உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

இருவழிச்சாலையின் ஒற்றை மைல்கல்

* இடை நிறுத்தப்படும் காலத்தின் அறைச்சுவர் மேல் வண்ணங்கள் ஏறுவதில்லை பூசி நிற்கும் சொற்பமும் வெளிப்புழங்கும் அனலால் பெயர்ந்து உதிர்கிறது மிச்ச ஈரமாக விலகுதல் விடுபடுதல் இரண்டிற்குமான ஏக்கத்தில் இரவு ஏறி பகல் வருகிறது பயணப்படும் தூரமென்பது ஒரு நாளுக்குரிய மணி நேரமாகையில் கிழிக்கப்படும் தேதியின் கருணை முந்தைய நினைவின் குடைக் காளான் இருப்பை பூஞ்சைகளாக்கிடும் மழையால் ஈரமடிக்கத் தொடங்கும் சுவர்கள்...

பின் தொடரும் குரல் நிழல்கள்

* தெரியாத பறவையின் குரலில் நீள்கிறது நடுநிசி விரிந்த சிறகுகளின் தொலைவில் அறியமுடியாத வெளிச்சத்தின் இருட்டு வசப்பட்டுவிடுகிற பறத்தலிலோ பழைய பாதை திரும்பமுடியாதவைகளைக் கொண்டிருக்கிற வழிகள் திறந்துகொள்கிற குகைகளாகும் போது மறந்துவிடுகிற மந்திரம் ஒரு வரம் மீறி நுழையும் போது மடி நிறைய அள்ளிவருகிற நினைவுகள் ஆபத்தானவை அவை வெளவாலின் தலைகீழ் பிம்பங்களைப் போன்ற தெளிவற்ற தெளிவில் இருந்து பிறக்கிற சுமைகூடும்...

பிறப்பின் நூல்

* திரும்பமுடியா இடம் திரும்பிப் பார்க்கமுடிகிற இன்னொரு பிறப்பு ஒற்றை வார்த்தைகளின் இரட்டைப் பிறப்பு அச்சு அசலின் வேறு வேறு நிமிடங்கள் நாம் திணறுகிற நெருக்கடி அத்தனை விசாலம் அவ்வளவு சுதந்திரம் இரண்டு அர்த்தத்தில் ஒளிந்துள்ள ஒற்றை நூலிழை நாம் திரும்பிச் செல்கிற தூரத்தின் தொலைவு தொலைகிறோம் ஒவ்வொரு நூலிழையிலும் நூலறுந்த பட்டத்தின் தவிப்புடன். -ரேவ...

இருப்பதில் எப்போதும்

* சற்றும் எதிர்பாராத இருள் ஓசைகள் வெளிச்சங்களாகிட பிறக்கும் கண் உறுப்பொன்றின் உறுப்பற்ற பிறப்பு  நாம் அரூபவெளிக்குள் அதைப் போலே சஞ்சரிப்போம் மெளனக்கூட்டிற்கு திரும்பும் வார்த்தைகளின்  சிறகுகளைப் போல் வானத்தில் அத்தனை அமைதி அமைதிக்குள் ஆழ்ந்த பவித்திரம் சுத்ததைப் போன்ற அசுத்தம் விளைவிக்கிற  நியாபகத்தின் தீனிக்கு  இரையாகாத இடத்தில் பசித்துக் கிடக்கும் தேடல் இந்த இருள் ...

மழைக்காலம்

மழை வடிந்த இரவுகள் காதலால் நிரம்பிய வழியும் விடியல்கள். நாசி பிடிக்கும் வரை உள்ளிழுக்கும் காற்றின் ஈரத்திற்குள் சலங்கை கட்டும் மனதிற்கு ஏற்ற இசையென்பது கைகோக்கும் குளிர்காற்றின் தலைவருடல் மட்டுமே. கேசம் அசைக்கிற காற்றில் எல்லாம் புது இசை பிறந்து இரவை காதலோடு தாலாட்டுகிறது. ஈரம் உலராத தளத்தில்...

இறுதியின் முடிவு

* காணாமல் போகிறோம் கண்டெடுக்கும் சொல் கொண்டவர் கையிலெடுக்கின்றனர் கைமாறும் ரேகைகளின் மாற்றம் நிலையைப் போல் நிலையில்லாதது  காட்டுவழியில் மின்மினி வெளிச்சம் இந்த கருணை ஒரு பிரிவிற்கா இத்தனை திட்டமிடல் காணாமலே போயிருந்திருக்கலாம் -ரேவா ...

டைரிக் குறிப்பு

காலம் நின்று விடுகிறது, நாம் பார்க்க ஆசைப்பட்ட என்ற வார்த்தைக்கு பின்னிருக்கும் காட்சிகளின் மத்தியில்.. ஒவ்வொரு கூடுடையும் நம்பிக்கைக்குப் பின்னும் பறக்க அனுமதித்த வானத்தின் கருணை?! கற்றுக்கொண்டதின் சுதந்திரம். அல்லது சிறகுகளின் கற்றல். நரைகூடும் பருவமென்பதில் வளர்ந்துவிடும் பால்பற்கள் உச்சரிப்பதற்காக வாங்கிக்கொண்ட இன்னொரு வரம். அது வளரும்.. பின் விழுமென்பது பிள்ளை வயது பாடம். நாமே தான்...

மெளனம் ஊறும் சொல்லின் வலிமை

* யாரோ ஒருவர் முடித்துவைக்கிறார்கள் டச் ஸ்கீரின் மேல் ஊறும் எறும்பு அசைத்துப் பார்க்கிறது மெளனம் என்ற அசையா சொத்தை கல் தேயும் பழமொழியின் மேல் நின்று கொண்டிருக்கிறேன் சிறு எறும்பாக தொடக்கத்தில் இனிப்பாக இருப்பது குறித்த கேள்வி யாரோ ஒருவரை பின் தொடர்கிறது எறும்பின் உணர் வரிசைகள் குறித்து பேசத்தான் வேண்டுமா? ...

காத்திருப்பின் தொலைவு

* காத்திருக்கப் பழகுகிறேன் முன்பை விட அதிகமாக அதிகத்தின் தொலைவை இன்னும் கூட நீட்டித்துக் கொள் இருப்பதற்கென்ற காரணங்களுக்கு போதுமாகிறது இருப்பறியா காத்திருப்பு -ரேவா  ...

போதுமானது

ஏமாற்றம் போதுமானதாய் இருக்கிறது திரும்பி வருவதற்கான பாதை இந்த இருள் வழியும் வியர்வை உயிர் வாழ்வதற்கான விடியல் இந்த சப்தமற்ற குடுவைக்குள் மூச்சுக் குழாயை பொருத்தி வைத்திருக்கிறேன் குமிழ் குமிழாய் உடையும் சொற்கள் ஆக்ஸிஜன் நிறுத்தி வைத்திருக்கிற நம்பிக்கை இறங்குவதற்கான நிறுத்தம் தூரத்தில் பெய்கிற மழைக்கு குளிர்கிற காற்றின் கை போதுமானதாய் இருக்கிறது இப்போதைக்கு -ரேவா...

மே பைட்ஸ்

1. தொலைவுகளில் இருக்கிறது இழந்ததின் அருகாமை 2. பிரிவை உடுத்திப் பார்க்கிறோம் அளவுகளுக்கேற்ற கச்சிதம் அவரவர் வசதி. 3. நமக்கே நமக்கென்று வாய்ப்பது தனிமையே என்றாலும் அது நமக்கானது 4. நிரந்தரச் சொற்களைத் திறந்துவிடுவதன் மூலம் விடுதலையடைகின்றன கூண்டுப் பறவைகள் 5. நிலாக் காட்டில் நீர் அருந்துகிற யானையின் கண்ணில் பசித்த நினைவு 6. நெடுஞ்சாலை பிரியமொன்றின் கையசைப்பு கடத்தி வந்துவிடுகிறது பயணத்தை...

குறிப்புகள்

கைப்பட எழுதிப்பார்த்த கடிதம் போல் இருக்கிறது இரவு. வரி வரியாய் எழுதிப்பார்த்த வார்த்தைகள் வரிக்குதிரையின் வேகத்தில் வானில் கலக்கிறது.. பிழைச் சொற்கள் உன் நட்சத்திர வெளிச்சம். நான் நிறுத்திவைக்கிறேன் அதை நிலவின் நடுவில்.. திசை கலைத்து வெளியேறும் காற்று நிறுத்தற் குறியிடாத காதலின் பேரன்பு.. மறைவதும் தெரிவதுமான வளர்பிறை வந்து சேரவேண்டிய விலாசம். அஞ்சல் முத்திரை நம் காலத்திற்கான விடியல். கைக்கு...

மழைக் காலம்

மழை குளித்த நிலங்கள் முதல் பிரசவம் கண்ட தாயைப் போல் புதுவாடை கொண்டு மணத்துக்கிடக்கிறது.. மழைப் பொழுதின் ஒவ்வொரு வருகையும் ஒவ்வொன்றை உடுத்திக்கொள்ளும் போது இந்த மழையின் நிர்வாணம் காணும் அழகு கன்னிக் கனவு.. ஒவ்வொரு மழையும் ஒரு முதல்.. முடிவுகள் காணாத தொடக்கமென்பது மழைக்கான கொண்டாட்டம்.. வெயிலை...

நீ என்பது என் எழுதாக் காலம்

நீ இருக்கும் திசை நோக்கி என் சொற்களை அனுப்புகிறேன். அவை பிறந்த குழந்தையின் பிஞ்சுப் பாதங்களுக்கு ஒப்பானது. முதல் முதலாய் பூமி பார்க்கும் அதற்கு இந்த உலகத்தின் வழியெதுவும் தெரியாது..தெரிந்ததெல்லாம் அதற்கு பசி மட்டுமே.. பசிக்கும் நேரத்தில் அதன் குரல் அழுகையின் சுவை.. அதற்கு பாகுபாடு இல்லை. பருவங்கள் மாற மாற மாறும் அதன் பருவம் கோடைக்கானது மட்டுமல்ல என்பதை எப்போதாவது புரியவை.. கம்பங்கூழ்...

பெளர்ணமிப் பொழுதுகள்

சித்ரா பெளர்ணமி அன்றைக்கே எழுத நினைத்தது,பின் பகிரமுடியாத சூழலும், மன நிலையும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்கையில் தேமேனென்று நடப்பவைகளை வேடிக்கை பார்க்கும் மனோநிலைக்கு பழக்கப்படுத்திக்கொண்டிருக்கும் விளையாட்டுகளில் சமீபமாய் ஈடுபட்டுக்கொண்டிருப்பதில், நேற்றைய வானமும் வளர்ந்துவிட்ட நிலவும்...

யோசனை

எதைக் கொடுத்தால் இதைக் கடந்திடலாம்  யோசனை ஒரு மைல்கல் எதிர்திசைக்கு அதுவொரு சுமைதாங்கி  தாண்டிப் போய்விட வேண்டுமென்ற எண்ணம் மூச்சிரைக்கிறது  எதைக் கொடுத்தால் இதைக் கடந்திடலாம்  -ரேவ...

அலாரக் குருவி

* முத்தத்தை பத்திரப்படுத்தும் நாளில் அது வீட்டின் கடிகாரமுள்ளாக மாறி அசைகிறது மணித்திரைக்குள்ளிருக்கும் அசைவு நொடிமுள்ளாகும் போது சத்தங்களுக்கு சிறகு முளைக்கிறது குட்டிவானங்கள் மணிக்கொருமுறை சேரும் அலாரக்குருவியின் சத்தம் நம் முத்தம் அது நினைவூட்டுகிறது பசித்திருக்கும் நேரங்களுக்கான கணக்கை பறக்க நினைக்கும் மணித்துளிகள் அரூப நெல்மணியாகும் போது தீர்கிற பசி திறக்கிறது குட்டி வானத்தை...

மழைக் காலம்

முழுதாய் வளர்வதற்குள்ளான காத்திருப்பை அணில் கடித்துவிட அதன் இதழ்களில் ரோஜா வாசம்.. அதன் குட்டிக் கைகளுக்குள் அகப்பட்ட மலரின் விரிதல் கற்றுத் தேராத காத்திருப்பின் மணம்.. பார்த்துப் பார்த்து வளர்த்தாலும் வாடிவிடுகிற மலரின் புரிதலைப் போலவே இந்த கணம். அதன் வாசம் பிறவி உடுத்திப் பார்க்காத...

டைரிக் குறிப்புகள்

ஒரு நெடுஞ்சாலையின் பிரியமென இருக்கிறது இந்த இருப்பு.. கையசைத்தல் கணம் கவனிக்கும் முன் கழன்றுவிட்ட இலைச்சருகின் பச்சையக் கனவாகிற போது, இந்த வாழ்தலை வாழ்தலின் வழியே ரசிக்கிறேன்.. எதன் பொருட்டும் மண்டியிடப் பழகாத வாழ்தலின் பிரார்த்தனையென்பது வெள்ளைக்கோடுகளாய் சாலையின் இருபக்கமும் பிரிந்துகிடக்கையில்...

உண்மையைப் போல் ஒட்டும் ஒப்பனை

* எதைக்கொண்டும் தொடங்கிவிடலாமெனும் போது எதிர் இருப்பது எளிதாகிறது மாபெரும் பள்ளங்கள் சாத்தானின் முக்கோணங்களன்று அவை திரும்பி வரும் சாத்தியங்களுக்கு உட்பட்டது தொலைதல் கணம் கண்டுபிடிக்கப்படும் போது கண்டுணர்கிறோம் உண்மைக்கும் பொய்க்குமான நூலளவு பேதங்களை நூல் பொம்மையின் இருப்பென ஆட்டங்கள் ஆட்படுகிற ஆள் அளவே அசைவிற்கும் அசைவின்மைக்குமான நாடகம் மற்றபடி உதட்டுச் சாயங்கள் அழகில்லை என்றால்...

மழைக் காலம்

நேற்றைக்கான மழை ஒரு சத்தியத்திற்கான ஒப்பந்தம். வளர்கிற சூட்டை குறைத்துக்கொள்வதைப் போன்றதொரு ஒப்பனை.. துளிகள் வண்ணங்களாய் நிலம் நனைத்த பிரியத்தின் ஹோலி.. மொட்டைமாடிச்செடிகளின் முகவாட்டத்தைப் போக்கவந்த வெயிலின் புன்னகை.. இதழ்களில் பற்றிக்கொண்டிருந்த வறட்சியின் திசைத் தப்பி பெய்த மழை நிழலை நனைக்கிறது...

சொல்லின் இருமுனைப் பாய்ச்சல்

* பக்கத்தில் இருக்கிறோம் நிச்சயமற்ற தன்மைக்கு பாதுகாப்பாக தொலைவு என்பது 6 அடிக்கு முன்னும் பின்னுமான உயரம் உட்காரும் போது நிலைகொள்ளும் அமைதியை எழுந்துகொள்ளும் காலடி ஓசைக்குள் தொலைக்கிறோம் நடப்பதென்பது அணிந்துரையற்ற தொகுப்பு நிறைந்திருக்கிற பக்கங்கள் நீங்கலாக நாம் புரட்டிக்கொள்கிறோம் -ரே...

ஏப்ரல் துணுக்கு

1. கதறி அழ கட்டி அணைக்க இருக்கிறேன் என்பதை மெய்ப்பிக்க சூழும் தனிமையை விரட்ட நேசிக்கும் மெளனத்தைப் பெருக்க உடனிருக்கிற இந்த எழுத்து என் வரம்.. 2.  யாரோ ஒருவராகிவிடும் நிமிடம் அத்தனைச் சின்னது ஆனாலும் அது கனமானது. 3. மழைச் சொல் தீண்டும் வெயில் நிலத்தில் பூக்கிறாய் அரூப புள்ளிகளை இணைத்தபடி 4. பக்கத்தில் இல்லை பார்வை மட்டும் பார்க்கும் தூரம் 5. நடைபாதையின் மொட்டவிழ்கிறது இனி நடக்கத்...

தொடரும் நினைவுகளின் துணைக்கால் (அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து )

                 அளவுகள் தெரியாத ஆரம்பம் ஒரு பிரம்மாண்டம். அது புலனாகும் போது தெரிகிற உச்சி இன்னொரு ஆரம்பம், மறுபடியும் இன்னொரு பிரம்மாண்டம்.. இது ஒரு தொடர் ஓட்டம். உட்கார நேருகிற ஒவ்வொரு இடத்திலும் தொடர்கிற மாராத்தான். களைப்பு...

வெள்ளி, 30 டிசம்பர், 2016

சுமை

* ஆனவரை இழுத்துவரமுடிந்ததில் தலைக்கு மேல் சொற்களின் மலை சொல்வதை எதிரொலிக்கிற திசை இறக்கமுடியாத இன்னொரு சுமை -ரேவ...

தலைப்புகள் இடாமல் ஜீவித்திருக்கலாம்

* நதியாகிவிட்டவரின் பழைய நினைவில் மிதந்து கொண்டிருக்கிறது ஓர் இலை பச்சையங்கள் கழற்றிவிட்ட அதை சருகென்று சொல்வதில் உடன்பாடில்லாது ஓடவிடுகிற போக்கு ஒரு கூழாங்கல் மிஞ்சியவைகளை கரைசேர்க்கிற பால்யம் ஒரு பட்டாம்பூச்சி  வளைத்(ந்)து கொடுக்கிற வண்ணங்களில் சுகப்படுகிறது நதிகளை இணைத்த பெருமழை -ரேவா...

காட்டிக்கொள்கிறோம்

 * காட்டிக்கொள்கிறோம் இரவைப் போல் தெளிந்த வெளிச்சம் பருகிய நம் கோப்பைகள் பரிசுத்தமானதென்று தீர்ந்திடாத பெரும் நெருப்பில் இன்றும் எரிந்துகொண்டிருக்கிற சொல் குளிர் போர்த்துகிறதென்று நிர்வாணங்கள் ஆடைகட்டிய காத்திருப்பென்று மிடறுகள் முதல் சுழிகள் ஆழம் நம் கடல் வனப்பு நீ இருக்கிறாய் நாம் காட்டிக்கொள்கிறோம் -ரேவா ...

நிற்கின்றேன்

எழுதியதின் கனம் எழுதி எழுதித் தீர்க்கிறது படைப்பூக்கமற்ற காலத்தின் முன் படைப்பவனும் கலைஞன் தானே எழுதி எழுதி கணங்கள் கழிகிறது கனத்திற்கும் கணத்திற்குமான இடைவெளிக்குள் நின்றுகொண்டிருக்கிறது வரிசையிடப்படாத அர்த்தங்கள் நான் எண் மூன்றில் நிற்கின்றேன்   =ரேவா...

இருப்பது

* இருப்பதைப் போல் இருப்பதில்லை எதுவும் இந்த இருள் இருக்கிறது விடியும் பகல் இருக்கிறது இன்றென்பதில் நுழைந்து கொள்வது அத்தனை சுகம் வேறுவிதமான பயம் இருந்தும் இருப்பதைப் போல் இருப்பதில்லை எதுவும். -ரேவா...

கோடை மழை

* வெயில் பொழுதின் மழைப் புள்ளி சொட்டு சொட்டாய் உறிஞ்சுகிறது மனதின் வெட்கையை.. இதற்காகத் தான் இத்தனைக் காத்திருப்பு..  கோடையில் மழை ஒரு கொண்டாட்டம்..  வரத் தயங்குகிற அந்த ஈரத்தில், குளிர் போர்த்தக்கிடைக்கா வெட்கை தந்தையின் அக்குள் சூடு.. அதில் பாதம் அழுந்த நடப்பதும், நம் பாதச்சுவட்டை வெயில் உறிஞ்சுவதுமான விளையாட்டு ஒரு தேர்ந்த மேஜிக் கலைஞனின் ஜாலம்.. ஒரு புள்ளியில் தொடங்குகிற...

அன்பின் நீ(நி)லமை

* காட்சிகள் மாறுகின்றன  அடித்தெழுதப்படும் பிழைக் கணக்குகளைப் போல எளிய சூத்திரம் எப்போதும் மற(று)க்கப்படுகிறது அன்பின் தீரா மை தன் முகம் முழுதும் நீலம் அப்பிச் சிரிக்கிறது   ஓர் உணர்ச்சிக்குறி முற்றுப்புள்ளியாகும் அளவே அவ்வளவும் -ரேவ...

அலை விளையாட்டு 10

* கொண்டாடப்படவேண்டிய நாளின் தொடக்கம் உன்னிலிருந்து ஆரம்பிக்கிறது மோனா..  தொலைத்தொடர்புகளற்ற வனாந்திரத்துப் பறவையின் சுதந்திரத்தைப் போல சிறகுகள் பெற்றுவிட்ட கர்வம் வானளக்கிறது. அது பறந்து பறந்தே பெற்றுக்கொண்டுவிடும் கொண்டாட்டம் வந்து அமர்கிற இடம், நிஜத்தினூடாடும் வாழ்வின் பெருங்கருணை..  இலையுதிர்த்துவிட்ட மரங்கள் சூடிக்கொள்கிற வரவில், வசந்தங்கள் பூக்கிறது, அதன் மணம் காட்டுத் தேனியீன்...

உண்மையென்பது பொய்யின் நாடக மேடை

* கைவிட்டு எண்ணக்கூடிய கணக்கின் தூரம் அறிவிற்கு வெளிச்சமாகிறபடி பார்த்துக்கொள்கிறோம் தொடரும் அறிவிலியின் இருட்டுக்கு  விளக்குகளிருக்க பயமெதற்கு  விளங்காப் பொருளின் மேதமையின் மீது கல்லெறிகிற குளத்துக் கேள்விகளுக்குள் சலனிக்கிற மெளனம் மெளனம் மட்டும் தானா கேள்வி எழுகிறது வளைவுகளின் ஆதாரப் புள்ளி வட்ட வட்டமாக சுமக்கிறது ஒரு முடிவுறா முற்றுப்புள்ளியைத் துணையாக்கி அது பிரசவிக்கிற கமாக்களில்...

முரண்களின் இருவழிச்சாலை

* இரண்டு முரண்களை நானுனக்கு பரிசளிக்கிறேன் பிடிக்கும் போது கையாள்வதற்காய் ஒன்றும் பிடிக்காத போது கைகுலுக்கி பிரிவதற்காய் இன்னொன்றும் முதலாம் ஒன்றின் சுவாரஸ்யம் இரண்டாம் ஒன்றைத் தாங்கிப் பிடிக்க அடித்தளமாகும் மேலெழும்பும் அத்தனை கட்டிடங்களுக்கும் ஏற்றவொரு வெயிலே சமாதானத்திற்கான குடை எப்போதும் மறக்காதே நாம் என்றைக்கும் சேர்ந்தே இருப்போமென்ற முரணில் ஒன்றை நீயே தேர்ந்தெடு -ரேவா ...

புரிதல் கூடும் பொழுதின் உன்மத்தம்

* நீ கூடத் தேவையில்லை என்று சொல்லும் போது சொல்லின் நாக்குகள் தீண்டும் சுவைக்கு சுதந்திரமென்று பெயரிடுகிறேன் அவை சுழன்றாடுகிற வெளிக்குள் சலங்கைகள் சத்தம் குழந்தையின் பிஞ்சுப்பாதத்திலிருந்து பிறக்கிறது ஒலி மணக்கிற அதன் பால்பற்கள் குழந்தை பார்க்கிற முதல் காட்சியைப் போல் அத்தனை பவித்திரம் அது சிரிக்கப் பழகுகிற அசைவில் முகம் பார்க்கத் தொடங்கிவிட்ட தொடக்கம் கடவுள் இருப்பதாய் நம்ப வைத்துப்...

ஆப்ஸ்னல்

* கோடிட்ட இடங்களை நிரப்புவது போலில்லை பொழுதுகள் சில இடங்கள் அடிக்கோடுகள் பல இடங்கள் கேள்விக்குறிகள் சிலபலதில் புரியாத ஆச்சர்யக்குறிகள் சிக்கல் காடுகள் தீர்த்துவைப்பதில்லை பதிலுள்ள கேள்விகளை ஆனாலும் எழுதிப்பார்க்கிறோம் மூன்றில் ஒன்றை ஒன்றைப் போன்ற வேறுவேறில்.. -ரே...

நடைபாதைக் காரணங்கள்

* சில திரும்பிப் பார்த்தல்கள் திருப்திகரமாக இல்லாதபோது சோர்வுறுகிறோம் அனிச்சை செயல்களாய் மாறிவிட்ட ஒப்பீட்டில் தன்னளவில் ஏற்படாத திருப்தி ஒரு நடைபாதை ரோட்டுக்கடை ஒவ்வாமையென்பது உண்ண மறுத்த நாவின் திமிரென்பதை நாம் ஏற்க மறுக்கிறோம் இயங்குசக்தியில் செரித்துப்பழகிய மூளை நம் தூரம் நாம் நடந்துபார்க்கிறோம் =ரே...

நிதானத்தின் கடல் நிறுத்தம்

* விட்டுவிட்டுப் போன சொற்களின் படகு நீந்திக்கொண்டிருக்கிறது மிக நிதானமாக நிதானத்தின் மிகமாக திருப்பிப் போட்டவுடன் மாறிக்கொள்கிற  அர்த்தங்களைப் போல ஆழங்கள் குறித்த கவலையற்ற துடுப்புகள் கரை சேர படகுகள் எப்போதும் கடல் நோக்கியே நிறுத்தப்படுகிறது -ரேவா ...

பெளர்ணமிப் பொழுதுகள்

மாதங்களின் வித்தியாசங்களைப் போல் மாறாத அதே நிலவு தான்.. ஆனால் உள்ளாடும் மனதின் அசைவுக்கு பொருந்திப் போகிற செளந்தர்ய இசை இந்த தனித்த?! வளர் நிலவுக்கு எப்போதும் உண்டு.. கோடையில் வளர் நிலவு கொஞ்சம் வித்தியாசமானவையாகவே என்னை எப்போதும் எண்ண வைத்ததுண்டு.. வியர்வையைக் கழற்ற தேடுகிற காற்றின் உடை மனதின்...

பிடித்த பாடல்கள்

* நம் கடந்த காலங்களை பிரதியெடுக்கிற சர்வ வல்லமை நிகழ்காலங்களோடு ஒட்டிக்கொள்கிற மனிதக்கூரைகளிடம் உண்டு தான்.. எங்கோ, யாரோ, எதன் பொருட்டோ மறப்பதென்ற நினைவில் தேக்கி் வைத்துக் கொள்கிற முரணை, சம்பவங்களின் அடர்த்திக்குள் இழுத்துவந்துவிடும் போது மனதிற்குள் நிகழ்கிற வெட்கை பொழுதை, வியர்த்தது வெளியில் தெரியாத அளவு துடைத்திடத் தெரிந்திடும் பக்குவம் ஒரு பெரும் பயிற்சி.. பெரும்பாலும் பயிற்சி அத்தனையும்...

திறப்பு

* அத்தனையும் கைவிட்டு போனபிறகும் அந்த வழிப்பாதை மலையைத் திருகுகிறது எங்கோ உயரத்தில் பறக்கிற குயில் திறக்கிறது உச்சிக்கான புதிய பாதையை.  -ரேவ...

வெளிச்சம்

* உருகும் பனிக்கட்டியை கைகளில் வைத்துக் கொள்வது போல இந்த இரவு அத்தனை வலி அத்தனை குளிர் அத்தனையும் மரத்துப்போகும் அந்த புள்ளி மட்டுமே அப்பட்டமான வெயில் வெயிலென்பது குளிரின் வெளிச்சம் -ரேவா...

நிழல் அளிக்கிற நிழல்

* நீயளித்து உண்ணும் போது தான் சுவைகூடுகிறது நிராகரிப்பு அல்லது பெயரிடப்படாத ஏதோ ஒன்று காலாணிகளால் பூத்த மனதை சம்பவங்களில் வாசத்தால் சிறைபிடித்து வைத்திருக்கிறேன் சிரிப்பு நிறைந்த அறைக்குள் நடமாடுகிற நிழல் நீ அழித்தது நாம் உறைந்து சிரிக்கின்றோம் -ரேவா ...

வரைதலின் வண்ணம்

* வண்ணங்களோடு சமாதானம் கொள்ளச் செய்கிறது ஓவியக் கைகள் வளைவுகள் நிறச்சேர்ப்புகள் வேண்டும் வண்ணம் புரிதலின் அடர் கலவை புதியதை ஏற்றுக்கொள்கிற நிறம் பழையதின் பால்யம் வளர்கிறோம் வண்ணங்களாலே.. -ரேவா ...

புரிதலின் கோடை

* புரிதலுக்கு தள்ளப்படுகிற தருணம் பிழை கணக்குகள் அடித்து எழுவதின் அர்த்தம் வெறித்துப் பார்க்கும் போது கண்களற்றதை காட்டிக்கொடுத்துவிடும் கவனிப்பு பெரும் கருணை திருத்துதல் வெயில் போர்த்தும் வெட்ட வெளி பொறுக்கும் சூடு பொறுக்கட்டும் கணக்குகளை -ரேவ...

இக்கட்டின் முடிச்சு

* ஒரு காட்டாயம் காட்டிக்கொடுக்கும் போது கட்டுப்படுகிறோம் இக்கட்டின் திசை நெருக்குகிற கையில் இக்கட்டுச் சொல்லின் புதிர் விடுவிக்கிறோம் அது முதல் முடிச்சைப் போல் அத்தனை இறுக்கம் -ரேவ...

நிறுத்தம்

முக்கியமற்றதாகிவிட்ட வீதிகள் இனி திரும்பாதிருக்கட்டும் கையசைப்பில் கழன்றுவிட்ட ரேகைகளைச்  செப்பனிட்டுக் கொள்ளும் பொருட்டு நன்றி சொல்வோம் நிறுத்தங்களுக்கு. -reva ...

நீள்கிற பாதையின் புறவழி

இன்று இருக்கிறது நேற்றைப் போல நேற்றில் இருந்தது இன்றைப் போல் ஒரு சிறு வெளிச்சம் நுழைந்து கொண்ட பின் எரிகிற வெளிச்சம் இருப்பதின் பிரதானம் நாம் என்றும் இருக்கிறோம் நாளையைப் போல் -ரேவா...

கழுத்துச் சங்கிலி

ஓர் அனாதையின் மெளனம் குறித்து நம்மிடம் வருத்தங்கள் இல்லை அதன் மீதான பரிதாபத்தில் வளர்க்கிற நம்பிக்கைக்குள் அரூபத்தின் கழுத்துச் சங்கிலி கட்டிப் போடுகிறோம் சம்பவங்களின் கூச்சலைப் பொருத்து சொல்லின் உரிமைக்கு  உள்ளேயும் வெளியேயும்  -ரேவா ...

ரிலாக்ஸ் ப்ளீஸ்

* எதற்கு இத்தனை நடிப்பு சொற்களின் வரிசையைக் கொஞ்சம் ஓரங்கட்டு கால் கடுக்க நின்று வந்த என் மெளனத்தை ஏற்றுக்கொள் பிராகரம் சுற்றிவந்த களைப்பு கோவில் சிலையென ஒட்டிக்கொண்டு நிற்கிறது பரிகாரம் தேடாத பாவங்களை மன்னி அவை அசலானவை பாவமென்பது வழக்கொழிந்துவிட்ட சத்தங்கள் தேங்காய் உடைக்க சன்னிதியில் ஓர் இடமுண்டு சத்தம் வெடிக்கும் போது கிளம்புகிற விசும்பல் உன் உப்புச் சுவை உப்பென்பது நீ கொடுத்த முன்நெற்றி...

நாம் எனும் ஸ்மைலீஸ்

பத்திரப்படுத்துதலில் தூரமாகிவிடும் போது கிணற்றுத் தவளையின் சத்தமென அதிகரிக்கிறது கனவு மீறுதலைத் தாண்டாத கோடுகள் வனம் பூப்பெய்த ஒற்றை விதை தாண்ட கேட்கிற குரல் சாத்தானின் ஆப்பிள் மரம் நாமே உண்கிறோம் நம் நிர்வாணங்களை மறைக்க அங்கே ஆதிக்கனவுகள் பாம்பின் கழுத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறது நாம் விஷமுறிவிற்கென ஒன்றிரண்டு ஸ்மைலிக்களைப் பத்திரப்படுத்துகிறோம் -ரே...

நடைமேடை

வெற்றுப் புன்னகைக்கா இவ்வளவு தூரம் சொற்களின் நடைமேடை பயணங்களின் தடங்களை பதுக்கியே வைத்திருக்கிறது எண்களுடைய பயணிகள் மாறிக்கொண்டே இருக்கின்றனர்.. - Reva ...

இரவுக் குறிப்புகள்

வெயில் காலக் காற்றைப் போல் இல்லை இன்றைய இந்த குளிர் காற்று.. கோடையை உறித்துத் தின்னத் தொடங்கியிருக்கும் இரவின் வியர்வையற்ற இந்த பொழுதில், நாசியேறுகிற குளிர் பனிக்கரடியைப் போல் முன் நிற்கிறது. பதுங்குவதை விடுத்து அதன் பளிங்கு கண்களை வேடிக்கைப் பார்க்கிறேன். அதன் சுவாசத்தால் என் கேசம் களைவதை பிஞ்சுச் சிறுமியின் கைகளில் அடங்க மறுக்கிற பொம்மையின் அளவைக் கொண்ட கொண்டாட்டமாகிறேன். கொண்டாட்டம்...

பெளர்ணமிக் காடு

எல்லாம் மாறிவிடுகிற போது தட்டுப்படுகிற இருளுக்கு விளக்கென்று பெயர் வைக்கலாம். காற்றிலாடி அது கரையும் இசை மெளனத்தின் மொழி அது வளர்க்கிற வெளிச்சம்  புரிதலின்  பெளர்ணமிக் காடு.. -ரேவா ...

ஆதியின் கண்டுபிடிப்பு

ஞாபகங்களை வளர்க்கிறோம் தாமாக நுழைந்து்கொண்டுவிடும் நியூரான் தீவில் பசித்துண்ணும் கிழங்குகள் மணலடியில் வேர்பிடித்திருப்பதை கடல்சூழ கவனித்துக் கொண்ட பின்னும் துடுப்புகளற்ற பொழுதை கரைகளாக்கிக் கொண்டுவிடும் சாதுர்யம் ஒரு உன்மத்தம் நீச்சல் தெரிந்துவைத்திருக்காத தப்பித்தல் கொலைக்கான திட்டமிடல் கொன்று குவிக்கிறோம் 365 பகைவன்களை வருடங்கள் தப்பிழைக்கும் போது தப்பித்துக்கொள்கிற தலைவன் கொண்டுவருகிறான்...

பிடித்த பாடல்கள்

நம் பயணங்களைத் தேர்ந்தெடுக்கிற உரிமை நம்மை விட்டுப் போனவர்களின் நினைவுகளுக்கும் உண்டு தானோ என்று இக்கணம் நினைக்கிறேன்.. விட்டுப் போனவர்கள் என்ற சொல்லின் புதிர் நம் தேடலுக்கான விடை.. பிரித்துப் பார்ப்பதற்கும், பிரிந்து இருந்து பார்ப்பதற்குமான பார்வை வித்தியாசங்கள், தாய்மொழி கூடு பாய்கிற வேற்றுமொழியின் நாவினைப் போல்.. பிசகுதலை லயமென்று ஏற்றுக்கொண்டால் பாடப்படும் பாடல்? பிறழ்கிறேன்.. வெளிச்சங்களையெல்லாம்...

இப்போது

* கனவிற்குள் நுழைவதைப் போல் எளிதாவது இல்லை கடந்ததில் நுழைவது ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பும் பையில் திணிக்கப்பட்டவைகள் உறங்கிப் போன நடுசாம வீதிகள் நிழலின் பயம் நடப்பதின் வெளிச்சம் எங்கிருந்தோ அனத்துகிற இறந்த காலத்தின் சாவிகள் எவர்கையிலேனும் இருக்கலாம் அனுமதியற்ற வாசல் திறந்தே கிடக்கிறது...

நடக்கக் கேட்கும் அறையின் கால்கள்

* முடிந்துகொண்டிருப்பவைகளைப் பற்றி முடியாத கேள்விகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன வடக்கு வாசலில் இருந்து கிளம்பும்  புறாக்கள் அல்ல இந்த சமாதானம்  சத்தியத்தின் மீதான மணிச்சத்தம் எதை எழுப்பிவிடப் போகிறது  இரண்டொரு மணித்தியாலங்களுக்குள்  கடந்துவிடவேண்டும் இருப்பற்ற அறைக்குள்...

சாம்பல் பொய்கள்

* ஒரு கடவுச் சொல்லைப் போல் பொய்யைத் திறந்து பார்க்கிறேன் கையாள்வதின் லாகவம் மறதியில் புதைவதை சேற்று மணலென குறிப்பெடுத்துக் கொள்வதின் ஈரமற்ற வெடிப்புகள் வரைகிறது நீர் இருந்த ரேகைகளை சுனையின் சுவையறிந்த பாதங்கள் நிற்க மறுக்கிற நிலத்தின் கீழ் பாறைக் குழம்புகள் வெடிக்கக் காத்திருக்கும் தருணங்கள் விழுங்கட்டும் ஒழுங்கீனத்தின் சாம்பல் பொய்களை நான் என்னைத் திறக்கிறேன் -ரேவ...

எளிய படகு

இருக்கிறேன் என்பதைப் போல் இருப்பது எளிதாவது இல்லை இல்லாவது போவது இருப்பதின் எளிய படகு அது ஏற்றிக் கொண்டு போகட்டும் உடன் வரும் யாவையும் -ரேவ...

...

சொல்லின் கண்கள் நோட்டம் விடுகிற இருளைத் திறக்கமுடிவதில்லை இருட்டுப் பூனை பாலைக் குடிப்பதைப் போன்ற  கனவின் நிறம் ஊசலாட்டுகிறது வேர்கொண்ட காரணத்தின் வெளிச்சத்தை -ரேவ...

ஆறுதல்

* பேச்சற்றப் பொழுதுகள் பேசித் தீர்க்கின்றன பேச இடமற்ற சொல்லின் நேரத்தை கரிக்கோடுகளாகும் வார்த்தைகளை வரைந்து பார்க்கிற சுவர் அது மட்டும் ஆறுதல் -ரேவ...

கருணை

* நிழல் தரும் மரங்கள் நம் நீண்ட தனிமை விதைத்ததைக் கொடுக்கிற வெயில் பழம் தின்னிப் பறவைகளின் கருணை எல்லோர்க்குமான மழை வளர்க்கிறது அவரவர்க்கான நிழலை -ரேவ...

ஆனாலும்

* எப்போதென்ற கேள்விகள் எப்போதும் இருக்கின்றன தீராத சொற்கள் திமிறிக் கொண்டு பாய்கையில் அடக்கத் தெரியாத கனவில் பதில் மிச்சமிருக்கிறது எப்போதும் -ரேவ...

சுழற்சியின் நிறம்

  வீடறியாதவனின் ஞாபக மறதியாய் அத்தனை பாந்தமாய் நடக்கிறது சந்திப்புகள் நமக்குள் கைவிடப்பட்ட கைக்குட்டையொன்றை துடைக்கக் கொடுத்த நாளில் உப்புப் படிந்த கண்ணீரின் உதிரம் விலக்கு நாள் அவஸ்தை மரணபயம் கொடுத்திடாத விலகுதலால் வலியேற்படுவதில்லை முன்போல் நெற்றி முத்தமொன்றின் பாலை சுட்டெரிக்கிறது...

...

குட்டி நாயொன்று பசிக்கு அழுகிற குரலாகிறது இரவு முணுமுணுக்கிற எதிர்பார்ப்போடு எரியத் தொடங்குகிறது தெருவிளக்கு -ரே...

..

விட்டுவிடாதபடி பெறுகிற சம்மதம் நிறுத்திவைக்கிறது இருப்பை கடல் பார்க்க ஓடும் பயணத்தில் அந்தி குழைக்கிற கடல் மணலின் கையில் வைகறை -ரேவ...

...

ஒரு சொல் உடைந்து நீ பிறக்கும் போது அழுகுரல் சில்லுகள் பிரதிபலிக்கிறது சொல்லின் சொல்லாய் உன்னை -ரேவ...

அது மட்டுமே உச்சி

* அனாதையாகிவிடும் அழைப்பற்றக்  காலத்தின்  குரல் கோப்புகளில் எதிரொலிக்கிறது மலை உச்சி திருப்பித் தரும் மற்றொரு குரலில் இன்னொரு மலை -ரேவ...

வானவில் சொற்கள்

வார்த்தைகள் மட்டுப்படும் போது வாய்க்கிறாய்  பேசுவதற்கான வாய்ப்புகளற்று தேங்குகிறது  மெளனம் மெல்ல உடையத் தொடங்கையில் அடைபட்டுக் கிடைந்த நீர்க்குமிழின் ஜீவிதம் போல் உடுத்திக் கொண்டு பறக்கின்றன வானவில் சொற்க...

தோற்றங்களின் தினசரி

மாறாத தினசரிகள் தினம் மாறும் தோற்றங்கள் வார்த்தைக்குள் சிக்கிக் கொண்ட தூண்டில் கனவு இரையாவதில்லை துடிக்கிறது கையளவு நீரள்ளிக் கொடுக்கும் இருப்பிற்கா மாறாத தினசரிகள் மாறுகின்றன தோற்றங்கள். -ரேவ...