அவளைப்போலவே
நீங்களும் வரைந்திருக்கலாம்
உங்களின் எண்ணங்களிற்கான
ஒரு வட்டத்தை...
இதுவரை
அவள் வரைந்துகொண்ட
அவளின் கட்டுப்பாடுகளைக் குறித்த
கவலையோ
அதிலிருந்து மீளவேண்டுமென்ற
தவிப்போ
தோன்றவேயில்லை
அவளுக்கு
மேலும்
மேலும்
அவளை நெருங்கும் யாரும்
அவளை நெருங்காதிருக்க
கட்டுப்பாடுகளின் வட்டத்தை
நெருக்கிக்கொண்டே இருக்கிறாள்
உங்கள் எண்ணங்களை
பற்றியோ
இது அடிமைத்தனமென்று
நீங்கள்
குறிப்பதை குறித்தோ
எந்த கவலையுமில்லை
அவளுக்கு
என்றேனும் ஒரு நாள்
அவளை சரியாய் படிப்பதன்
பொருட்டு
தளர்த்தப்படலாம்
அவளின் கட்டுப்பாடுகளின் வட்டம்
உங்களுக்காய்
இதை உணர்ந்த தருணம்
உங்களுக்காய் மட்டுமென
ஒரு வட்டத்தை
வரைந்திருப்பாள்
நீங்கள் அறிந்திறாதபடி..
தொலைதலின் பொருட்டு
மகிழ்ச்சி கொண்டால்
# இதுவும் காதலே.......
அழுதலின் நிமித்தம்
ஆனந்தமடைந்தால்
# இதுவும் காதலே...
வாசல் வரை வந்துவிட்டு
வானம் பார்த்து
சிரித்துவைத்தால்
# இதுவும் காதலே......
சின்ன சின்ன சிரிப்பிற்கும்
சிறைபடுத்தமுடியா
பொருள் கொண்டால்
# இதுவும் காதலே...
தூக்கத்திலும் வார்த்தை தேடி
அலையும்
அற்புதக்கலையை
அறிந்திருந்தாயாயின்
# இதுவும் காதலே.....
இது இப்படியே இருந்துவிடப்போவதில்லை
என்ற கேள்விக்கு பின் தான்
நீ எங்கோ ஒளிந்திருக்கிறாய்
சிறு பேச்சின் நடுவில்
கவனமீர்க்கிறாய்
கலையாதிருக்க வார்த்தை கோர்க்கிறாய்
ஊருக்கு பதில் சொல்லி
உள்ளுக்குள் புதிர்வைக்கிறாய்
அவிழ்க்க முடியா முடிச்சொன்றிட்டு
பரிசெனத் தருகிறாய்
அவ்வளவு கடினமான முடிச்சாய்
அதுயில்லாது போனாலும்
அவிழ்ப்பது கொஞ்சம்
கடினமாதென்பது முயன்றலில்
கிடைத்திட்ட பலன்...
எல்லோரும் வருகின்றனர்
இதனோடு போட்டியிட
இறுதியில் எல்லோருக்குள்ளும்
முடிச்சிட்டுக்கொண்டது
இது..
பலவிதமான முயன்றுபார்த்தல்
பலனில்லை
பதிலில்லை
இதனிடம்..
தோல்வியை மறுக்க
இதை
அறுத்துப்போடுவதென்று
நினைத்திட்ட வேளையில்
அவிழ்க்கப்பட்டது
இவ்முடிச்சு....
பல அபிப்ராய முடிச்சுகள்
உங்களுக்கு இருக்கலாம்
அவிழ்க்கப்பட்ட அதற்கு
காலமென்ற பதிலிருப்பதையும்
அறிந்தபடி...
இறுகிக் கிடக்கிறது
அம்முடிச்சு....
என்னை கடந்த ஓராயிரம்
கேள்விகளைத்தான்
நீயும் கேட்கிறாய்
இக்கேள்விக்கான பதிலென்று
என்னிடம் எதுவுமில்லை என்பதை
அறிந்தும்...
ஒரு நேசத்தை மறுதலித்தலில்
உண்டாகும் வலி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை..
ஆகப் பெரும் மகிழ்வின் பின்
ஆனந்தக்கூத்தாடவோ
ஒரு தோல்வியின் பொருட்டு
மண்டியிட்டு அழவோ
எனக்கென்று எதுவுமேயில்லை
என்னைத்தவிர...
உள்ளத்தை
எரித்து வாழும் வாழ்க்கையில்
எனக்கு உடன்பாடுயில்லை என்பதை
உள்ளதைச்சொல்வதால் அறிக...
எப்படியும் இதை முகம்பொருத்துப்பார்க்கும்
இவ் ஓராயிரம் முகங்களுக்கும்
சொல்கின்றேன்
என்னை கடந்த ஓராயிரம்
கேள்விகளைத்தான்
நீங்களும் கேட்கின்றீர்
இக்கேள்விக்கான பதிலென்று
என்னிடம் எதுவுமில்லை என்பதை
அறிந்தும்...
உன் முதல் பார்வை
முழுதாய் தொலைத்தது என்னை..
என்னை முழுவதும் படி
இல்லை முடித்ததைப்போல் நடி
காதோடு காதுரசி காதல் மொழி பேசு,
செல்லச்சண்டையில் சித்திரவதை செய்
ஒரு முத்தத்தால் முழுமையாக்கு
என் முந்தானைக்குள் மூழ்கிப்போ
காதல் பேசு
காமம் தாண்டு
இதயம் நுழை...
மெளனம் கொண்டு என் வார்த்தை உடை
உனக்கானவள் நான் என்ற
உண்மையை உணர்
ஊர் உறங்கும் வரை கதை பேசு
நான் உறங்கிப்போக காதல் கொடு
அவ்வப்போது கண்களால் களவாடு
செல்லப்பெயரிட்டு சில்மிஷம் செய்
உன் பார்வை தெளித்து
காதல் கோலமிடு
சாத்தியப்படுகையில் சத்தம்போடு
சத்தத்தின் நடுவே நிசப்தம் தேடு
கண்களால் பேசு
மழைச்சாரலாய் மேனி நனை
அன்பை பரவவிட்டு
காதலை பரவசமாக்கு
காமம் களைந்து காதல் போர்த்து
உன் விழிகள் விதைத்துப்போட்ட
விதையில் துளிர்த்துகொண்டிருக்கும்
இந்த காதலுக்கு
செல்லபெயரிட்டு அன்புசெய்
இதுபோதுமெனக்கு...........
- ரேவா
வாசித்தல் பழக்கம்
நேசித்தலின் பொருட்டு
வந்ததா என்று தெரியவில்லை
ஆனாலும் நேசிக்கிறேன்
இந்த வாசித்தலை.........
# இதுவும் காதலே...
குறுகுறுக்கும் பார்வைதனில்
ஒளிந்திருக்கும் குறும்புதனை
ரசிக்கத்தெரிந்தவனே
காதலிக்கிறான்..
# இதுவும் காதலே...
அடைப்புக்குள் வைக்கப்பட்ட
அத்தனையையும் கடந்து
என்னை பித்தனாக்கும்
இந்த உணர்வுக்கு
என்ன பெயர்...
# இதுவும் காதலே...
ஒரு தோல்வி
உன்னை தூக்கி நிறுத்த
அனுமதித்தால்
இதுவும் காதலே.......
எது எதுவோ
நம்மைத்தாக்க
எதன் பொருட்டோ
நாம் நம்மை தொலைக்க
முகவரியிடம் கள(ல)வு போனால்
# இதுவும் காதலே
உள்ளதைச்சொல்வதில் தொடங்கி
உளறிக்கொட்டுவதில்
ஆரம்பமாகிறது
உன் குறும்புத்தனங்கள்...
# அழகியல் விளையாட்டு......
ஆர்பரிக்கிறாய்
என்னில்,
ஆழம் பார்க்கிறாய்
கண்ணில்...
# அழகியல் விளையாட்டு....
என் கவிதைக்கான அர்த்தம்
புரிந்ததாய் நடிக்கும் வேளையில்
தான் ஆரம்பமாகும்
நம் அத்தனை சண்டைகளும்....
# அழகியல் விளையாட்டு..........
விரும்பிக்கேட்கின்ற
அத்தனை பாடலிலும்
அடர்ந்து படர்வதென்னவோ
உன் நினைவு மட்டும் தான்......
# அழகியல் விளையாட்டு......
ஆயிரம் ஒப்பனையிட்டு
ஒப்புக்காய் கொஞ்சம்
ஒப்பனை சேர்த்து
பவனிவரும் என் வரிகளை
ஒரே மடக்கில் விழுங்கிவிடுகிறது
உன் புன்னகை......
# அழகியல் விளையாட்டு....
இறக்கை விரித்து பறக்கச்சொல்லும்
உன்னிடத்தில் தான்
ஒளிந்துகொள்வதின்
சுகம் கிடைக்கிறது..
# அழகியல் விளையாட்டு.
உன்னிடம் தவறில்லாமல்
எப்படி பேசுவது
என்று யோசிக்கும் போதே
ஏதோ ஒரு தவறு நிகழ்ந்தேறிவிடுகிறது..
# அழகியல் விளையாட்டு...
கொட்டிக்கிடக்கின்ற
உன் குறும்புதனை
ஒவ்வொன்றாய் கோர்த்தாகிவிட்டது
கிடைத்ததென்னவோ
இந்த கவிதைகளும்,
அதற்கீடான
காதலும் தான்.....
# அழகியல் விளையாட்டு...
கடுச்சூடுதான் ஆயினும்
இவ்வடர் வனத்தில்
வெந்து தணிவதை விட
வா அன்புச்சண்டையிட்டு சாகலாம்..
# அழகியல் விளையாட்டு....
.