உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 11 மார்ச், 2011

கொஞ்சம் கொஞ்சம் காதல்



காதல் கவிதை 
அவளுக்கு பிடிக்காதாம்,
அதனால் என்ன 
என் கவிதைகளுக்கு
உன்னைத் தான் 
பிடித்திருக்கிறதாம்...
அதனால் தான் 
எதை எழுத 
முயன்றாலும் 
கடைசியில் காதலாகவே 
வந்து நிற்கிறது....

**************

எட்டாத தூரத்தில் 
நிலவு (நீ)
இருந்ததும்,
எட்டிவிட
நினைக்கிறது,
உன்னில் தொலைந்த 
என் மனது...

**************

ஒப்பனைகள் இட்டுக்கொள்ளாமல்
நீ வந்தாலும், 
என் கவிதைகள்,
உன் அழகை ஒப்பனைகளோடு
சொல்லி விடுகிறதே!!!!

*************
  

அழகாய் மலரும்
உன் இதழ் பூக்களில்,
தேனெடுக்க 
காத்திருக்கும் காதல்
தேனீ  நான்...

*********


மழைக்கு முன் 
வரும் வானவில் போல
உனக்கு முன்
என் காதல்...
நீ கொஞ்சம் வளைந்து 
கொடு
நம் காதல்
கொண்டு அழகாய் 
உன்னைப் போல்
அழகான
ஓவியம் 
தீட்டலாம்... 

**********

அன்புடன் 
பிரியத் தோழி 
ரேவா 


முந்தையக் கவிதை : தனிமையில் நம் காதல்


புதன், 9 மார்ச், 2011

தனிமையில் நம் காதல்....

* நீ இல்லா அறையில் 
தனிமையில் நம் காதல்...

*  உருவம் இல்லாமல்,
உள்ளம் அறியாமல்,
உணர்வால் உயிர் நுழைத்து,
அதே உணர்வால்,
உயிருக்குள் உயிராய்
இருந்து, நீ  என் உணர்வில்
கலந்தவளானாய்...

* இன்று,
பேச வார்த்தைகளற்று,
விழி முழுங்கும்
மோகப் பார்வைகளற்று,
கொண்டு குலாவி
மகிழ்ந்த இடங்களின்
சுவடுகள் அற்று,
தனிமையில்...
கண்ணியம் காக்கிறது
நம் காதல்....

* உன் கொஞ்சல்கள் நிறைந்த
பொழுதையும்,
என் கெஞ்சல்கள் நிறைத்த 
 நம் இரவையும், 
மென்று முழுங்கி
மௌனமாய் இருக்கிறது
நம் காதல்.....

* உன் சுவாசத்தின்
சூட்டிலே  நான் கருக்கொண்ட
நேரத்தையும்,
உச்சி முகர்ந்து
அன்பாய் நீ தந்த
இச்சை முத்தத்தையும் ,
எனக்காய் நீ
உருமாறிய நேரத்தையும்,
கண்முன்னே காட்சியாக்கிக் 
கொண்டிருக்கிறது,
நம் காதல்..

* நான் சொல்ல நினைத்த
சோகத்தையும்,
சேர்த்து வைத்த கண்ணீரையும்
கானல் ஆக்கி,
எனை உன்னிடம்
கரைசேர்த்தது
நம் காதல்...

* பணமென்றும், பகையென்றும்,
நட்பென்றும், நடிப்பென்றும்,
அன்பென்றும், ஆலகால விஷமென்றும்
பிறக்க முடியா பொருள்தனில்
உறவென்று வந்து,
என் வாழ்வில் பிரியாப் பொருள்
தந்த என் காதலே...

* முதுமை எனும்
இன்னொரு இளமை
வரும்வரை
என்னைத் தொடரும்
என் நிழலானவளே...  

* இந்த இளமை
நீ இல்லாத கடைசி நாட்களை
உன் நினைவின் சுகங்களோடு
கடத்திக் கொண்டிருக்க,
நம் காதல் மட்டும்?...

*  ஆம் நீ இல்லா அறையில்,
எனைவாட்டும் 
வெயிலும் குளிரும் 
பெரிதாய்ப் படவில்லை..
 நலம் விசாரிக்க 
யாரும் மற்று
நானும், நம் காதலும் 
தனிமையில்..கிடக்கையில்...


******************

அன்புடன் 
பிரியத் தோழி 
ரேவா   


திங்கள், 7 மார்ச், 2011

உனக்கான என் இருவரிக்கவிதைகள்..........

அழகான காதலுக்கு காதலன் கேள்விகளும் காதலியின் பதில்களும் கவிதையாக...இருவரியில்....
காதலோடு நாமும் அதை ரசிப்போமா!!!!!
இக் கவிதையை  எழுதத் தூண்டிய நட்புக்கு நன்றி....


காதலன் : காதல்

காதலி : நமக்குள்  பிறந்த
               நம் முதல் குழந்தை..
காதலன் : பிரிவு

காதலி : நம்  அன்பை நாம் உணரும்
      முதல் காதல் கால பாடம் ..

காதலன் : காத்திருத்தல்

காதலி :  என் காதல் கொண்ட

           பிரசவகால வேதனை 
காதலன் :  ம்ம்

காதலி : உன்னில் நான் உணர்ந்த
       இரு வரிக் கவிதை..

காதலன் : நிலா

காதலி : நம் நேச நினைவுகளின்.
காவல்காரன்..
காதலன் :  இரவு

காதலி : நம் தூக்கம் களவாடிய
              கொள்ளைக்காரன் 


காதலன் : தனிமை 

காதலி : நாம்  முடிக்க தவிக்கும்
     வனவாசம்..

காதலன் : நிழற்படம்

காதலி : தனிமையின் தணலில்
     தகிக்கும் என் மனதின் நிழற்குடை 
காதலன் :  மீசை 

காதலி : என்  காதல்
                                      ஓவியத்தின் தூரிகை 

காதலன் : தாவணி 

காதலி : என்னை வெட்க்க கொலை
செய்யும் குறும்புக்காரி
காதலன் :  முத்தம் 

காதலி : நம் உதடுகள் தேடும்
     காதல் முக(தல்)வரி...
காதலன் : கவிதை

காதலி :உன்னோடு
     நான் வாழும் நாட்கள்

காதலன் :  வெட்கம்

காதலி : உன் பார்வை ஆயுதத்தால்
               நான் பறிகொடுத்த என் இளமை ராஜ்ஜியம் 

காதலன் :  ப்ரியம்

காதலி :நம் உயிர் கொண்டு நிறைத்த
     நம் காதல் காலம்.. 
காதலன் :  ஊடல்

காதலி :  நாம் ஜெயிக்க நினைக்கும்
      செல்ல சாம்ராஜியம்
காதலன் :  இசை

காதலி : நான் தலைசாய்க்கும்
     மாலை நேர உன் மடி 
காதலன் :  கூடல்

காதலி : நமக்கான
              கவிதை பிறக்கும் இடம் 


காதலன் :  உன் அருகாமை

காதலி : என் வாழ்வின் 
              இரண்டாம் கருவறை..

*************************


பொறுமையாய் படித்த நட்புக்கு நன்றி... பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை திரட்டிகளில் பதிவு செய்து செல்லவும்...


அன்புடன் 
பிரியத் தோழி 
ரேவா  

சனி, 5 மார்ச், 2011

சொல்வதற்கு இனி ஒன்றுமில்லை...



* தெருவெல்லாம்  தோரணம்
தெருக்கூத்து நாடகம்,
சுவர் எல்லாம் கண்கவரும்
வண்ண வண்ண வாசகம்...
இங்கு,
சண்டையிட்டவன் கூட்டாளி,
சாட்சி சொல்பவன் பங்காளி,
வேடிக்கைப் பார்க்கும்
சாமானியனுக்கோ
சலுகை விலையிலே
சமாதி...

* ஊழல் சகதியை
சந்தனமாய் இட்டுக்கொண்டு,
சாகச வித்தை காட்டி,
ஒன்றுமாறியா பாமரனின்
உரிமையை காசுக்கு
விலைபேசி,
சலுகை காட்டி,
நமக்கு நாமே
போடும் வாய்க்கரிசி...

* மாற்றம் கண்டு கண்டு,
மானுடம் மாறிப் போக,
என்றேனும் மாறுதல்
வரும் எனக் காத்திருக்கும்
மனங்களுக்கோ,
தேர்தல் கால
பாசம் என்பது
கண்துடைப்பு...

* ஏறாத விலையெல்லாம்
ஏறிப்போக,
ஏதுமறியா என் பாமரனுக்கோ
 500 ரூபாயும், பிரியாணிப்
பொட்டலமே
உயிர் நாடி...

* சிந்திக்க  தெரியாத
மனித சடலங்கள் இதுவரை
பெற்ற சலுகை,
வீடில்லா ஏழைகளுக்கு வீடு..
பசித்த வயிறுக்கு உணவில்லாத
வேலையிலே,
ஒய்யார  பவனி வந்து
ஓரத்தில் முடங்கிப் போன
கேஸ் அடுப்பு....
வறுமைக் கோட்டில்
தன் வாழ்வை தொலைத்த
சகோதரிக்கோ
இலவச வண்ணத்தொலைக்காட்சி...
மின்சாரமே இல்லா
என் ஏழைச் சிறுவர்களுக்கோ
மடிகணினி...
இது எல்லாம் போக,
இறந்து போன
மனிதனுக்கும் ஓட்டுரிமை...

* ஆம் சொல்வதற்கு
ஒன்றும் இல்லை...
ஏப்ரல் 13
தேர்தல்...

* ஒத்திகைப் பார்த்தாயிற்று..
முகச் சாயமும்
போட்டாகி விட்டது..
தெருவெல்லாம் இனி
நாடகம்...
இனிக்க இனிக்க சலுகை
என்னும் பாசக் கையிற்றால்
சாமானியனின்
சுவாசம் நிறுத்தும் நாடகம்
ஆரம்பம்....   

* கண்ணால் பார்த்ததைக்
கொண்டு,
காதால் கேட்டதை
வைத்து,
தீர்க்கமாய் யோசித்து,
மாற்றம் என்னும் மையிட்டு,
தேர்தலை வரவேற்ப்போம்...
பொய்மைக்கு இடம் தராமல்,
உண்மையை வாழ வைப்போம்...

* காசுக்கு அடகு வைக்கும்
நம் உரிமையை,
சுய அறிவு கொண்டு
மீட்டெடுப்போம்...

* இதையும் தவறவிட்டால்,
சொல்வதற்கு
இனி ஒன்றுமில்லை.... 

* தெருவெல்லாம்  தோரணம்
தெருக்கூத்து நாடகம்,
சுவர் எல்லாம் கண்கவரும்
வண்ண வண்ண வாசகம்...
இங்கு,
சண்டையிட்டவன் கூட்டாளி,
சாட்சி சொல்பவன் பங்காளி,
வேடிக்கைப் பார்க்கும்
சாமானியனுக்கோ
சலுகை விலையிலே
சமாதி... 

அன்புடன் 
ரேவா

வியாழன், 3 மார்ச், 2011

இதுக்கு பேரு தான் விளம்பரமா?....



வணக்கம் மக்கா( சும்மா நம்ம பலமொழி பகலவன் கிட்ட இருந்து சுட்டது ஹி ஹி )...எல்லாரும் எப்படி இருக்கீங்க.. என்னடா இவ திடிருன்னு நலம் விசாரிக்கிரானு பாத்திங்களா... அட ஆமாங்க  கொஞ்ச நாளா  நாமா யாரும் நலமா இல்லையோனு எனக்கு ஒரு டவுட்.... நாமா நல்லாத் தானே இருக்கோம் இவ என்ன பதிவு போடணுமுன்னு நம்மள எல்லாம் சீக்காளியா ஆக்குரானு  நினைக்காதிங்க... உடல் ஆரோக்கியம் மட்டும் ஆரோக்கியம் இல்ல நம்ம சமூக ஆரோக்கியமும் நமக்கு அவசியம் தானே.... அதன் படி பாத்தா நம்ம சமூகம் ஆரோக்கியமா இல்ல.... அரசியல் தொடங்கி அன்றாட அரிசியியல் வரைக்கும் நம் ஆரோக்கியம் யாரோ ஒருத்தரால சுரண்ட படுறது உண்மை தானே....

சரி விசயத்துக்கு வரேன்... இன்னைக்கு உலகம் ரொம்ப அவசர உலகமா  போயிகிட்டு இருக்கு.... யாருக்கும் எதப் பத்தியும் சிந்திக்க நேரம் இல்ல... எது சரி எது  தப்புன்னு தீர்மானிக்க தெரியல... (ஹலோ இது டூ மச் அஹ இல்ல னு நீங்க சொல்லுறது எங்களுக்கும் கேக்குது)....

நம்ம உலகம் விளம்பர உலகமா போயிடுச்சு.... கொழந்த பொறப்புல இருந்து காதல்,  கல்யாணம், கல்யாணத்துக்கு தேவையான ஆடை அணிகலன் முகப் பூச்சு..என .நமா அன்றாடம் உபயோக்கிகிற அத்யாவிசயப் பொருள் எல்லாத்துக்கும் விளம்பரம்....இதுல அணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியான விளம்பரங்கள் நெறைய ,  இப்படி A TO Z எல்லாத்துக்கும் நமக்கு விளம்பரத்தோட துணை தேவையா இருக்கு....

டிரஸ் வாங்கனுமா அதுக்கு ஒரு விளம்பரம்...வீடுகட்ட தரமான சிமெண்ட் வேணுமா அதுக்கு ஒரு விளம்பரம்...விளம்பரம் விளம்பரம் விளம்பரம்..இந்த கொடுமை எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இருந்தாலும் இப்போ வருற விளம்பரம் இருக்கே ஐயோ..முடியல சாமி...
அது எப்டிங்க ஒரு பையன்  சென்ட் அஹ ஸ்ப்ரே பண்ணதும் பொண்ணுங்கலாம் டபுக்கு டபுக்குனு வந்து அவன் மேல  ஒட்டிக்கிராங்களாம்...கேட்டா  பொண்ணுங்கள கவருற சக்தி அந்த வாசனைக்கு இருக்காம்... அதுக்காக இப்படியா,  இதுக்கு எந்த கண்டனமும் இதுவரைக்கும் எழுந்த மாதிரி தெரியல... இதுல புதுசு கண்ணா  புதுசுனு பிளேவர் வந்துகிட்டே இருக்கு...சரி இன்னொரு கொடுமை என்னன்னா நேத்து பொழுது போகலன்னு டிவி அஹ ஆன் பண்ணேன் மக்கா... ஒரு பொண்ணு ஆண்கள் உபயோகிக்கும் பைக் அஹ ஓட்டிக்கிட்டு வந்துச்சு.. ஒரு பையன் அவளுக்காக வெயிட் பண்றான்,, இவ போலாமான்னு கேட்க அவன் சோகமான முகத்தோட அவன் வீட்ட பாக்குறான்...
இந்த அம்மணி ஏன் கவலைப்படுற நாம ஓடிப் போயி கல்யாணம் பண்ணிக்கிட்டு, வரவேற்ப்புக்கு உங்க அம்மா அப்பாவா கூப்பிடலாம்னு சொல்லுது, பையன் அப்படியும் டவுட் அஹ இருக்க, இந்த அம்மணி அவர் கைமேல் இவங்க கை வச்ச உடனே இந்த அம்மிணி போட்டிருக்கிற பவுடர் வாசனைல மயங்கி பையன் பொண்ணு பின்னாடி வண்டில ஒக்காந்து போயிட்டான்....கேட்டா வாழ்க்கைக்கு நல்ல துவக்கம் வேணும்னா நறுமணம் கவழும்  இந்த பவுடர் யூஸ் பண்ணுங்கனு.முடிச்சிட்டாங்க.. என்ன ஒரு தீம்ல... ச்ச யோசிச்சவனுக்கு விருது கொடுக்கனும்யா... கொடுமை கொடுமைன்னு தலைல தான் அடிச்சுக்கணும்... கேக்குறவன் கேணைனா கேப்பைல ஏதோ வடியுமா?....
இதுவா விளம்பரம்... ஒரு பொருளோட தரம் நல்லா இருந்தா, விளம்பரம்கூட தேவை இல்ல... அப்படியே  விளம்பரம் தேவையானதா இருந்தா பொருளைப் பத்தி சொன்னாவே போதுமே...நிக்க கூட நேரம் இல்லாத  இந்த நேரத்துல ஒரு புதிய பொருள் பத்தி நமக்கு தெளிவான எண்ணம் தேவை தான்,  அதுக்கு விளம்பரங்கள் அவசியம் தான்... அதுக்காக நானே ராஜா நானே மந்திரி மாதிரி எதையும் விளம்பர தயாரிப்பு நிறுவங்கள் செய்யக் கூடாதே..

ஒரு குழந்தை ஆரோக்கியமா இந்த உலகத்தில வாழனும்னா முதல்ல தாயோட அரவணைப்பு அவசியம் அப்போதான் அந்த குழந்த நல்ல படியா வளர முடியும்...சோ நம்ம வாழ்க்கைக்கே அன்புங்கிற  கரு தேவைப்படுது...நம்மள நம்ம தாய் நம்ம வளர்த்தது போக சமுதாயம் தான் நம்மள வளர்கிறது..அப்படிப்பட்ட . நம்ம சமுதாயத்தின் நிலைகளை இன்னொரு நிழலாய் தொடரும் மீடியா கொஞ்சம் யோசிச்சு எல்லாத்தையும் செஞ்சா நல்லா இருக்கும்....மீடியாக்களும், மீடியா வழியா ஒய்யார பவனி வரும் விளம்பர நிகழ்சிகளும் நல்ல கருவை தரமான முறைல சொன்னா எல்லாருக்கும் நல்லா இருக்கும்... வளர தலைமுறைய நம்ம பாதை மாறமா கொண்டு போகமுடியும்...நீங்க என்ன சொல்லறேங்க நண்பர்களே.... 

கடைசில நம்ம கமல் சார் ஸ்டைல்ல மீடியாக்களும்,  மீடியாக்கள் கொடுக்கிற விளம்பரங்களும் நமக்கு நல்லது செய்யலன்னு சொல்லல.... செஞ்சா நல்லா இருக்கும்னு சொல்லுறேன்.... 

முந்தய பதிவு: உன்னால் உடைந்து போனேன் 
உங்கள் கருத்துக்களை மறக்காமல் இன்ட்லி, உலவு, தமிழ் மணத்தில் இட்டுச் செல்லவும்.... வாழ்த்துங்கள் வளர்கின்றோம்...

புதன், 2 மார்ச், 2011

உன்னால் உடைந்து போனேன்...


* காதலே!!!!
பிடித்தம் இல்லாத என் வாழ்வில்
உன்னால் பிடித்தமாகிப் போன
என் விசயங்களும்
என் காதலும்
உன்னை சேரும்
வழி தெரியாமல்
உன் மொழிக்காய்  
காத்திருக்கின்றன....

* நீ இனிக்க இனிக்க பேசி
ருசி பார்த்த என் காதல்,
உன் கட்டளைக்காய்
காத்திருக்கின்றது...

* காதல் கசக்கும் மருந்தென்று
தெரியும்....ஆனால்
உயிர் பறிக்கும்
விஷம் என்பதை
உன் பிரிவில் 
தான் உணர்ந்தேன்...

* உன் மௌனம் 
கொன்று தின்ற
என் நெஞ்சத்தை,
உன் வார்த்தை கொஞ்சம்
கொஞ்சமாய் சாகடிக்கிறது...

* காலம் எல்லாம் குறையாக்
காதலோடு வாழ்வேன்
என்றாய்...
இப்படி வருத்தமே
என் வாழ்வின் குறையா
சேமிப்பாய் போகும் என்று
தெரிந்திருந்தால்
நீ காதல் பேசிய காலத்தை
காலனின் (எமன்)  துணையோடு
கொன்று குவித்திருப்பேன்...

* மூர்ச்சையாக்கிப் போன
என் ஆசைகள்
அடைக்கலம் தேடும்
அகதியாய் அலைய,
நீ மட்டும்
என் பிரியத்தை புறம்தள்ளிப்
போக காரணம் என்னடா...

* பிணம் தின்னும் கழுகுக்கும்,
என் உணர்வைதின்று,
என் காதல் கொன்ற
உனக்கும் என்ன வித்யாசம்...

* நீ பிரித்து போவாய் என்று
உனக்கு முன்பே
தெரிந்திருந்தால்,
ஏன் இந்த நலம் விசாரிப்பு,
ஏன் இந்த பகல் வேஷம்..
ஏன் இந்த எதிர்பார்ப்பு நாடகம்...
சொல் ஏன்....?...

* ஆறாத என் வலிகளை
எல்லாம், பத்திரமாய்
சேர்த்து வைத்து,
 சோகத்தின் நார் எடுத்து
உனக்கு ஒரு கவிமாலை
தொடுக்கிறேன்...

* காலம் என் காதலை
புரியவைத்தால்
சீக்கிரம் என் கழுத்தில்
மாலை இடு...
இல்லையேல் உன்னால்
தொலைந்த  என் மனதிற்கு, 
என் மரணத்திலாவது
ஒரு சொட்டு கண்ணீர் விடு...


முந்தையக் கவிதை : மழைக்காலக் காதல்  

நண்பர்களே வாழ்த்துங்கள் வளர்கின்றேன்....அப்படியே உங்கள் ஓட்டுகளை தமிழ்மணம், இன்ட்லி, உலவில் பதிவு செய்து விட்டு செல்லவும்  


அன்புடன் 
ரேவா

மழைக்கால காதல்...

 ஆண் பால் 


மழைக் கம்பிகள்
அவள் தேகம் தொடும் போதெல்லாம்
ஆயிரம் ஊசிகள்
என் நெஞ்சில் தைக்கிறது...
இந்த அழகு சிலைக்குள்
முடியும் என்று தெரிந்திருந்தால்
மழையாய்  ஜனித்து, மழையாகவே
அவளில் சங்கமித்திருப்பேன்....


விடாத மழை விட்டு
தீர்ந்தாலும்,
உன்னை பார்த்ததில் இருந்து
என்னுள் இடி முழக்கம்..

மழையை ரசிக்க
நீ ஜன்னல் ஓரம் வந்து
நிற்கும் போதெல்லாம்,
ரசிக்கிறேன் மழையை
ரசிக்கும் ஒரு அழகுச் சிலையை..


அழகுப் பெண்களுக்கு
பெரும்பாலும் மழை
பிடிக்குமாமே..
பின்ன
வானமகன் போடும் 
கோலத்தை
ஏந்திக் கொள்ள 
யாருக்கு தான் பிடிக்காது...


 பெண் பால் 


கொட்டி தீர்த்து
விட்ட நிம்மதியில்,
மழைக்காற்று சலனமற்று
சில்லென்ற  காதில் சங்கீதம் பாட
என்னுள் அடைமழை
ஆரம்பம் அவனை நினைத்து...

 

தாளம் தப்பாமல்,
அவன் தேகம் தொடும்
மழை..
அதைப் பார்த்ததும்
எனக்குள் தப்பு தாளங்கள்..


இந்த மழை முடிவதில்
சம்மதம் இல்லை எனக்கு,
குடைக்குள் மழையாய்
என் அருகில் அவன்  

**********

கொஞ்சம் பெரிய கவிதை தான் பொறுத்துக்கோங்க  இருவர் உணர்வையும் பதிக்க நினைத்ததால் இவ்வளவு நீளம் ஹ ஹ....

முந்தய பதிவு : யார் அறிந்தார் 

பாஸ் அப்படியே  மறக்காம உங்கள் கருத்துக்களை இன்ட்லி உலவு தமிழ்மணம் இந்த மூன்றிலும்   இட்டுச் செல்லவும்.....

அன்புடன் 
ரேவா