உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 மார்ச், 2011

யார் நீ?....

* முகம் தெரியாமல்
முகவரி புரியாமல்,
இணையத்தில்
நட்பாய்  இணைந்தோம்...

* சில உரையாடல்களில் 
சிரிக்க வைத்தாய்...
சில உரையாடல்களில்
சிந்திக்க வைத்தாய்..

* பகலிரவு புரியாமல்,
பசித்தூக்கம் அறியாமல்,,
உன்  பேச்சால் 
என் உலகம் மறக்கவைத்தாய்.. 

* நட்பாய் அறிமுகமாகி,
நாளடைவில்
  நட்பின் முகவுரையை
ஏற்க மறுத்தாய்...

 
* வளம் தேடும் இடத்தில் இருந்து
என் நலம் நாடினாய்...
கண்ணுறக்கம் தான் கெடுத்து
உரையாடினாய்...

* இனிக்க இனிக்க பேசி 
என் இரவை 
இனிதாக்கினாய்...
* இது  காதலா?, நட்பா? 
என்று விளையாட்டாய்
கேட்டதற்கு 
என் நட்பைக்  கனவாக்கி,
என் நாட்களை நரகமாக்கி
ஓடி மறைந்தாய்...

* உறைமேல் இட்ட விலாசத்திற்க்கே
சரியாய் போய் சேராத அன்பு...
எப்படி உன்னிடம் கிடைக்கும்
என்று எதிர்பார்த்தேன்...

* மழை விட்டுச் செல்லும்,
ஈரக்காற்றாய்,
உன் இனிமையான பேச்சு
அடிமனதில் இன்னும்
தூரலாய் .இருக்குதடி.

* இருப்பது இருக்கட்டும்
என் தோழியே ...
தேனொழுக பேசி,
கொட்டும் தேளென
நீ மாறியதன் நோக்கம்?.... 

* உன் அன்பின் வெளிப்பாடு
வெறும் தோற்றம் சார்ந்ததா?...
புரியவில்லை...
அன்பைத் தாங்கி நிற்கும்
நம் எல்லை கோட்டில்,
பாதுகாப்புக்கு நிற்பது
நம் நட்பு..
புரியவில்லையா?....
உனக்கு...

* எல்லைத்தாண்டும் பயங்கரவாதம்
என்னில் இருக்காது...
ஆனாலும் என் தோழியே ,
நீ விட்டுச் சென்ற
வார்த்தைகளில்,
எனைக் கொத்திச்செல்லும்
உன் அன்பு
கானலாய் இருந்தாலும்,
கனவிலாவது  தொடரட்டும்...
ஆம் தோழி 
கனவிலாவது நம் 
நட்பு தொடரட்டும்... 

* முகம் தெரியாமல்
முகவரி புரியாமல்,
இணையத்தில்
இணைந்தோம்...
(என்  இணைய நண்பனின் வேண்டுதலுக்காய் இந்தக் கவிதை....

வெள்ளி, 25 மார்ச், 2011

என் காதல் மருத்துவன் நீ...



* ஒட்டுமொத்த அழகையும்
ஒன்றாய் திரட்டி -
இறைவன்  உன்னைப்  படைக்க
உனைப் பார்த்த என்
விழிகள் படபடக்க,
நீ வீசிச் சென்ற
பார்வைக் கணையில்
சிக்கிக் கொண்டது
என் இதயம்...
பேசும் உன் விழி கொண்டு
காதல் எனும்  மருந்திடு,
பிழைத்துக்கொள்ளும்
என் காதல்...




* தயவு செய்து
ஒரு முறையாவது
புன்னகை செய்...
உன்னால் புது வாழ்வு 
பெறத் துடிக்கிறது 
நான் சூடிக்கொள்ளும் 
என்
தோட்டத்துப்  பூக்கள்...  


 இருட்டில் உனைப் பார்த்த 
மயக்கத்தில்...
என்னைவிட அதிகமாய் 
உருகுகிறது
உன் வீட்டு மெழுகுவர்த்தி 
கொஞ்சம் அணைத்து விடு 
நீண்டுவிடும் 
என் நாட்கள்... 
எத்தனையோ பேரோடு 
வாதாடி வென்ற 
என் வார்த்தைகள் 
எல்லாம் நோய்கண்டது
உன் மௌனத்தால் ...   
   


* நீ சிந்திய வார்த்தையில் 
என் பேனா
பிழைத்துக்கொள்ள,
நான் மாட்டிக்கொண்டேன்
காதல் நோயில்...



  இறுதியாய் 
என் கவிதை காயப்படக்
கூடாதென்று
என் கவிதைக்கும்,
கவிதையை  (உன்னை ) நேசிக்கும் எனக்கும்
உன் இதழ் கொண்டு
மருந்திட்ட
என் 
காதல் மருத்துவன் நீ...


முந்தையக் கவிதை : வாழ்க்கை வழக்கு...

படங்கள் : நன்றி கூகிள்
அன்புடன் 
ரேவா

புதன், 23 மார்ச், 2011

வாழ்க்கை வழக்கு....



* கடவுளால்
ரச்சிக்கப் பட்ட திருமண வாழ்க்கை,
ரத்து செய்யப்பட்டது
சட்டத்தால்...

* புரிகின்ற நிஜங்களையும்
புரியாத பொய்களையும்
பெரிது படித்தியதால்
பிரிவினை கண்டது
அவர்கள் வாழ்க்கை...

* இணைக்கப்பட்ட இதயங்கள்

பிரிந்து கொள்ள,
இருவரால் பிறந்த
இதயம் மட்டும்
தனிமையில்....

* வழக்குகள் வாழ்க்கையை
முடிவுக்கு கொண்டுவர,
மழலையின்
வாழ்க்கை மட்டும்
வழக்காய்...
அவர்கள்
காணாமல் போன காதல்
முன்னே ....

முந்தையக் கவிதை : காதல் மழை

திங்கள், 21 மார்ச், 2011

காதல் மழை...



* சிறுதுளி பெரு வெள்ளமாய்....
உன் ஓரப்பார்வை
என்னுள் காதலாய்....


* நாம் சந்திக்கும்
வேளை சிறிதாயினும்...
விழி  மேடையில்
நமக்கான பரிமாற்றங்கள்
அழகாகவே அரங்கேறுகிறது
காதலாய்...


* நீ பேசாத
வார்த்தைகளையெல்லாம்
அழகாய் பேசி விடுகிறது
உன் சிரிப்பு...

* உனைக் கண்டுவிட்டால்
எனக்குள் காதல்,
காணாது தவறவிட்டால்
கனவு...
இது தான் காதலா?...


* உன் பார்வைவரம்
பெறவேண்டியே, தினமும்
தவமிருக்கிறேன்
ஜன்னலோரம் 
உன் வருகைக்கு... 
* இரவில் மாடியில்
உறங்கச் செல்லாதே
நிலவுப் பெண்ணும்
உனைக் கண்டால்
காதல் மோகம் கொள்வாள்..

* குழந்தை அதிகம்
ரசிக்கும் நான்
உன்னையும் அதிகமாய்
ரசிக்கிறேன்...என் காதல்
குழந்தையை உன்னிடம்
கண்டதால் ...

* உன் இதழ் திறந்து
கொஞ்சம் புன்னகை செய்
பிழைத்துக்கொள்ளும்
நம் காதல்..


* என் இரவு எல்லாம்
உன் நினைவு
தாலாட்டிலே உறங்கிப்
போக...என் காதல்
மட்டும் உனைச்
சேராது விழித்துக்
கொண்டிருக்கிறது.. 


* உன்னிடம், பேச வார்த்தைகள்
இருந்தும், வெளிப்படுத்த
காதல் இருந்ததும்
வெளிப்படுத்த முடியா
ஏழையாய் என் வெட்கம்...

* மரபுக்கவிதைகள்
புரியும் எனக்கு,
ஆனால். 
என் ஆண் கவிதை
உந்தன் மௌனம் தான் 
இன்னும்
புரியா மொழியாய்..

***********

முந்தையப் பதிவு  : இந்த மனுசனக் கட்டிக்கிட்டு நான் படுறபாடு இருக்கே..(நகைச்சுவை பதிவு)
 

சனி, 19 மார்ச், 2011

இந்த மனுசன கட்டிக்கிட்டு நான் படுறபாடு இருக்கே..


விடிஞ்சும் விடியாததுமா இன்னைக்கு இந்த மனுஷனுக்கு லீவ் ஆச்சே... சரி இன்னைக்கு ஒரு நாளாவது அந்த பாவி மனுஷனுக்கு பிடிச்சத சமைக்கலாம்னு,  என்ன சமைக்கனு அவர் கிட்ட கேட்டா , படுபாவி,  நீ ஒன்னும் சமைக்க வேணாம்,  இன்னைக்காவது  நான் நல்ல சாப்பாடு சாப்புடுறேன்னு அவரே சமைக்க போயிட்டருங்க...சரி நமக்கு சமைக்கிற வேலை மிச்சம்னு சொல்லி வீட்டு வேலைய கவனிக்க போனா... துவைக்க எடுத்து வச்ச துணி எல்லாத்தையும் நானே துவைக்கிறேன் நீ போ னு சொல்லிடாரு... என்ன ஆச்சு இந்த மனுசனுக்குனு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.. 

டமால் னு ஒரு சத்தம், என்னனு போய் பாத்த........  என் வீட்டு மனுஷன் சமைக்கிறேன்னு சொல்லி, ஸ்டவ் ஆன் பண்றத்துக்கு  பதிலா, இன்டெக்ஸ்டன் அட்டுப்புல குக்கர வச்சுருக்காறு...குக்கர் அக்செப்ட் ஆகாம வெடிச்சிருச்சு. நான் அடுப்படிக்குள்ள போனதும் அவரு  பேய் முழி.முழிக்க .. எனக்கோ ஒரே கோவம்.... ஸாரி டி னு அவர் சொல்ல,  எனக்குள்ள எப்படி அப்படி ஒரு காளியாத்தா ஒளிசுருந்தானே தெரியல, நீங்க ஆணியே புடுங்க வேணாம்... நான் நல்லா சமைக்காட்டியும் பரவா இல்ல... என் சமையலையே எப்போவும் போல சாப்பிடுங்கன்னு சொல்லி சமையல கவனிக்க போயிட்டேன்.. 

திடிருன்னு பாத் ரூம் ல இருந்து சத்தம் ஐய்யோ அம்ம்மானு, என்னடா இன்னும் தேர்தல் முடியலையே அதுக்குள்ள கலைஞர் கத்துறாரேனு பாத்தா, என் வீட்டு மவராசா துணி  துவைக்க போயி, என் அப்பா சீதனமா கொடுத்த வாசிங் மெஸின பொகைய வச்சுட்டாறு..அவ்வ்வ்வவ்வ்வ் .அட பாவி மனுசா ஏன்யா உனக்கு இந்த வேண்டாத வேலைன்னு கேட்டா?.... சாரி ரேவா மா, நானும் உனக்கு ஒத்தாசையா இருக்கணும்னு நினச்சு தான் இப்படி பண்ணுனேன்.... தெரியாம மெஷின் பால்ட் ஆகிடுச்சு, இத மனசுல வச்சுகிட்டு என் அம்மா எனக்கு ஆசையா வாங்கித்தந்த என் பைக் அஹ ஒன்னும் பண்ணிடாதாடானு கெஞ்சிக் கேட்டாரா, எனக்கோ ஒரே சந்தோஷம் ஆகா இந்த ஐடியா நமக்கு தோணாம போயிடுச்சேனு,  மனுஷன் அசந்த நேரம் வண்டி பிரேக் அஹ கலட்டிடலாம்னு நினைச்சேன்... 

அப்பறம் கொஞ்சம் வேலை காரணமா என் வீட்டால  கவனிக்க முடியல, சரி என்ன பண்ணுறாருனு பாக்கப் போனா, அட உங்அப்பன் , வலுக்கத் தலைக்கு சவுரி வைக்க, (ச்சே ச்சே என் மாமனார் அஹ சொல்லல, சும்மா பழமொழி) மாடில பக்கத்து வீட்டுல இலியான மாதிரியே ஒரு பொண்ணு இருக்கும்ங்க , இந்த மனுஷன் இலியானா போட்டோவையே சோறுதண்ணி இல்லாம பாப்பாரு,  இதுல அந்த பொண்ணும் இவரையே பாக்க, எனக்கு ஒரே பீதி... அதுவும் சொல்லி வச்ச மாதிரி அவருக்கு பிடிச்ச புல் ஹான்ட் சுடி போட்டுருக்கா, இவருக்கோ புல் ஹான்ட் சுடி போட்டு வயசான பாட்டிப் போனாலே, அந்த பாட்டி வெட்க்க படுற அளவுக்கு பேசுவாரு, இதுல இந்த பொண்ணு இவரோட ரொமாண்டிக் லூக்குக்கே அவுட் ஆகிடுச்சு... (பாத்தாலே தெரிஞ்சது) இதுல பேசுனா அவளோ தான், என்னடா நம்ம தாலிக்கு வந்த சோதனைன்னு, தாலிய கண்ணுல ஒத்திக்கிட்டு, என் வீட்டு லூசு தலைல நறுக்குன்னு ஒரு கொட்டு, ஆனா என் புருஷன் ரொம்ப நல்லவங்க, நான் செல்லமா எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு,(செல்லமா தாங்க )ஹி ஹி 

ஆனாலும் அடிச்சது ஒரு பொண்ணு முன்னாடி அதுவும் இலியானா மாதிரி ஒருத்தி முன்னாடி, சாருக்கு வலிச்சாலும் வலிக்காத மாதிரியே ஸீன் போட்டார் நானும் விடுறதா இல்ல..ஒரு வேலையா அந்த மனுசன மாடில இருந்து தேத்திக் கூட்டிட்டு வந்துட்டேன், நான் போய் காபி போடுட்டுவரேன் இங்கயே இருங்கன்னு சொல்லி அந்த காபி பைத்தியத்துக்கு காபி போட போயிட்டேன்,  மறுபடியும் டமால்னு சத்தம் என்னடானு பாத்தா என் பொறந்த நாள் பரிசா என் சினேகிதி வாங்கித் தந்த மீன் தொட்டிய கழுவுறேன்னு உடசுட்டாறு... 

எனக்கு காதுல இருந்து ஒரே புகையா வர .... உனக்கு இன்னைக்கு சோறும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது, ஒழுங்கா போய்  பதிவு போடுறேன் பதிவு போறேன்னு என் மானத்த வாங்குவேங்கள்ள அதயாவது பண்ணித்தொலைங்க, இங்க இருக்கிறதா ஒன்னு ஒன்ன ஒடச்சு என்ன கடுப்ப கெளப்பாதிங்கனு சொன்னது தான் தாமசம்... மனுஷன் குட்டி போட்டா பூனையாட்டம் போய் அவர் லேப்டாப் கிட்ட உட்காந்துகிட்டாறு...ஆளு அட்ரசே தெரியாத அளவுக்கு அமைதியா இருந்துருக்காரு...இதுல அப்போ அப்போ சிரிப்பு சத்தம் வேற என்னடா இந்த மனுசன தலைல அடிச்சோமே சித்தம் கலங்கிடுச்சானு பாத்தா, மாத்தி மாத்தி யோசிக்கிற நம்ம ரஜீவன் பதிவ படிச்சிடு இருக்காரு..ஹி ஹி..


அப்பறம் கொஞ்சம் நேரம் கழிச்சு பசிக்குது ரேவா சோறு போடுறையா இல்ல என் மீசைய வச்சே உனக்கு ஊசி குத்தவானு ரொமாண்டிக் அஹ பேச, உனக்கு இதெல்லாம் வராதே எப்டி நீங்க இப்படி ஆனேங்கனு கேட்டா ஒன்னும் இல்லா இப்போதான் வசந்த சார் ஓட வெட்கத்தை அடைகாக்கும் காதலி அப்டேட்ஸ்  படிச்சேன்னு சொன்னாரு..எனக்கோ கோவம் வர கடைசில நம்ம நாற்று நண்பன் அதாங்க நம்ம நிரூபன் பாணில விளக்கமா....ஹி ஹி  என் பாணில என்னவரை வாழ்த்திட்டு வந்து உக்காந்தேன்...

கடைசில எங்க வீட்டுல இருந்து அம்மா போன், பேசிட்டே இருக்கும்போது, என் போன் அஹ பிடிங்கி நான் அடிச்சது, சாப்பாடு போட மாட்டேன் னு சொன்னது எல்லாத்தையும் ப்ளாக் அஹ போஸ்ட் அஹ போட்டாராம் அது இன்னைக்கு ஹிட்  ஆம்...என் அம்மாகிட்ட சொல்லி சொல்லி சிரிக்கிறாரு.... அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்... இந்த பாவி மனுசன கட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே ... அப்பப்பாஆஆஆஆஆ முடியல...யாராவதும் ஒரு வழி சொல்லுங்களேன்... 

( என்ன நண்பர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நேத்து மீள்பதிவுன்னு போட்ட என் பழைய கவிதை கொஞ்சம் அழுகாச்சிய போயிடுச்சு அதான் சும்மா கொஞ்சம் மொக்கையா ட்ரை பண்ணலாம்னு... ஹி ஹி அப்பறம் பாவம் ரேவா உங்களவர்னு கமெண்ட் போடா கூடாது ஏன்னா  என் இளவரசன் இன்னும் கண்ணுல மாட்டல... ஹி ஹி..அதோட நல்ல வாய் பேசுறே கொஞ்சம் நகைச்சுவையா எழுதலாம்னு ஒருத்தர் ஐடியா கொடுத்தார் அதன் விளைவே இது ..நாங்களும் மொக்கையா எழுதுவோம்...ஹி ஹி  ........யாரையாவது இந்த பதிவு காயபடுத்தி இருந்தால் மனிக்கவும். சும்மா ஒரு பேச்சுக்கு போட்டுவைப்போம்.சரி நண்பர்ஸ் வரட்டுமா..  அப்பறம் அப்டியே படிக்காதவங்க என்னோட முந்தய பதிவு : உன் ஊடல் இதையும் படிச்சிடுங்க...)

வெள்ளி, 18 மார்ச், 2011

உன் ஊடல்

* தோழனே!!!
நம் கண்கள் பார்பதற்குள்ளே
கருத்தொருமித்தோம்!!!!
கனவுகள் கொண்டோம்!!!
காரணமில்லா சிறு சிறு
கள்ளத்தனம் செய்தோம்!!!!

* விதிவழியே,
நமக்கு விதிக்கப்பட்ட
வழியை விளையாட்டாய்
படி படியாய் கடந்தோம்...

*எனக்கானவன் நீ என்றும்
உனக்கானவள் நான் என்றும்
(தயக்கத்துடன்) நம் உள் மனது 
சொன்னாலும்
நம்மை உறங்காமல் உளற
வைப்பது எது?

* இந்த சிறிய நாட்களில்
நமக்குள் உண்டான ஏதேச்சை
எண்ணங்கள் எத்தனையோ!!!!

* முட்டி மோதி நம்மிடம்
எட்டி பார்க்கும் நம்
ஒற்றுமைகள் எத்தனையோ!!!!

* ஆழ இருக்கும் மனதில்
நம்மை ஆளத்துடிக்கும்
ஆசைகள் எத்தனையோ!!!!

* தயக்கங்கள் எத்தனையோ!!!!
தவிப்புகள் எத்தனையோ!!!!
தடையில்லா என்னை
நெருங்கி வரும் உன்
தார்மீக உரிமைகள்
எத்தனையோ!!!!

* இப்படி எத்தனையோ,
இருந்தும் ஓர்
**எத்தனை** போல்
நம்மை ஆட்டுவிப்பது 
எது! தோழா??


* சுகமான ஒரு மாலை பொழுதில்
முதன் முதல் பார்வை பரிமாற்றம்...
என் இரண்டாம் தாய் நீயா?
என்று என்னுளே ஆயிரம் கேள்விகள்...!

ம்...ம்

* நம் வாழ்கை கேள்விகளுக்கெல்லாம்
விடை தெரிந்து விட்டால்
"விதி" என்ற ஓன்று
வீண் தானே!!!!!

* மாற்றங்கள் வாழ்கையில்
மாறாமல் இருக்க நம்மை
வந்தடையும் வாழ்வியல் 
மாற்றங்கள் தான்
எத்தனை!!! எத்தனை!!!!

* தினம் தினம் உன் குறுந்தகவல்களால்
நிறப்பப்படும் என் கைப்பேசி
இபோதெல்லாம் கணவனை
இழந்த கைம்பெண்ணாய்
மாறியதன் மாற்றம்
என்னடா?????

* என்னை வந்தடையும்
உன் அழைப்புகள்,
உன் அரவணைப்பு,
உன் தாய் உள்ளத்தின் கனிவுயாவும்
காற்றில் கிடத்திய கற்பூரமாய்
காணாமல் போனதன்
கரணம் என்னடா???

புரிந்துகொண்டேன்னடா!!!!

* மாற்றங்கள் வாழ்கையில்
மாறாமல் இருக்க நம் வாழ்வில்
நம்மை வந்தடையும் வாழ்வியல்
மாற்றங்கள் தான்
எத்தனை!!! எத்தனை!!!!

மாற்றங்கள் தரும்
மாற்றங்களோடு
ரேவா 

நண்பர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வணக்கம் வணக்கம் சாரி இப்போதைக்கு பதிவு எதுவும் எழுதல...அதுனால என் பழைய பதிவுகள் மீள் பதிவாக... வரட்டா...இப்போ பதிவுலகத்துல இதுதான் லேட்டஸ்ட்....ஹி ஹி  

 நண்பர்களா இது ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி எழுதுனது... அதனால நோ அழுவாச்சி கமெண்ட்ஸ்... என் சமத்துல்ல.... ஹி ஹி....
 
முந்தையப் பதிவு : என் டைரியில்

செவ்வாய், 15 மார்ச், 2011

என் டைரியில்...


* உன் பார்வை
என்னுள் கிறுக்கியதில்
இருந்தே,
எதை எதையோ கிறுக்குகிறேன்
என் டைரியில்...
அத்தனையும்
உன்னைப் போல, அழகாகவே
முகம் காட்டுகிறது
காதல் எனும் கவிதையாய்....



அன்புடன் 
**** ரேவா *****