உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

தலைப்புகள் இடாமல் ஜீவித்திருக்கலாம்

*
நதியாகிவிட்டவரின் பழைய நினைவில்
மிதந்து கொண்டிருக்கிறது
ஓர் இலை


பச்சையங்கள் கழற்றிவிட்ட அதை
சருகென்று சொல்வதில் உடன்பாடில்லாது
ஓடவிடுகிற போக்கு
ஒரு கூழாங்கல்

மிஞ்சியவைகளை கரைசேர்க்கிற பால்யம்
ஒரு பட்டாம்பூச்சி 

வளைத்(ந்)து கொடுக்கிற வண்ணங்களில்
சுகப்படுகிறது
நதிகளை இணைத்த பெருமழை

-ரேவா

0 கருத்துகள்: