உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 17 ஜனவரி, 2017

இருக்கை அற்ற பயணத்தின் தூரம்


இங்கிருந்து கிளம்புவதாகச் சொல்கின்ற கையசைப்பு
காட்டிக் கொடுக்கும் நிமிடங்களின்
ஆயுள் ரேகை
நெடுஞ்சாலைப் பிரிவின் அறிவிப்பு பலகையாய்

நின்று நிதானிக்கும் நேரம்
இரைச்சல் இழுத்தோடும் மெளனத்தின்
சுங்கவரி
அனுமதித்தலின் தொலைவில்
வேகம் கூட்ட

காற்று கலைப்பதாய் இழுத்து மூடும்
கண்ணாடி ஜன்னலின்
கறை
கையசைத்தபடியே தொடர்கிறது
பயணத்தை

(painting : Lore Mancia)

-ரேவா


0 கருத்துகள்: