உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

ஆழத்தின் வெயில் நிழல்


*

தனித்து விடப்படும் நேரம்
நிலம் தருவிக்கிறது
தங்கிக்கொள்ள இடமற்ற வெயிலை


வார்தைகளை சூட்டோடு உண்டு பழகிய
பழக்கம்
ஒரு போதை வஸ்து


மயங்கடிக்கும் பசிக்குத் தெரிவதில்லை
நிதானிப்பதின் சுவை

நா சுட்டுவிடும் போது
கொட்டுகிற ஈரம் கொடுக்கிறது 

பாதங்களுக்கேற்ற நிழலை

நடந்து பார்ப்பது ஒரு சுவை விருந்து
அங்கே
உப்பின் நிழல்
கடலின் குணம்


-ரேவா

0 கருத்துகள்: