உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

புரிதல் கூடும் பொழுதின் உன்மத்தம்*

நீ கூடத் தேவையில்லை என்று சொல்லும் போது
சொல்லின் நாக்குகள் தீண்டும் சுவைக்கு
சுதந்திரமென்று பெயரிடுகிறேன்

அவை சுழன்றாடுகிற வெளிக்குள்
சலங்கைகள் சத்தம்
குழந்தையின் பிஞ்சுப்பாதத்திலிருந்து பிறக்கிறது

ஒலி மணக்கிற அதன் பால்பற்கள்
குழந்தை பார்க்கிற முதல் காட்சியைப் போல்
அத்தனை பவித்திரம்

அது சிரிக்கப் பழகுகிற அசைவில்
முகம் பார்க்கத் தொடங்கிவிட்ட தொடக்கம்
கடவுள் இருப்பதாய் நம்ப வைத்துப்
பற்றிக்கொள்கிற காட்டுத் தீ

உராய்வு
கொஞ்சம் காற்று
நடக்கிறது
விழுந்து
விழுந்து

கற்றுக்கொண்டுவிட்ட தேர்ந்த சொற்களின் வழி
பற்றி எரிகிற காட்டின் சுதந்திரத்தைப் போல்
நீ வருகிறாய்
நாம் கூடுகிறோம்


-ரேவா

0 கருத்துகள்: