உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

குறிப்புகள்கைப்பட எழுதிப்பார்த்த கடிதம் போல் இருக்கிறது இரவு. வரி வரியாய் எழுதிப்பார்த்த வார்த்தைகள் வரிக்குதிரையின் வேகத்தில் வானில் கலக்கிறது.. பிழைச் சொற்கள் உன் நட்சத்திர வெளிச்சம். நான் நிறுத்திவைக்கிறேன் அதை நிலவின் நடுவில்.. திசை கலைத்து வெளியேறும் காற்று நிறுத்தற் குறியிடாத காதலின் பேரன்பு..
மறைவதும் தெரிவதுமான வளர்பிறை வந்து சேரவேண்டிய விலாசம்.
அஞ்சல் முத்திரை நம் காலத்திற்கான விடியல்.
கைக்கு வரும் வாசித்துப் பார்ப்போம் இந்த இரவை...-ரேவா

0 கருத்துகள்: