உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

நடைபாதைக் காரணங்கள்

*

சில திரும்பிப் பார்த்தல்கள் திருப்திகரமாக இல்லாதபோது சோர்வுறுகிறோம்

அனிச்சை செயல்களாய் மாறிவிட்ட ஒப்பீட்டில்
தன்னளவில் ஏற்படாத திருப்தி
ஒரு நடைபாதை ரோட்டுக்கடை

ஒவ்வாமையென்பது
உண்ண மறுத்த நாவின் திமிரென்பதை
நாம் ஏற்க மறுக்கிறோம்

இயங்குசக்தியில் செரித்துப்பழகிய மூளை
நம் தூரம்

நாம் நடந்துபார்க்கிறோம்


=ரேவா

0 கருத்துகள்: