உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

நடக்கக் கேட்கும் அறையின் கால்கள்*
முடிந்துகொண்டிருப்பவைகளைப் பற்றி
முடியாத கேள்விகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன

வடக்கு வாசலில் இருந்து கிளம்பும் 
புறாக்கள் அல்ல
இந்த சமாதானம் 

சத்தியத்தின் மீதான மணிச்சத்தம்
எதை எழுப்பிவிடப் போகிறது 

இரண்டொரு மணித்தியாலங்களுக்குள் 
கடந்துவிடவேண்டும்
இருப்பற்ற அறைக்குள் இருப்பவைகள்
முடிந்துகொண்டிருப்பவைகள் 


-ரேவா


0 கருத்துகள்: