உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
சமூகக் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகக் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜூலை, 2012

உனக்கும் பெண் பிறக்கலாம்...


சிறுகுழந்தையைப்போல
கவனமீர்க்கிறது
உன் வருகை...

உன் வருகைக்கு பின்னான
நியாயங்கள் ஒவ்வொன்றையும்
அளந்துபார்க்க ஆயத்தமாகிறது
மனது...

உனக்கு பிடித்ததில் தொடங்கி
பிரியமற்றதாய் நீ தவிர்க்கும்
விசயங்களென அத்தனையும்
அறிந்துவைத்திருக்கிறது
இந்த மனது...

என்னை பற்றிய
உன் நிலைப்பாடு எதுவென்றறிய
என் நிலையிலே இருந்துபார்க்கிறேன்,-பின்
உன் நிலைப்புரியாது
நிதானமிழக்கிறேன்..

உன் ஆசைக்காய் வாதாடும்
மனம்- ஏனோ
என்னைப்பற்றி நினைப்பதேயில்லை..

பெண்ணென்று எல்லாவற்றிலும்
 என்னை நிர்பந்திக்கும் மனம்
உன்னை எதிலுமே நிர்பந்திக்கவேயில்லை..

உனக்காய் சுயம் சுருக்கிய பொழுதுகளில்
எனக்குண்டான வலி
நீ அறியவே இல்லை..

பரீசிலணை செய்யாமலே
பலிகொடுக்கப்படுகின்ற
என் நெஞ்சத்து ஆசைகளை
அசைபோட
நீ ஒரு ஆடாய் கூட இல்லை..

அத்துமீறி அந்தரங்கம் திருடும்
கள்வனைப்போலல்லாது
சிறுகயிற்றின் நிமித்தம்
அன்னிச்சையாய் நடக்கும்
புணர்தல்
அதிகம் வலிகொடுக்கிறது,
உன் நேசிப்பின் தூரம் விளங்கியதன் பொருட்டு..

ஆயிரம் கனவுகளை சுமந்து
அரைகயிற்றில் அனைத்தையும்
தூக்கிலேற்றும் தந்திரம்
தெரிந்த ஆணே
உனக்கும் என் மூலம் பெண் பிறக்கலாம்..



(விதைப்பதை தான் அறுக்கமுடியும்.......) 



திங்கள், 19 செப்டம்பர், 2011

யாரேனும் கேளுங்கள்...



நான் அற்று நீ
மட்டும் நீயாய்
மாறிய நொடி
எப்படி இருந்தது உனக்கு ?

பிரியம் கொண்ட
நம் காதலுக்குள்,
பிரியம் தொலைக்க வைத்த
உன் ஆளுமையை,
அன்றே தான் நீ உணர்ந்தாயா?...

பிரியச் சிலுவைக்குள்
அகப்பட்ட என் பாசம்,
முள்ளில் சிக்கிய
சேலையாய் மாறியதை
நீ அறிந்தாயா?...

என் விருப்பங்களும்,
வெறுப்புகளும்,
உன் அனுமதியில் இருக்கவேண்டும்
என்ற உன் ஆண்மைத்திமிரை,
அன்பாய் நான் பாவித்தது உனக்கு
புரியாதா? 

பெண் என்ற
வரையறையை வகுத்திட்ட
வர்க்கத்திலே,
தனிரகம் என்றே உன்னை நினைத்திட்டேன்...
நீயோ,
தர்க்கம் செய்தால் தாவிக் குதிக்கிறாய்...
நட்பு வட்டம் கூடாதென்று கட்டளை இடுகிறாய்...
சிரித்து பேசினால் வேஷம் என்கிறாய்...
கோபமாய் பேசினாலோ பொறுமையாய்
இருப்பதுவே பெண்ணுக்கு அழகென்கிறாய்...
தனிப்பட்ட என் விருப்புக்கும் தடை இடுகிறாய்...

உயிர் அற்று போகும் வலிகளை தந்து
அன்பென்று ரசிக்கிறாய்
 நீ...
ரணங்களை சுகங்களாய் மாற்றிட
சுயம் தொலைக்கிறேன் 
நான்...

உன் கட்டளைகளும் கட்டுப்பாடுகளும்
என்மீதான காதல் என்றே
அறிந்திருந்தேன்...
ஆனால் அனைத்தும்
உன் ஆண்மையின் இயலாமை
என்றே உணர்ந்தேன்,
உன்னிடம் உரைத்தேன்....

கடைசியாய்,
காதல் பேசிய உதடுகள்
கனல் அள்ளி வீசியது....
வஞ்சித்து விலகியவர்
இடத்தில் என் பெயரும் வந்தது..

உன்னை நீங்கி வாழ்தல்
சாத்தியம் இல்லாத சத்தியம்
என்றே உணர்ந்தாலும்,
நான் என்ற என்னை
நானாகவே இருக்கவிடாத உன்னை,
ஆண் என்று மார்தட்டும் உன்னை
நீங்குதல் பிழையல்ல
என்றே பிரிந்தேன்...

வருடங்கள் தொலைந்தாலும்,
இளமையது கரைந்தாலும்,
நான் மட்டும் விவாகரத்து
ஆனவள்...
நீ....
புதுமாப்பிளை...

இது என்ன நியாயம்
யாரேனும் கேளுங்கள்...

புதன், 23 மார்ச், 2011

வாழ்க்கை வழக்கு....



* கடவுளால்
ரச்சிக்கப் பட்ட திருமண வாழ்க்கை,
ரத்து செய்யப்பட்டது
சட்டத்தால்...

* புரிகின்ற நிஜங்களையும்
புரியாத பொய்களையும்
பெரிது படித்தியதால்
பிரிவினை கண்டது
அவர்கள் வாழ்க்கை...

* இணைக்கப்பட்ட இதயங்கள்

பிரிந்து கொள்ள,
இருவரால் பிறந்த
இதயம் மட்டும்
தனிமையில்....

* வழக்குகள் வாழ்க்கையை
முடிவுக்கு கொண்டுவர,
மழலையின்
வாழ்க்கை மட்டும்
வழக்காய்...
அவர்கள்
காணாமல் போன காதல்
முன்னே ....

முந்தையக் கவிதை : காதல் மழை

சனி, 5 மார்ச், 2011

சொல்வதற்கு இனி ஒன்றுமில்லை...



* தெருவெல்லாம்  தோரணம்
தெருக்கூத்து நாடகம்,
சுவர் எல்லாம் கண்கவரும்
வண்ண வண்ண வாசகம்...
இங்கு,
சண்டையிட்டவன் கூட்டாளி,
சாட்சி சொல்பவன் பங்காளி,
வேடிக்கைப் பார்க்கும்
சாமானியனுக்கோ
சலுகை விலையிலே
சமாதி...

* ஊழல் சகதியை
சந்தனமாய் இட்டுக்கொண்டு,
சாகச வித்தை காட்டி,
ஒன்றுமாறியா பாமரனின்
உரிமையை காசுக்கு
விலைபேசி,
சலுகை காட்டி,
நமக்கு நாமே
போடும் வாய்க்கரிசி...

* மாற்றம் கண்டு கண்டு,
மானுடம் மாறிப் போக,
என்றேனும் மாறுதல்
வரும் எனக் காத்திருக்கும்
மனங்களுக்கோ,
தேர்தல் கால
பாசம் என்பது
கண்துடைப்பு...

* ஏறாத விலையெல்லாம்
ஏறிப்போக,
ஏதுமறியா என் பாமரனுக்கோ
 500 ரூபாயும், பிரியாணிப்
பொட்டலமே
உயிர் நாடி...

* சிந்திக்க  தெரியாத
மனித சடலங்கள் இதுவரை
பெற்ற சலுகை,
வீடில்லா ஏழைகளுக்கு வீடு..
பசித்த வயிறுக்கு உணவில்லாத
வேலையிலே,
ஒய்யார  பவனி வந்து
ஓரத்தில் முடங்கிப் போன
கேஸ் அடுப்பு....
வறுமைக் கோட்டில்
தன் வாழ்வை தொலைத்த
சகோதரிக்கோ
இலவச வண்ணத்தொலைக்காட்சி...
மின்சாரமே இல்லா
என் ஏழைச் சிறுவர்களுக்கோ
மடிகணினி...
இது எல்லாம் போக,
இறந்து போன
மனிதனுக்கும் ஓட்டுரிமை...

* ஆம் சொல்வதற்கு
ஒன்றும் இல்லை...
ஏப்ரல் 13
தேர்தல்...

* ஒத்திகைப் பார்த்தாயிற்று..
முகச் சாயமும்
போட்டாகி விட்டது..
தெருவெல்லாம் இனி
நாடகம்...
இனிக்க இனிக்க சலுகை
என்னும் பாசக் கையிற்றால்
சாமானியனின்
சுவாசம் நிறுத்தும் நாடகம்
ஆரம்பம்....   

* கண்ணால் பார்த்ததைக்
கொண்டு,
காதால் கேட்டதை
வைத்து,
தீர்க்கமாய் யோசித்து,
மாற்றம் என்னும் மையிட்டு,
தேர்தலை வரவேற்ப்போம்...
பொய்மைக்கு இடம் தராமல்,
உண்மையை வாழ வைப்போம்...

* காசுக்கு அடகு வைக்கும்
நம் உரிமையை,
சுய அறிவு கொண்டு
மீட்டெடுப்போம்...

* இதையும் தவறவிட்டால்,
சொல்வதற்கு
இனி ஒன்றுமில்லை.... 

* தெருவெல்லாம்  தோரணம்
தெருக்கூத்து நாடகம்,
சுவர் எல்லாம் கண்கவரும்
வண்ண வண்ண வாசகம்...
இங்கு,
சண்டையிட்டவன் கூட்டாளி,
சாட்சி சொல்பவன் பங்காளி,
வேடிக்கைப் பார்க்கும்
சாமானியனுக்கோ
சலுகை விலையிலே
சமாதி... 

அன்புடன் 
ரேவா

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

*** யார் அறிந்தார் ****


எந்தன்
சிந்தனையில் நுழைந்து
அங்கம் அதில் கலந்த
ஒன்றை
சீர்தூக்கி பார்க்க
திறன் அற்றுப்
போனோம்.....
ஆம் 
சிறகது முளைக்கும்
முன்னே வறுமையில் 
சருகாய் போன
எந்தன் பிஞ்சின் வலியை
சீர்தூக்கி பார்க்க
திறன் அற்றுப் போனோம்..


* அன்னையின் மகன் ஆசைக்காய்
தந்தையின் பெண் ஆசைக்காய்
எண்ணிக்கை கூடி,
அதனால்
எங்கள் எண்ணங்கள் கூடி
ஓடிப் போனதை யார் அறிந்தார்...

 

* மாற்றம் வரும்
எங்கள் வாழ்வில் மீறுதல் தரும்
என்று பத்திரமாய்
நான் பாதுகாத்த 
எங்கள் பாட புத்தங்களை
காலம் தின்று ஏப்பம்
விட்டதை யார் அறிந்தார்...

 

* தமிழ் வணக்கம்
பாட வேண்டிய எங்கள்
பூவிதழ்கள்,
அம்மா தாயே என்ற
பாடலையே  தேசியகீதமாய்  
பாடித் திரிவோம்
என்பதை யார் அறிந்தார்...


* பேனா பிடித்து
கரை பட வேண்டிய
பிஞ்சு விரல்கள்,
பத்துக்கு பத்து ஸ்பேனர்
பிடித்து கரை படிந்த
காரணத்தை யார் அறிந்தார்...

 

* எங்கள் இளமையை
வறுமைக்கு விலை பேசிய
விலை மாந்தர்கள் யார்
என்று யார் அறிந்தார்...

* இங்கு மறித்து போன மனிதனுக்கும்
அன்பில்லை
மனிதன் என்ற பெயரில் 
அலையும் சவங்களுக்கும்
அன்பில்லை...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
என்ற வள்ளுவரின் குறளில்
மட்டும் அன்புள்ளது
என்பதை யார் அறிந்தார்...


* எங்களை வளர விட்ட
வேர்களுக்கும்  தெரியவில்லை,
வளர இடம் தந்த
பூமிக்கும் தெரியவில்லை
விழுதுகள் வளர
பணச்சேர்க்கை தேவை என்பதை...
இதில் எங்கள் உணர்வுகளை
யார் அறிந்தார்..
 
* கடலும்
எங்கள் கண்ணீரின்
எச்சம் என்பதை யார் அறிந்தார்....
 
* இளமை இந்தியாவின்
வளமை என்று
மார்த்தட்டி சொல்பவர்களே...
இந்த இளமை வறுமையில்
வளமாய் வாழ்கிறது
என்று மார்தட்டி சொல்லுங்கள்...

இப்படியே போனால்,
இளமையில் வறுமை
தரும் முதுமை மட்டுமே
இந்தியாவின்
முதல் அடையாளமாய் போகும்....
 
 * அதற்க்கேனும்,
எங்கள் வறுமைக்கு
ஒரு வழி சொல்லுங்கள்....
உங்கள் முகமுடிக்கு
சாயம் இட்டுக்கொள்ளுங்கள்....
இந்த சடலங்களுக்கு
பிடி சாம்பலாவது
அள்ளிக்கொண்டுங்கள்....
 
 * எங்கள் இந்தியா
பண்பாடு நிறைந்த நாடு
மட்டும் அல்ல..
பணத் தேக்கம் பெருத்த
நாடு என்பதை நான் அறிவேன்
நீர் அறிவீரா?........
 
* இங்கு மறித்து போன மனிதனுக்கும்
அன்பில்லை
மனிதன் என்ற பெயரில் 
அலையும் சவங்களுக்கும்
அன்பில்லை...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
என்ற வள்ளுவரின் குறளில்
மட்டும் அன்புள்ளது
என்பதை யார் அறிந்தார்...
 
* எந்தன்
சிந்தனையில் நுழைந்து
அங்கம் அதில் கலந்த
ஒன்றை
சீர்தூக்கி பார்க்க
திறன் அற்றுப்
போனோம்.....
ஆம் 
சிறகது முளைக்கும்
முன்னே வறுமையில் 
சருகாய் போன
எந்தன் பிஞ்சின் வலியை
சீர்தூக்கி பார்க்க
திறன் அற்றுப் போனோ
ம்.. 


அன்புடன்
ரேவா