உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

அந்த ஓசை

 *

அற்புதமான அந்த ஓசைக்குப் பின்
நாம் பேசிக்கொள்ளவில்லை.

இசை குழைத்து ஊட்டிவிடும்
இந்த நினைவின் பசிக்கு தீனியாகிற இரவை
நடனக்காரியின் கால் சலங்கையாக்குகிறேன்.

நடனம்
மனம் பிறழ்ந்தவளின் வார்த்தை நயம்.

திக்கெட்டும் சத்தம்.
திசை தெறிக்க தெவிட்டாத ஓசை.

நாம் அந்த ஓசைக்குப் பின் பேசிக்கொள்வதில்லை.
இரவு சூடும் பனியின் கோலம், வெயில் விரிகையில் புகையாவதைப் போல் நாம் அந்த ஓசைக்குப் பின் பேசிக்கொள்வதில்லை.

-ரேவா

0 கருத்துகள்: