உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

பின் தொடரும் குரல் நிழல்கள்


*


தெரியாத பறவையின் குரலில் நீள்கிறது
நடுநிசி

விரிந்த சிறகுகளின் தொலைவில்
அறியமுடியாத வெளிச்சத்தின் இருட்டு
வசப்பட்டுவிடுகிற பறத்தலிலோ
பழைய பாதை

திரும்பமுடியாதவைகளைக் கொண்டிருக்கிற வழிகள்
திறந்துகொள்கிற குகைகளாகும் போது
மறந்துவிடுகிற மந்திரம்
ஒரு வரம்

மீறி நுழையும் போது
மடி நிறைய அள்ளிவருகிற நினைவுகள்
ஆபத்தானவை
அவை வெளவாலின் தலைகீழ் பிம்பங்களைப் போன்ற
தெளிவற்ற தெளிவில் இருந்து பிறக்கிற
சுமைகூடும் புழங்காததின்
அடர்வாடை

அசைவற்றது அசையும் போது பறக்கிற குணம்
எச்சரிக்கையானது மட்டுமல்ல
அவை
அறியாத நடுநிசியின் குரலைப் போன்று
ஆராயப்படக்கூடியதும்

-ரேவா

0 கருத்துகள்: