உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

நிறமாற்றங்களின் திசைகாட்டி


*

மாறிப் போகிற நிறம்
மாற்றி அமைக்கிறது
மாற்றத்துக்கு உள்ளான காலத்தை


உணர்வலைகள் மேலெழும்பும்
தனிமை நோக்கி நீள்கிற கடலொன்றில்
விரிகிற நீலம்
நிறமாவதில்லை 


மாற்றத்துக்கு உள்ளாகும் போது
மாறுகிற திசைகாட்டி
உன் சொல்லின் நிறம்


தூரிகை தொடங்கி வைப்பதில்லை
வளைவதற்கான வண்ணங்களை
அது மாறும்


-ரேவா

0 கருத்துகள்: