உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

துணுக்குகள்

 1.


இருக்கின்ற போதே இறக்கிற மனிதர்களை காலம் எல்லா திசை நோக்கியும் இழுத்துச் செல்லும்..

நதியின் போக்கைப் போல் நாமறியாத திசையிடம் நம்மை ஒப்படைப்பதற்கும், ஒப்படைத்த ஒன்றால் கிடைக்கும் ஒன்றை ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு மனோபலம் வேண்டும் தான்.

தத்தளிக்கும் பொழுதுகளாகட்டும், தாமரை இலைத் தண்ணீர் பொழுதுகளாகட்டும் எதன் மீதும் ஒட்டாமல் பயணப்படுவதற்கான அத்தனை ஒட்டுதல்களையும் நிகழ்த்திப் பார்க்கிற காலத்தின் பற்று பற்றறுக்கிற ஒன்றின் பல வாயில்.

வழியாவதில்லை எந்தவொரு சொல்லின் திசையும்,இருந்தும் அது நுழைகிறது.

2.
எங்கிருந்தோ நீள்கிற கைகளால்,
மருதாணி வைத்த குளிரெடுக்கிறது மனதிற்கு. சிவக்கத் தெரிந்து வைத்திருக்கும் சொற்கள் மணக்கிறது
இரவில் சிவப்பு நிலவாக


3.
தேனீர் பொழுதுக்கான தேவையாகிறாய்
அடங்க மறுக்கிற சந்திப்பின் தாகம்
நிறைக்கிறது
உள்நாவின் கசப்பை

4.

0 கருத்துகள்: