வெளியே புயலின் பீதி உள்ளே வரும் அத்தனையிலும் காற்றோடு மரங்கள் சேர்ந்திசைக்கும் பேய் இசையினைப் போலொரு பெரும் துயர்காட்சி நெஞ்சடைத்து பெய்த பின்னும் வெறிக்காத வானம் வேடிக்கை இடிமின்னல்களென எப்போதும் அடைமழைதான் மனகாட்டில்.
அனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து.
தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக