உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

மண்டியிடும் உரையாடலின் நிறம்




*

குற்ற உணர்வோடே இருக்கும் படி செய்துவிட்ட உரையாடல் வளர்க்கும் ஈரத்தில் இருண்மையின் பூஞ்சை

ஒதுங்கத் தேடும் வெளிச்சத்திலும் வழிந்து பெருகுகிற சொல் வளர்க்கும் ஞாபகத்தில் எட்டுக்காலின் வேகம்
புழுங்கும் மனதின் வெப்பம் வேடமிட வைக்கும் சகஜ நிலைக்குள் வியர்த்துக் கொட்டும் வார்த்தைகள் பச்சையமற்ற உப்புத் தடங்கள்

வாழ்தலில் புலனாகா சம்பவம் பிரசவிக்கும் கோடுகள் பிரித்துக் காட்டும் எல்லையில் திரும்ப முடியா சொல்லின் நீலம்

0 கருத்துகள்: