உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

முரண்களின் இருவழிச்சாலை


*
இரண்டு முரண்களை நானுனக்கு பரிசளிக்கிறேன்

பிடிக்கும் போது கையாள்வதற்காய் ஒன்றும்
பிடிக்காத போது கைகுலுக்கி பிரிவதற்காய் இன்னொன்றும்

முதலாம் ஒன்றின் சுவாரஸ்யம்
இரண்டாம் ஒன்றைத் தாங்கிப் பிடிக்க
அடித்தளமாகும்

மேலெழும்பும் அத்தனை கட்டிடங்களுக்கும்
ஏற்றவொரு வெயிலே சமாதானத்திற்கான குடை

எப்போதும் மறக்காதே

நாம் என்றைக்கும் சேர்ந்தே இருப்போமென்ற
முரணில் ஒன்றை நீயே தேர்ந்தெடு

-ரேவா

0 கருத்துகள்: