உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

அலாரக் குருவி


*

முத்தத்தை பத்திரப்படுத்தும் நாளில்
அது வீட்டின் கடிகாரமுள்ளாக மாறி அசைகிறது

மணித்திரைக்குள்ளிருக்கும் அசைவு
நொடிமுள்ளாகும் போது
சத்தங்களுக்கு சிறகு முளைக்கிறது

குட்டிவானங்கள் மணிக்கொருமுறை சேரும்
அலாரக்குருவியின் சத்தம் நம் முத்தம்
அது நினைவூட்டுகிறது
பசித்திருக்கும் நேரங்களுக்கான கணக்கை

பறக்க நினைக்கும் மணித்துளிகள்
அரூப நெல்மணியாகும் போது
தீர்கிற பசி திறக்கிறது
குட்டி வானத்தை

- ரேவா

0 கருத்துகள்: