உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

மெளனம் ஊறும் சொல்லின் வலிமை*

யாரோ ஒருவர் முடித்துவைக்கிறார்கள்

டச் ஸ்கீரின் மேல் ஊறும் எறும்பு
அசைத்துப் பார்க்கிறது
மெளனம் என்ற அசையா சொத்தை

கல் தேயும் பழமொழியின் மேல்
நின்று கொண்டிருக்கிறேன்
சிறு எறும்பாக

தொடக்கத்தில் இனிப்பாக இருப்பது குறித்த கேள்வி
யாரோ ஒருவரை பின் தொடர்கிறது

எறும்பின் உணர் வரிசைகள் குறித்து
பேசத்தான் வேண்டுமா?

0 கருத்துகள்: