உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
கவிதை மாதிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை மாதிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 பிப்ரவரி, 2012

தொலைக்கப்பட்டவைகள் சில....



ஒரு இரயில்
பயணத்தின் போது
வந்தமறும் எல்லாரையும்
மெல்லிய புன்னைகையில்
கடக்கின்றேன்...

என் புன்னகையில்
உயிர் இல்லை
என்றாலும்,
பதில் புன்னகை
என் உள்ளம் தொடுக்கின்றது..

அருகில் இருக்கும்
எல்லாரையும்
அலட்சியப்பார்வை ஒன்றை
வீசி,
பேசுவதறக்கான தொடர்பை
துண்டிக்கிறேன்..

எதையோ மறைக்க நினைத்து
புத்தகத்தில்
புதையுண்ட கண்கள்
எதிர் வரிசை
குழந்தையின் அசைவுகளை
அளவெடுக்கிறது..

சிரிப்பதும், அழுவதும்,
கண்களை கசக்குவதுமாய்
அதன் அழகில்
என் பயணம் நீள
நீண்ட பெருமூச்சில்
தவறவிட்ட குழந்தைதனம்
என்னை பார்த்து சிரிக்கின்றது
இது தானே நீ
என்று,

சில நேரங்களில்
மறந்தே தான் போகிறோம்,
நிமிடத்தில் முடிந்துபோகின்ற
பயணத்தில்,
தொலைத்து போன
நம் குழந்தைதனங்களையும்,
எல்லாரையும் சமமாய்
பார்க்கின்ற மனதையும்
தொலைத்து விட்டு
மறத்தே தான் வாழ்கின்றோம்...

வெள்ளி, 27 ஜனவரி, 2012

தனியாக நான்...


தனிமையில் இருந்தேன்
தவம் என்ன புரிந்தேன்,
இருக்கின்ற இடத்தில்
என் சுயத்தோடு கிடந்தேன்...

இருளின் மடியிலும்
பயமற்று திரிந்தேன்..
எனக்கென்ற விருப்பென்று
புரியாமல் சுழன்றேன்..

சொந்தமென்று வந்தாய்..
என் சுயத்தை 
தொலைக்கச்செய்தாய் 

கட்டுபாடுகளுக்கும்,
கட்டளைகளுக்கும்
கட்டுப்படசெய்தாய்..

அன்பென்று எண்ணி
அடங்கினேன் அன்றி 
அடக்கிலேன்,

என் ஒவ்வொரு நிகழ்வுக்கும்
வர்ணனைகள் படைத்தாய்..
வகைவகையாய் அன்பு செய்தாலும்
வக்கிலை என்று 
வசைமாலை சூடினாய் ..

நான் நானாக இருக்க
எண்ணி
இன்று நான் எதுவாகவுமின்றி 
இதுவாக இருக்கிறேன்...

சொல்லத்தெரியா வலி
வந்து,
தொண்டையில் சிக்கிய
முள்ளாய் உறுத்த,
புரியாத அன்புக்கு அருகில் 
இருந்து பயனிலை 
என்று 
விட்டு பிரிகின்றேன் உன்னை...

என் சுயம் தொலைக்க 
விரும்பாத நான்
மீண்டும் 
தனிமையை துணைக்கு அழைக்கின்றேன்...

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

மீண்டும் ஓர் மழைநாளில்

படம் : நன்றி கூகிள்

கசங்கிய ரேகைகளுக்குப் பின்
களவு போன என் வாழ்க்கை,
இன்னொரு ஆணிடம் 
கவனமாய் இருக்கச் சொல்கிறது...

மீண்டும்
முதலில் இருந்து தொடக்கமா?
என்று நினைக்கையில்
தொண்டைக்குழியில் ஈரம்
விஷமாய் கசக்கிறது...

சலனமே இல்லாமல்
நடக்கும் ஒவ்வொரு
பெண்பார்க்கும்  படலத்திலும்,
ஏளனப் பார்வைக்கு மத்தியில்
உடலெங்கும் உணர்ச்சி தீ 
கட்டுக் கடங்காமல் எரிகிறது..

சில நேரங்களில் மனுஷி
என்ற அடையாளம் எதுவும்
இன்றி மனிதப் பார்வைகளுக்கு 
நடுவே தொலைந்து போகிறேன் நான்....
எனக்கென்ற தனி அடையாளம்
எதுவுமற்று மௌனிக்கச் சொல்கிறது 
சுற்றியுள்ள கூட்டம்...

தனக்குப் பிடித்தவைகளை
பட்டியல் இட்டு,
பட்டியலின் கடைசியில்
என் பெயரையும் எழுதிச் செல்கிறது
ஆணைப் பெற்ற கூட்டம்..

வந்தவர் செல்ல,
ஒப்பனைகள் களைய
கண்ணாடியின் காட்சியும் 
எனைப் பார்த்து சிரிக்கிறது....

இன்னும் ஒருமுறை
இயலாமை எனும் முடிச்சி
ரகசியமாய் அவிழ்க்கப்படுகிறது..
அப்பாவின் பென்சன் பணத்தின் பாதியிலும்,
அண்ணனின் அலுவலக லோனின் மீதியிலும்,
எடை போடப்படுகிறது
என் வாழ்க்கை...

இல்லை எனும் வார்த்தை
மீண்டும் ஒரு முறை தன் 
கோரமுகம் காட்டி
என்னைப் பார்த்து சிரிக்கிறது..

மீண்டும் மீண்டும் எழுதப்பட்டு
அழிக்கப்படும் இந்த
பழையகதையில், புதிய கதைக்கு
இடம் இருக்கா? இல்லையா? என்று
என்று ஜோதிடம் பார்த்தே
கசங்கிப் போகிறது என் ரேகை...

இறுதியில் ராசியற்றவள்
என்ற முத்திரைகுத்தி
தன் இயலாமைக்கு முகத்திரை
சூடிக்கொள்கிறது சொந்தம்...

இளமையின் ரணம் கணக்க,
இந்த இளமையை சபிக்கிறேன்..
கனவில் மட்டுமே காதல் பேசும்
அந்த ஆண்மையைச் சபிக்கிறேன்...

மீண்டும் ஒரு மழைநாளில்,
தேநீர்க் குவளைக்கு மத்தியில்
அடுக்கப்படுகிறது என் வாழ்க்கை
புதியக் கதை ஒன்று எழுத....

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

மாத்தி மாத்தி யோசிப்பவன்...(ஓட்ட வடை ...)


* இலங்கையை மையமாய்
கொண்ட காளை இவன்...
31 , டிசம்பர் வெள்ளி
அன்று பதிவுலகத்திற்கு
கிடைத்திட்ட
வெள்ளி இவன்...(ஹ ஹ )

* யாழ்ப்பாணத் தமிழ் முதல்,
சென்னை சேரித் தமிழ்
வரை,
அவர் அவர்க்கு
ஏற்றவாறு
அழகு தமிழில்
பதிவு படைக்கும்
பிதாமகன்... (ஹ ஹ)

* சீரியலில் பெண்கள்
கூட்டம்
மூழ்குமென்றால்,
நாதஸ்வரத்தில்
மூழ்கி (முத்தெடுக்க துடிக்கும்)முத்தெடுக்கும்
மன்னன் இவன்....

* கவிதையும் படைப்பான்,
கிழவியையும் நகைக்க வைப்பான்..
தொன்மம், படிமம்
என்று விளக்கமும் அளிப்பான்...

* தலைஎழுத்தை எழுபவன்
பிரம்மன் என்றால்,
சுவாரஸ்ய தலைப்பு
போடுவதில் பிரம்மன் இவன்.. (ஹி ஹி )

* கனவுலகில் மிதக்கும்
இளைஞர்களின் (கலைஞர்)
கனவில் வரும்,
நமிதாவின் செல்ல
கள்வன் இவன்..(நோ நோ அழக் கூடாது )

* பிரஞ்சுப் பெண்களின்
தூக்கத்தை கவிதையால்
துகிலுரித்த அழகிய துன்பம்
இவன் (சும்மா லுலு லாய்க்கு)..

* ஓட்ட வடையிலே,
பதிவுலகை தன் பக்கம்
திரும்ப வைப்பவன்...
மாற்றம் வேண்டி
மாத்தி மாத்தி
யோசிப்பவன்...

* இவனிடம் சொல்ல
விஷயங்கள் இருக்கும்,
ஆனாலும்,
மாற்றங்கள் இவன்
பதிவிலே இருக்கும்..

* மொத்தத்தில்,
கனவுலகில் (தமிழகம் ) கால்பதிக்க
ஆசைப்பட்டு,
வலைவுலகில்
எங்களில் ஒருவராய் சங்கமித்த
எங்கள் அன்பு நண்பன்
இவன்....





இறுதியாய் நட்புக்கு ஒரு பாடல் : உன் தலை முடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே....(சும்மா உங்க சேந்துட்டோம்ல, அதான் தானா வருது...)

( நண்பா நீ தானே அன்னைக்கு எங்கள பத்தியும் கவிதை எழுதுங்க ரேவா னு சொன்னேங்க, ஹ ஹ அதன் இந்த கொலைவெறி... தவறாய் எடுத்துக் கொள்ள மாட்டாய் என்ற நம்பிக்கையில் இந்த பதிவு உனக்காய்... தவறெனில் மன்னிக்கவும்  ....)

(யாருப்பா அங்க, இங்க கூட என்டர் அஹ  எடுத்து விட்டா மடல் மாதிரி தான் இருக்கும்.. இது கவிதைய எடுத்தாலும் சரி..இல்லை மடலா எடுத்தாலும் சரி.. மொத்தத்துல இந்த பதிவு ரஜீவன் காக சொல்லிபுட்டேன்...)



அன்புடன் 
ரேவா 



திங்கள், 4 ஏப்ரல், 2011

மீண்டும் மீண்டும் நீ !!!!



* முதல் முதலாய்
நீயும் நானும்
பார்வைகளால்,
அறிமுகவுரை எழுதிய
இடத்திலே,
பிரிவுரை எழுத ஆயத்தமானோம்...

* ஆம்,
உன்னுள் எழுதப்படா
சட்டங்களுக்கும்,
அந்த
சட்டங்களுக்குள்,
என் உறவை விட்டு வரச் சொல்லி 
எனை சிறைபிடித்த
உன் ஆளுமைக்காய், 
பிரிந்து விடுவதென்று
நானும்....

* என் அன்பும்
என் நேசிப்பும்,
என் அருகாமையும்,
உன்
நேச உறவுகளின்
பாசத்தை தடுப்பதாய்
உன் குடும்பம்  கூறியதாய்
நீயும் ... 

* பிரிந்து விடுவோம் என்று
சேர்ந்து தான்
முடிவெடுத்தோம்...

* நாம் சொல்லியவேளையும் வந்தது..
உன் நினைவாய்
என்னிடம் இருந்த
உன் புகைப் படமும்,
நீ காதல் சொல்லி அனுப்பிய
குறுந்தகவலும்
அழித்தாகி விட்டது.... 

* இனி
எந்த ஜென்மத்திலும்
பார்க்க கூடாதென்ற
ஒப்பந்தத்தோடும்,
நமை தொடர்பு படுத்திய
அனைத்து தொடர்பையும்
அழித்து விட்டு,
ஒப்பனைகள் அற்ற
காதலோடு கலைந்துவிட்டது
நம் உறவு...

* உன்னை எப்படியும்
மறந்து விடுவேன் என்று
மனதில்
நினைத்து நினைத்தே
நாட்களை விரட்டிக்கொண்டிருக்க..., 
 
* உன் நினைவு தரும்
எந்த பொருளையும்
நெருங்கக் கூடாதென்று
நித்தமும் எண்ணுகின்றேன்...

* உன்னை மறத்தல்,
அத்தனை கொடிய விஷமில்லை
என்று 
நட்பிடம்
நடித்துக் கொள்கிறேன்... 

* ஆனாலும்,
உனக்கு பிடித்த
எந்தன் சிரிப்பும்,
நடக்கையில்
நீ பிடித்திழுக்கும்
எந்தன் கூந்தலும்...
நமை சேர்த்து வைத்த
அந்த ஒற்றை மரமும்மாக
 ஏதாவது ஒன்று 
நித்தம் நித்தம்
உன்னை நினைக்கச் சொல்லி
யுத்தம் செய்கிறது...

* தோற்று விடுவேன்
என்ற பயத்தில்,
உன் நினைவைத் தவிர்த்து
எனை தேற்றிக் கொண்டிருக்கையில்,
தோற்க்கடிக்க வருகிறது,
உன் அழைப்பு....

* எனையறியாமல்,
கண்ணீர்துளிகள்
என் மௌனம் கலைக்க,
கைபேசி வழியே
மீண்டும் ஒரு
காதல் போர் ஆரம்பம்...

அன்புடன்
ரேவா  

வியாழன், 24 பிப்ரவரி, 2011

முத்தத்தை கேட்டால் என்ன தருவாய்..



காதலன் : கன்னி உன் காதல் பரிசாய்
முத்தம் கேட்டால்
என்ன தருவாய்...

காதலி: என் ஒட்டு  மொத்த அன்பையும்
ஒன்றாய் திரட்டி உன்
உயிர் வாங்கும்
ஒற்றை முத்தத்தை
இன்றே தருவேன்...
பதிலுக்கு
நீ என்ன தருவாய்...

காதலன்: என்னை கொடுத்தபின்
என்னில் தருவதற்கு
ஒன்றும் இல்லையடி..
இருந்தாலும் நீ
கொடுக்கும் முத்தத்தை
எல்லாம் எடுத்துக்கொண்டு
வெறும் சத்தத்தை 
மட்டும்
எனக்கு தரும் உன்
கைபேசியே
என் காதல் பரிசாய் 
வேண்டுமென்பேன்...  
தருவாயா?......!!!!!!!


முந்தய பதிவு : என் காதல் வாழ்த்து அட்டையில்

அன்புடன்
ரேவா