உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

நிற்கின்றேன்


எழுதியதின் கனம்
எழுதி எழுதித் தீர்க்கிறது

படைப்பூக்கமற்ற காலத்தின் முன்
படைப்பவனும் கலைஞன் தானே

எழுதி எழுதி கணங்கள் கழிகிறது

கனத்திற்கும் கணத்திற்குமான
இடைவெளிக்குள் நின்றுகொண்டிருக்கிறது
வரிசையிடப்படாத அர்த்தங்கள்

நான் எண் மூன்றில் நிற்கின்றேன் 

 =ரேவா


0 கருத்துகள்: