உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

சாம்பல் பொய்கள்

*
ஒரு கடவுச் சொல்லைப் போல்
பொய்யைத் திறந்து பார்க்கிறேன்


கையாள்வதின் லாகவம்
மறதியில் புதைவதை
சேற்று மணலென குறிப்பெடுத்துக் கொள்வதின்
ஈரமற்ற வெடிப்புகள் வரைகிறது
நீர் இருந்த ரேகைகளை


சுனையின் சுவையறிந்த பாதங்கள்
நிற்க மறுக்கிற நிலத்தின் கீழ்
பாறைக் குழம்புகள்


வெடிக்கக் காத்திருக்கும் தருணங்கள்
விழுங்கட்டும்
ஒழுங்கீனத்தின் சாம்பல் பொய்களை


நான் என்னைத் திறக்கிறேன்

-ரேவா

0 கருத்துகள்: