கூட அடிக்கடி இடம்மாறுகிறது...
♥ உன்னைக் காணும் போதெல்லாம்
தனிமையிலோ உணர்கிறேன்,
காதலாய்
*********
அன்புடன்
♥ ♥ ரேவா ♥ ♥
* நேற்றைய பொழுதுகள் மகிழ்வாக,
இன்றைய பொழுது சுகமாக,
நாளைய பொழுது வளமாக,
நீ மகிழ்ச்சியின் மடியில்
தவழ்ந்திட
உன் இனிய பிறந்தநாளில்
வாழ்த்துகிறேன்...
* என் இனி(ணை)ய நட்பே..
உன்னைப்பற்றி சின்ன கவி
நீ கேட்க
என் செல்ல கவிதை உன்னைப்பற்றி
என்னசொல்ல இக்கவியில்..
* இதயம் இல்லா இயந்திரத்தில்
இணையம் மூலம் நான்
கண்டெடுத்த நல் இதயம்
கொண்ட உன்னைப் பற்றி சொல்லவா?
* இல்லை
முகவரி தெரியா என் கவிதையை
என் தோல்வியாய் நீ நினைத்து
எனக்காய்
பிரம்மனிடம்
சண்டையிட்ட உன் அன்பை
பற்றி சொல்லவா ?
* எதைச்சொல்ல இந்நாளில்,
கரைசேரா என் கவலைகளில்
நான் மிதக்க என்னை கரைசேற்ற
என் நட்பே...
* என் தாய்க்கு இணையாய்
நீ தரும் நட்பின் அன்புக்கு,
ஒரு தோழியாக இந்த கவிதையையே
கொடுக்க முடிகிறது உன் பிறந்த நாள் பரிசாக...
* என் புது மலரே,
மாறாத புன்னகை கொண்டு
நீ பூத்திடவே
இந்த தோழியின் விருப்பம்,
நல் இயற்கையும் அதற்கு உதவும்..
* என் உயிர் நண்பா நீ இன்று
உதித்தநாளில் ,
நல் மாற்றம் ஒன்று உன்னை
தேடிவர மாறாத என் நட்பு கொண்டு
வேண்டுகிறேன்...
* நட்பால் என் உயிர் நுழைந்து
இன்று அதே நட்பால்
என் நண்பானாய்
என் உயிரில் வாழ்கின்ற
என் இனிய நண்பனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
* குறைவற்ற உன் குணத்தோடும்,
குறையாத உன் பண்போடும்,
குறையில்லா புகலோடும்,
குறைவில்லாமல் நீ வாழ்த்திட
வேண்டுகின்றேன்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா...
happy birthday
muras
( இந்த ஸ்வீட் அஹ எடுத்துக்கிட்டு என் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு போங்க நண்பர்களே...)
அன்புடன்
ரேவா
♥ உன்னை பிரதி பலிக்கும்
கண்ணாடி நானே ..
நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்..
நீ அழுதால் நானும் அழுவேன்...
♥ என்னை
அன்போடு பார்த்தால்
அன்பைத்தருவேன்...
♥ நட்போடு பார்த்தால்
நட்பைத் தருவேன்...
♥ கோபம் கொண்டு பார்த்தால்
கோவத்தை தருவேன்
♥ சூழ்நிலையின் கையில்,
தோழமையாய் இருப்பேன்...
சூழ்ச்சியின் கையில்,
சுடும் நெருப்பாய் தக்கிப்பேன்..
♥ (மனதிற்கு) மாறுதல் வேண்டின்
மாற்றங்கள் தருவேன்...
மீறுதல் என்றால் மண்டியிட்டும்
அழுவேன்....சில மீறுதலை
மண்கொண்டும் புதைப்பேன்..
♥ இறுதியாய்
குட்டிக் குழந்தையின்
பொம்மையும் நானே..
குழந்தையாய் எனை
நினைத்தால்
குத்திக் கிழிக்கும் கத்தியும் நானே..
♥ உன்னை பிரதி பலிக்கும்
கண்ணாடி நானே..
நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்..
நீ அழுதால் நானும் அழுவேன்...
இப்படிக்கு
உன் இதயம்
அன்புடன்
♥♥ ரேவா ♥♥
* ரவிவர்மன் ஓவியம் போல்
என் மனதில் நான் வரைந்த
கற்பனைக் காவியமே...
கண்ணிறைந்த காதலனே...
* காலங்கள் கரைந்தோட,
கனவுகளும் எனையாள,-என்
கற்பனை நாயகனே,
என் காத்திருக்க வைப்பதேனோ?...
* அன்னையாக வருவாயோ?
எனையாளும் தந்தையாக வருவாயோ?
தோள்கொடுத்து அரவணைக்கும்
தோழனாக வருவாயோ?
மாயங்கள் தான் புரிந்து,
என் வாழ்வில் மாற்றங்கள் தருவாயோ?
மருமகனாய் வந்து
மகனாகிப் போவாயா?
இல்லை,
இருக்கின்ற கூட்டத்தில்
நீயும் ஒன்றாகிப் போவாயோ?
என் கற்பனை வாழ்விற்க்கு
தூரிகையாய் இருப்பாயா?
இல்லை,
துயர்கொண்டு நிறைக்கும்
துன்பமாய் போவாயோ?...
தூங்காமல் நான் சேர்த்துவைத்த
இரவெல்லாம்
காதல் கொண்டு நிறைப்பாயா?
இல்லை,
தூக்கத்தை தூக்கிலேற்றி
துயர் கொண்டு நிறைப்பாயோ?
இதுவரை வாழ்ந்த வாழ்க்கை
வீணென்று சொல்வாயா?
இல்லை,
உனைப் பார்க்காமல் இருந்திருந்த
காலமே மேல்
என்று சொல்வாயோ?
நம் குடும்பத்தின்
வேராய் அன்போடு படர்வாயா?
இல்லை,
உன் குடும்பம் வேறு,
நம் குடும்பம் வேறு என்று
வேறு வேறாய்ப் பிரிப்பாயோ?
எனக்கென்ற என் திறமைதனை
தட்டிகொடுத்து வளர்ப்பாயா?
இல்லை,
தனித் திறமை என்பதெல்லாம்
தனக்கு ஒத்துவாராதென்று,
தார்மீக தடைதனை
விதிப்பாயோ?
சண்டைகள் வரும்போதெல்லாம்
சமாதனம் செய்வாயா?
இல்லை,
" சனியன் " வந்த வேளையென,
தாய்வீடு அனுப்புவாயோ?
அந்திநேரம் என் மடிசாய்ந்து
உன் அலுவலக கதைதனைச்
சொல்வாயா?
இல்லை,
ஆண்மகன் நானென்று
ஆணாதிக்கம்
புரிவாயோ?
எது எப்படியோ ...
முகம் தெரியா என் காதல்
கணவனே...
வருகின்ற காலத்தில்,
காதலோடு நானிருப்பேன்...
உனக்கொரு துயர் என்றால்
என் உயிர்க்கொண்டு
உன் துயர் துடைப்பேன்...
உன் தாரமாக இல்லாமல்
உனக்கொரு தாயாக நானிருப்பேன்..
என் அன்னைக்கு மேல்
இவள் என்ற பெயர் எடுப்பேன்...
காதல் கொண்டே
நம் காலம் முடிப்பேன்..
ரவிவர்மன் ஓவியம் போல்
என் மனதில் நான் வரைந்துவைத்த
கற்பனைக் காவியமே...
கண்ணிறைந்த காதலனே..
முகம் தெரியா தூயவனே
உனக்கே தான் இக்கவிதை..
உனக்கே தான் இக்கவிதை..
காத்திருக்கு காதலோடு...
அன்புடன்
ரேவா
* வானம் போர்த்திய
பூமிக்குள்..
பலகோடி
சாயம் பூசிய போலி
முகங்கள்....
* முகவரி தந்த தாயிடம் கடிந்து கொண்டு ,
முகவரி இல்லா இணைய
நட்பிடம் சிரித்து சிரித்து
பேசும் சில முகங்கள்..
* தங்கையின் வேண்டுகோளை
நிராகரித்து, எதிர்வீட்டு நங்கைக்காய்
காத்துகிடக்கும் சில முகங்கள்..
* நலம் விசாரிப்பதாய் தொடங்கி
நண்பனின் சட்டைப்பையில்
ஒளிந்து கிடக்கும் சில முகங்கள்..
* உள்ளொன்று வைத்து,
புறம்தனில் இனிக்க இனிக்க
பேசி கழுத்தறுக்கும்
சில முகங்கள்...
* பிறர் உணர்வுகளை புரியாமல்,
உள்ளம் கொள்ளும் சில முகங்கள்
* காதலை வகைப்படுத்தி,
நாகரிகப்பெயர்சொல்லி
இளமையை தொலைக்கும்
சிலமுகங்கள்...
* விடியலில் கட்டிய மனைவியிடம்
கர்ஜனை செய்து விட்டு,
பெட்டிப் பாம்பைப் போல்
பிறர் பேச்சுக்குள் அடங்கிப் போகும்
சில முகங்கள்...
* சிரிக்க மறந்து, சிந்திக்க மறந்து
பிறர் உணர்வு மறந்து
தன் சுயம் எதுவென்று
அறியாத சில முகங்கள்
* சுற்றியுள்ள சமூகம்
வித விதமாய் நமைமாற்ற
நம் சுயம் மாறவும் முடியாமல்,
மீளவும் முடியாமல்,
போட்ட சாயத்தில் ஒன்றிப்போன
முகங்கள்
* வெளியில் ஒரு முகம்,
வீட்டில் ஒரு முகம்மென,
மாறிமாறி,
தன் முகம்
எதுவென தானே அறியாமல்
தன் முகவரி தானே
தொலைத்த முகங்கள்...
* வானம் போர்த்திய
பூமிக்குள்..
பலகோடி
சாயம் பூசிய போலி
முகங்கள்....
அன்புடன்
ரேவா
* கனவுகள் கொன்றுதின்ன,
கடமைகள் கொஞ்சம் தின்ன,
நிகழ்வுகளில் கனவுகளை,
சாத்தியமாக்கப் போராடும்
வாழ்வில், கடந்த கால
என் கல்லூரி வாழ்வைத்
திரும்பப் பார்க்கிறேன்....
* மாயங்கள் நிறைந்த
உலகில் அன்பில் மையல்
கொண்டு, ஆனந்தமாய்
நட்போடு பவனிவந்த
* குறும்புகள் உடன்கொண்டு
குழந்தையாய் கல்லூரியை
சுற்றிவந்து,
பலர்கவனம் கவர்ந்த
முத்தான காலமது...
* ஆணென்றும் பெண்ணென்றும்,
வரையறைகள் வைக்காமல்,
எம் வையத்து வாழ்நாளில்
மகிழ்ச்சியாய் இருந்த காலமது...
* சிறிய உணவு பாத்திரத்தில்,
பலர்கைகள் பதிந்து, நிறைவாக
உணவு உண்ட காலமது..
* சோதனைகள் தெரியாமல்,
வேதனைகள் அறியமால்,
நமைக் காக்கும் கவசமாய்
நட்பின் கருவறையில்
நிம்மதியாய் வாழ்த்த
மூன்றாண்டு காலமது...
* உடலாக, உயிராக
உதிரத்தில் ஒன்றாக,
துடிக்கின்ற இதயத்தில்
இருக்கின்ற அறையாக,
அணுஅணுவாய் எம்
அங்கம் கலந்த
அன்பு நட்போடு
அழகாக களித்த காலமது...
* முளைக்காத வாலெல்லாம்
முளைத்திட்ட நேரமது...
ஆசிரியர் போல் பலர்குரலில் பேசி
நட்பின் சிரிப்பின் மூலம்
கண்ணீர்த்துளியை
பரிசாக வாங்கிய காலமது...
* வெளியுலகம் அறியாமல்,
நயவஞ்சகம் புரியாமல்,
நான் எனதென்று இல்லாமல்
எல்லோரும் சரிசமமாய்
இருந்த்திட்ட காலமது...
* போட்டியில் பரிசுகள் தந்த
மகிழ்ச்சியைவிட
என் நட்புதந்த
ஆனந்தத்தை அனுபவித்த
காலமது...
* பிரசவவலி கண்ட தாய்ப்போல,
பிரிவின் வலி உணர்ந்தாலும்,
பிறக்கும் மாற்றத்தில்,
பிரிவின் ரணங்களோடும்,
எதிர்காலம் நமக்காய்
ஒளித்து வைத்திருக்கும்
சுவராஸ்யங்களை தேடி
பயணித்த கல்லூரி
இறுதி காலமது...
** இன்று,
முகவுரையும் மறந்துபோய்,
முகவரியும் தொலைந்துபோய்,
குரலொலியில் அடையாளம்தான் காண,
காலமென்னும் காந்தமது,
இழுத்த இழுவைக்கெல்லாம்
சுழன்று சுழன்று ஓடுகின்றோம்...
* மனைவியாக, கணவனாக,
குழந்த்தைக்கு பெற்றோராக,
முதுமைக்கு பிள்ளையாக,
வாங்கிய கடனுக்கு கடனாளியாக,
பொறுப்புகள் அதிகரிக்க,
நட்பு தரும் அன்பு மட்டும்
என்றும் அனாமத்து சொத்தாக
வாழ்க்கையெனும்
இறுதிநிலைக் குறிப்பை சமன் செய்கிறது...
* கனவுகள் கொன்றுதின்ன,
கடமைகள் கொஞ்சம் தின்ன,
நிகழ்வுகளில் கனவுகளை,
சாத்தியமாக்கப் போராடும்
வாழ்வில், கடந்த கால
என் கல்லூரி வாழ்வைத்
திரும்பப் பார்க்கிறேன்....
அன்புடன்
ரேவா
( நான் வணிகவியல் மாணவி அதான் சொத்து பொறுப்புன்னு கொஞ்சம் வறுத்திருப்பேன்...பொறுத்துக்கோங்க...)
* தாயிடம் இருந்து,
தனிமையில் நடைபழக
ஆயத்தமான அன்றே
என் கைபிடித்து
எனை அரவணைத்தவள்
நீ...
* இலக்கணமற்று
நாம் நட்பாய்
இணைந்திருந்த
வேலையில்லெல்லாம்,
அறியாத ஒன்றை
அறிகின்றேன் தோழி
நீ என்னோடு இல்லா
இந்நாளில்
.
* நட்பாய் தொடங்கி,
நடிப்பில் மாறி,
நம் உணர்ந்த காதலை
நாமே அறிவதற்குள்
நலம் விசாரித்தது நம் பிரிவு...
* கடலலை அறியாத
பிள்ளைப்போல்
நீயிருந்தும்
பொங்கிவரும்
என் காதலை கரைசேர்க்க
தெரியவில்லை
நீ இல்லா இந்நாளில்.....
* மரணத்தில் வாசல் ஒன்றை
மரணிக்கும் வரை
அறியாததுபோல்...
உன்னோடு இருக்கும் வரை
உணராத என் காதலை ...
உணர்கின்றேன் தோழி
நீ இல்லா இந்நாளில்...
* உன் நினைவின்றி
மௌனமாய் நான் இருந்தாலும்
உள்ளிருக்கும் இதயம்
உன் பெயரே சத்தமாய்
சொல்லக்கேட்டேன்...
நிசப்தமும் என் அமைதி
குழைக்ககண்டேன்...
நீ இன்றி நான் வாழ்தல்
சாத்தியமல்ல என்பதை
சத்தியமாய் நான் உணர்ந்தேன்
நீ இல்லா இன் நாளில்..
என் தோழி
நீ இல்லா இந்நாளில்,
நீ விரும்பிய என்
கவிதைக்குள் நான்
இருப்புக்கொள்ள,
இரவெது, பகலெது
அறியாமல் எழுதுகின்றேன்...
வெறும் கவிதையாகவே
என் காதல் இருந்துவிட
எண்ணுகிறேன்...
ஆம்...முடிந்து போன
என் காதல்
வெறும் கவிதையாகவே
இருந்துவிட எண்ணுகின்றேன்...
அன்புடன்
ரேவா