உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

முன்னெப்போதையும் விட

*
அன்பு செய்வது
நாய்க் குட்டியைத் தடவிக் கொடுப்பதை விட
கடினமாக இருக்கிறது


உஷ்ணம் பழக்கிவிட்ட பின்
மறுக்கிற அன்னிய வருகையைப் போல்
அத்தனை குரலையும் விழுங்கிய பின்னும்
வேண்டுகிற இடம்
வாலாட்டுகிறது
வேண்டியவர் குரலுக்காய்


பழக்கம் திரும்புகிறது
வீசப்பட்ட உணர்வை பந்தினைப் போல்
திருப்பிக் கொடுக்க


பாதுகாப்பற்ற இடத்தின் சத்தம்
பழகிவிடும் போது
விழித்திருக்கும் கண்கள்
வெளிச்சத்தின் நன்றி 


ஆனாலும்
கட்டிப் போடுகிறோம்
பலகையை
மனதிற்கு உள்ளேயும் வெளியேயும்


beware of love

0 கருத்துகள்: