உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

ஆதியின் கண்டுபிடிப்பு

ஞாபகங்களை வளர்க்கிறோம்

தாமாக நுழைந்து்கொண்டுவிடும் நியூரான் தீவில்
பசித்துண்ணும் கிழங்குகள்
மணலடியில் வேர்பிடித்திருப்பதை
கடல்சூழ கவனித்துக் கொண்ட பின்னும்
துடுப்புகளற்ற பொழுதை
கரைகளாக்கிக் கொண்டுவிடும் சாதுர்யம்
ஒரு உன்மத்தம்

நீச்சல் தெரிந்துவைத்திருக்காத தப்பித்தல்
கொலைக்கான திட்டமிடல்

கொன்று குவிக்கிறோம்
365 பகைவன்களை

வருடங்கள் தப்பிழைக்கும் போது
தப்பித்துக்கொள்கிற தலைவன்
கொண்டுவருகிறான்
பசிகளுக்கான விடையை

நாம் கரையிலே வளர்க்கிறோம்
தீவுடைய ஞாபகங்களை

-ரேவா0 கருத்துகள்: