உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

இறுதியின் முடிவு


*

காணாமல் போகிறோம்

கண்டெடுக்கும் சொல் கொண்டவர்
கையிலெடுக்கின்றனர்

கைமாறும் ரேகைகளின் மாற்றம்
நிலையைப் போல் நிலையில்லாதது 


காட்டுவழியில் மின்மினி வெளிச்சம்
இந்த கருணை

ஒரு பிரிவிற்கா
இத்தனை திட்டமிடல்
காணாமலே போயிருந்திருக்கலாம்


-ரேவா

0 கருத்துகள்: