதியானாள் பவித்ரா..

ஆனாலும் கண்ணுக்குள் தூக்கம் இருப்புக் கொள்ள மறுக்க, ஏதேதோ சிந்தனையில் முழ்கிப் போனாள்..லேசானா தென்றல் காற்று மெதுவாய் அவள் தேகம் நுழைய, விடிந்து விட்டதை உணர்ந்து எழுகையில், கணவன் மாதவன் ஒரு குழந்தையைப் போல் உறங்கிக் கொண்டிருந்தான்... எப்போது உறங்கிப் போனோம், இவர் வந்ததைக் கூட அறியாமல், என தன்னைத் தானே கேட்டுக் கொண்டு சமையல் வேலைகளில் மூ
ழ்கிப் போனாள்..

பவித்ராவுக்கும், மாதவனுக்கும் திருமணம் நடந்து பத்து வருடங்கள் கடந்து விட்டது, இருவருக்கும் குழந்தைப் பேறு இல்லாததை தவிர வேறு எந்த குறையும் இல்லை... மாதவனின் பெற்றோர் இவனை மறுமணத்திருக்கு எவ்வளவோ வற்புறுத்தியும் சம்மதிக்க மறுத்தான்.. அவ்வளவு காதல் பவித்ரா மீது..

பவியும் குறையாத அன்போடு அந்த குடும்பத்தை வலம் வருபவள்..தனக்கு குழந்தை இல்லை என்ற குறையை தன் அன்பான கணவனின் அன்பின் மூலம் போக்கி கொண்டவள்...

மாதவன் எதையும் தொலைநோக்கு பார்வையோடு சிந்திக்கும் ஒரு இளங்கலை பேராசிரியர்...பவித்ரா குடும்பம் அன்றி வேறு யாதும் அறியாதவள்... கண்மூடித் தனமான அன்பு அவள் கணவன் மீது..
சின்ன சின்ன விசயங்களை எல்லாம்  பெரிது படுத்தும் குணம் உடையவள்...பலகீனம் கொண்ட அவள் மனதில், எப்போதும் மாதவன் தனக்கு குழந்தையில்லாததை வைத்து பிரிந்து சென்று விடுவானோ, என்ற பயம்.. அதனாலேயே எப்போதும் மாதவனின் இன்னொரு நிழலாய் அவனைத் தொடர்வாள்

அவ்வப்போது சின்ன சின்ன சண்டைகள் எழுந்தாலும், மாதவன் எதையும் பெரிது படுத்தாது பொறுமை காப்பவன்... அன்றும் அப்படி தான், ஒரு விடுமுறை அன்று,  தன் கல்லூரியை சேர்ந்த இளங்கலை மாணவி, மது ஏதோ பாடம் நிமித்தமாக மாதவன் இல்லம் வர,  வழக்கம் போல் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் மதுவுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை விளக்கி கொண்டிருந்தார் மாதவன்..இதனிடையே தன் வேலையில் இருப்புக் கொல்லாத பவித்ரா அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருந்தாள்... பாடம் நடத்தப் படும் அறையில் இருந்து சிரிப்பு சத்தமும், மதுவின் கிண்டல் பேச்சும் பவித்ராவுக்கு எரிச்சலை உண்டு பண்ண, மாதவன் பாடம் நடத்தும் அறையை நெருங்கிய பவித்ரா, சிறிதும் தாமதிக்காமல் மதுவின் மனதை காயப் படுத்தும் வார்த்தைகளை உதிர்க்க, மதுவின் கண்கள் கலங்கியதை அறிந்த மாதவன் சற்றும் எதிர்பார்க்காமல், பவியின் கன்னத்தில் அறைந்தான், இதை சற்றும் எதிர்பாராத பவித்ரா, இன்னொரு பெண் முன் தன் கணவன் தன்னை அடித்து விட்டான் என்ற காரணத்தால். மதுவை  அவள் வீட்டில் வெளியே விட்டு வீட்டுக்குள் வந்தாள் பவித்ரா...


தன் வகுப்பு மாணவி, முன் தனக்கு நேர்ந்த அவமானம் பற்றி சிறிதும் எண்ணாமல், இது வாடிக்கை தான் என்பது போல் மாதவன் தன் வேலைகளை தொடர்ந்தான், இந்த விசயமே தன் வாழ்க்கையில் பெரிய இடியாய் இறங்கும் என்பதை அறியாமல்...

காலை எப்பொழும் போல் கல்லூரி செல்ல ஆயத்தமாகிகொண்டு இருந்தான். பவித்ரா வீடு வேலைகள் எதவும் செய்யாமல் தன் அறையிலேயே இருந்தாள். பவித்ராவின் குணம் அறிந்த மாதவன் கல்லூரி கிளம்பி செல்ல, தன் கோவத்தின் காரணம் கேட்காமல், தன்னை தனிமையில் விட்டு சென்றதை நினைத்து பவித்ராவுக்கு அதிக கோவம் வந்தது..

அன்றில் இருந்து பவித்ராவின் செயல் முறையில் மாற்றம் தோன்றியது. எப்போதும் கணவனின் கைபேசியிலிருந்து, எல்லாவற்றிலும் சந்தேகம் கொள்ள ஆரம்பித்தாள். தன் சக நண்பனிடம் மாதவன் பேசினாலும் பெண்ணிடம் பேசுவதாய் சண்டை இட்டாள். மாதவன் கல்லூரியில் இருக்கும் பெண் பேராசிரியர்களின் கைபேசிக்கும் தொடர்பு கொண்டு தன் கணவனைப் பற்றி தாறு மாறாக சொல்லி இனி அவரோட தாங்கள் எந்த தொடர்பும் கொள்ளத் தேவை இல்லை, அப்பொழுதே எங்கள் வாழ்க்கை சுகமாய் இருக்கும்  என்பதை போல சொல்லி முடித்தாள்...


அன்றில் இருந்து மாதவனை கல்லூரி வளாகம் ஏதோ விஷ ஜந்துவை பார்ப்பதை போல் பார்த்தனர்.  அவனிடம் சகஜமாய் பழகும் யாரும் அவனிடம் பேசுவதை தவிர்த்தனர்.. முதல் முறை மாதவன் நரகத்தின் இருப்பை அந்த கல்லூரியில் உணர்ந்தான்.. எந்த தீய பழக்கமும் இல்லாத மாதவன் குடிப் பழக்கத்திற்கு  அடிமையாகிப் போனான்... தன் வாழ்க்கையில் சந்தோஷம் வெறும் வார்த்தையாகிப் போனாதாய் உணர்ந்தான்...


இதனால் பவித்ராவிற்க்கும், மாதவனிற்கும்   அன்றாடம் சண்டைகள்... பவித்ராவின் சந்தேகத்தால் அந்த குடும்பம் முழுமையும் நிம்மதி இழந்து தவித்து வருகிறது.. மாதவன் தன் பேராசிரியர்.வேலையை விட்டு மதுக் கடையே கெதியென இருக்கின்றான். பவித்ரா கிடைத்த வாழ்க்கையை சந்தேகத்திற்கு அடகு வைத்து சந்தோஷம் இழந்து தவிக்கின்றாள்...இன்று .குடும்பம் மொத்தமும் சிதைந்து போய் கிடக்கிறது
அவளின் சந்தேகத்தால்..

நண்பர்களே இது கதை தான்.....ஆனால் இந்த கதைக்குள் இருக்கும் நிதர்சன உண்மையை பெரும்பாலான பலர் சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்...ஆம் சந்தேகம் மனித குலத்தை அழிக்க வந்த ஒட்டுண்ணி.... உள்ளுக்குள்ளே இருந்து உயிர் அறுக்கும் ஒரு  கொடுமையான வலி...

 
1)  பவித்ராவை போன்ற பல பெண்கள் நம்மில் இருக்க தான் செய்கின்றனர்,  கண்மூடித் தனமான அன்பும் அதன் விளைவாய் வந்த சந்தேகமும் அவள் வாழ்வை புரட்டி போட்டது உண்மைதானே....

2) தன் கணவன் தனக்கு மட்டும் தான் என்று நினைக்க, மனித உயிர் ஒன்றும் பூட்டி வைக்கும் சொத்துப் பத்திரம் இல்லை...கொடுக்கும் அன்பை நிலையாய்க் கொடுத்தால், தனக்கான ஒன்று தன்னிடமே இருக்கும் என்பது உணமைதானே...

3 ) ஒருவர் மீது நாம் வைக்கும் அன்பு என்பது, காற்றை போல இருக்கவேண்டும்... கடிவாளம் இட்டால், புயாலாய் மாறி சேதப்படுத்துவது நிச்சயம்...உண்மையான அன்பிற்கு உண்மைகள் தெரியும்...அன்பு உணர்தலில் இருக்கிறதே அன்றி புரியவைத்தலில் அல்ல...

4 ) தன் வாழ்க்கை பறிபோவதாய் நினைத்து பவித்ரா கொடுத்த சந்தேக அழுத்தம், அவர்களின் அன்பின் ஆழத்தை குழைத்தது உண்மை தானே...


5 ) வாழ்கையில் எந்த உறவுக்குள்ளும்  சந்தேகம் இருக்க கூடாது... இருந்தால் மனம் விட்டு பேசுங்கள்... அன்பு காட்டுங்கள்... எங்கு தனக்கான அன்பு குறைகிறது என்ற எண்ணம் வளர்கிறதோ,அங்கு வாழ்வை தரிசாக்கும் சந்தேகக்
களையும் வளரத் தான் செய்யும்.

6 ) பிடித்தமானவர்களிடம் எப்பொழுதும் பிடித்தம் வையுங்கள்...எதை உங்களால் கடைசி வரை பின்பற்ற முடிகிறதோ அதை மட்டுமே உங்கள்  பிரியமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்...

அழகான நம் குடும்பம் பாலாய்ப் போன சந்தேகத்தால் பாழாகலாமா.... 

7 ) உறவுக்குள் சந்தேகம் தோன்றின் மனது விட்டு பேசுங்கள்...உண்மை நிலையை உங்கள் உறவுக்கு புரியவையுங்கள்.... புரிதலில் தானே வாழ்க்கை இனிக்கும்...எனவே  சந்தேகம் ஆட்சி செய்யும் எண்ணங்களை  களை எடுப்போம்.. சந்தோஷ விதை விதைத்து, குடும்ப அமைப்பை செழிப்பாக்கி அழகான வாழ்க்கை வாழ்வோம்

இங்கு பலர் கிடைத்த வாழ்வை, பயன்படுத்த தெரியாமல், தானும் கெட்டு, தன்னை சேர்ந்தோரையும்,நிம்மதி இல்லாமல், சந்தேகத்தால் வதைத்து, நரக வாழ்க்கை வாழ்கின்றனர்...ஏன் இந்த கோவம், எதற்கு இந்த சந்தேகம்...இருக்கும் ஒற்றை வாழ்வில், அன்பாய் இருந்து, அன்போடு செல்வோம்....
இயன்ற வரையில், இணைந்திடுவோம்.....வணக்கங்களுடன் ரேவா....


செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அவனும் அவளும்..



ரகுவும், லதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்... ரகு ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் கட்டிளம் காளை... அவனைக் கண்டதும் காதல் செய்ய சொல்லும் அவன் கண்கள்...ஒட்டுமொத்த அழகையும் இறைவன் தனக்கே படித்ததாய்  நினைத்து எப்போதும் கர்வம் குடிகொண்டிருக்கும் நெஞ்சம் அவனுக்கு... இதற்க்கு நேர் எதிர் லதா....பார்த்ததும் பணிவு கொள்ளச்செய்யும் தோற்றம்.. தமிழ் பெண்ணுக்கே உரித்தான நாணம் என எப்பொதும் அமைதி குடிகொண்ட இடமாய் காட்சி தருவாள்..

இவர்கள் காதல் துளிர்த்த இடம் ....இருவரும் அலுவலக பணி நிமித்தமாய் சந்தித்துக் கொள்ள பார்த்ததுமே  இருவருக்குள்ளும் காதல் தீ பற்றிக் கொண்டது... ஆனாலும் ரகுவும் லதாவும் காதலை வெளிப் படுத்தாது  பரஸ்பரம் நண்பர்களாய் இருந்தது வந்தனர்...

லதாவின் பொறுமையும் நேர்த்தியான செயல் திறமையும், அடங்கிப் போகும் குணமும், ரகுவுக்கு பிடித்துபோக தன் காதலை அழகான ஒரு மாலைப் பொழுதில் தென்றல் தழுவும் கடற்க்கரை அருகில் அலைகளின் சாட்சியோடு அழகான தன் காதலைச் சொல்ல...
அழகியவள் கொஞ்சம் தடுமாற பின் நாணிக் குருகி வெட்கம் தின்ன தன் காதலை அவளும் அவனிடம் சொல்ல... அவளும் அவனும் ஒன்றாகி காதல் மொழி பேச காலங்கள் உருண்டோடியது...

லதாவின் வீட்டில் திருமண பேச்சுக்கள் நடக்க, இவளும் தன் காதலைப் பற்றி தன் குடும்பத்திடம் சொல்ல,  ரகுவை சந்தித்து பேச லதாவின் குடும்பம் ஆயத்தமானது...ஒரு ஞாயிறு அன்று ரகு லதாவின் வீட்டுக்கு சென்று தன் காதலை பற்றி லதாவின் குடும்பத்திடம் பேச, ரகுவின் நான் என்ற ஆணவமும், உயர் பதிவியில் பணிபுரியும் கர்வமும் அவனிடம் அதிகமாய் இருப்பதாய் உணர்த்த லதாவின் பெற்றோர் லதாவிருக்கு பொருத்தமானவன் இவன் இல்லை என்று வேறு இடம் பார்க்க... பதறிப்போன லதா வீட்டுக்கு தெரியமால் ரகுவை மணந்தாள்...

புதுமண தம்பதியாறகிப்போன காதலர்கள், காதலையும் இளமையையும்  பருகிப் பருகி சுவைக்க, வாழ்க்கை இருவருக்கும் சுகமாய் நகர்ந்தது... தன் குடும்பத்தை பிரிந்த லதாவின் துயரும் உள்ளக் குழியில் ஒட்டி இன்று வலித்தது.. ரகுவின் குடும்பத்திருக்கு பிடித்தமாகிப் போன லதா அங்கு இன்னொரு மகளாய் பவனி வந்தாள்.. ரகுவிற்கு மட்டும் லதாவின் குடும்பத்தின் மீது இனம் தெரியா கோவம்... லதாவின் முன்னே அவள் குடும்பத்தை சாடுவது, எள்ளி நகைப்பது என அவள் பொறுமையை கட்டவிழ்த்து கொண்டிருந்தான்..

இதன் இடையே லதா வேலைக்கு செல்வதும்...  அவன் அல்லாத வேறு ஆண்கள் கூட பேசுவதும் பழகுவதும் நட்பு பாராட்டுவதும்  அவனுக்கு  பிடிக்காமல் போக பெண் என்றால் இப்படி தான் என்று ஒரு படித்த இளைஞனுக்குள்  ஒளிந்து கொண்டிருந்த பாமரனையும், ஆண் நான் என்ற கர்வத்தையும் லதா அவன் பேச்சில் உணர்ந்தாள்... நாட்கள் நகர நகர ரகுவின் ஆளுமை லதாவிடம் எரிச்சலை உருவாக்க, இருவருக்கும் பரஸ்பரம் இருந்த காதல் காணமல் போக.. சண்டையும், கோவமுமே வீட்டில் நர்த்தனம் ஆடியது... தன்னை தன் கணவன் பணிப்பெண்ணாகவும் , போகப் பொருளாகவுமே பார்ப்பதாய் உணர்ந்த லதா காதல் கணவனை விடுத்து இன்று விவாகரத்து பெற்று  தனிமையில் படிப்பின் துணையுடன்  வாழ்த்து கொண்டிருக்க, ரகு தன் காதலை பற்றியும் தன் கட்டிய மனைவியைப் பற்றியும் சிறிதும் நினைப்பில்லாமல் அலைந்து கொண்டிருக்க, முதுமையில் தன் மகனின் வாழ்கை மாற்றங்களை ரசிக்க நினைத்து, ரணங்களை மட்டும் பார்த்து வாழ்க்கையின் இறுதி காலத்தை துயரோடு அனுகிகிறார்கள் ரகு மற்றும் லதாவின் பெற்றோர்...

நண்பர்களே இந்த கதையோ இல்லா கற்பனையோ இல்லை... நாம அன்றாடம் பாக்குற விசயங்கள்ல இப்போ கணவன் மனைவி பிரிவு ஒரு முக்கிய அங்கமா வந்துருச்சு...வேக வேகமா காதலிக்கிறோம் அதே வேகத்துல சில பேரு காதல் , தாம்பத்தியம், குடும்பம் இப்படி  எது பத்தியும் நினைக்காம இளமையோட உந்துதல்ல கல்யாணமும் பண்ணிக்கிறோம்...  நம்மோட பாரம்பரியமே குடும்பமும்  குடும்பம் சூழ்ந்த நம் அமைப்பு தான் ஆனா இப்போ அதுவும் காணாம போயிட்டு  இருக்கு..

பரஸ்பரம் கணவன் மனைவிக்குள்ள இருக்கிற அன்பு, விட்டு கொடுத்தல், தட்டி கொடுத்து விட்டு பிடித்தல், உணர்வுகள புரிஞ்சு அதன் படி நடத்தல், பணிந்து போதல், புரிந்து கொள்ளுதல், இப்படி எதுவுமே நம்ம இளைய தலைமுறை கணவன் மனைவிகிட்ட இல்லாம போக காரணம் என்ன?...

இங்க யாரும் யாரையும் புரிஞ்சுக்க நினைக்கிறதில்ல, இப்போ நாம இருக்கிற சுழலும் அதுக்கு ஒரு காரணமா போயிடு இருக்கு... கணவனும் மனைவியும் பொருளாதார ரீதியில சுதந்திரமா செயல பட ஆரம்பிச்சுட்டோம்...ஒரு பொண்ணுனா இப்படிதான் வளரணும்னு சொல்லி சொல்லி வளர்க்கபடுறோம்..

ஆனா ஒரு ஆணுக்கு அப்படி எந்த கட்டுப் பாடுகளும் இல்லை...ஒரு ஆணை தான்  ஆண்கிற முறையிலேயே அவங்கள வளர விடுறோம்..எவ்ளோ தான் ஒரு ஆண் படிச்சாலும் ஒரு சிலர், பெண் நமக்கு கட்டுப்பட்டு தான் இருக்கணும்கிற எண்ணத்தோட இருக்கிறோம்... அவளுக்கும் மனசு இருக்கு அவளோட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து அவளோட எண்ணங்களோட நாமும் ஒத்துப் போவோம்னு நினைக்கிறது கிடையாது..

சில பெண்ணுங்களும் ஆண்கள புரிஞ்சுக்க தயார இல்லை...படிப்பும், பணமும் கொடுக்கிற சுதந்திரத்த ஒரு ஆணுக்கிட அடகு வைக்க தயார இல்லை.. அதோட விளைவு நீ சொல்லி நான் கேக்கணுமா கிற நிலை..
இவ என்ன சொல்ல நான் என்ன கேக்கனு.. பிரச்சனைகள் ஆரம்பம் ஆகா விளைவு சுயலமான  விவாகரத்து தான்...

தனிப்பட்ட இவருக்குள்ள பிரச்னைக்கு விவாக ரத்து மட்டும் போதுமா?... ஏன் நம்ம யாரும் உறவுகளை புரிஞ்சுக்க தயார இல்லை... ரத்தம் வரும்படி ஒருத்தர குத்திக் கொல்லுறது மட்டும் கொலைகிடையாது... உணர்வுகளை புரிஞ்சுக்காம, உறவுக்குள்ள இருக்காம பிரிஞ்சு, நம்ம சுயநலத்தால சுத்தி இருக்கிற நம்ம உறவுகளோட உணர்வுகளை கொல்லுறதும் கொலைதான் நண்பர்களே..

குடும்பம்கிறது ஒரு அழகான ஆலயம்...அங்கு அமைதியும் சந்தோசமும் தவழ்ந்தா தான் அன்புகிற கடவுள் மூலம் குடும்ப உறவை வளப்படுத்த முடியும்... பொறுமையா எந்த விசயத்துக்கும் அறிவுப் பூர்வமா சிந்தித்து உணர்வுக்கும் கொஞ்சம் வழிவிட்டு நடந்தா பிரச்சனை  என்பது இல்லாமல் போகும் தானே நண்பர்களே...
சிந்திப்போம்  நம் குடும்ப அமைப்பை பண்பாடு மாறாமல் பேணிக்காப்போம்... 



  முந்தையப் பதிவு : என் காதல் தேவன் நீ

நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள்... உங்கள் வாழ்த்துக்களே எங்களை வளப்படுத்தும் 
அன்புடன் 
உங்கள் தோழி 
ரேவா