உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

விளங்கிய பொருளின் காலங்கள்

விளங்கியப் பொருளின் அர்த்தங்கள் பற்றி
விளாங்கா காலங்களில் பேசிக்கொண்டிருக்கிறோம்

கடந்துவிட்டவைகளைக் குறித்துப் பேசும் பொருளில்
வெளவாலொன்றின் தலைகீழ் பிம்பம்
தெளிவற்றுத் தெரிகிறது

மனிதற்ற பொருளின் இருப்பை
ஒலி அலைகள் மூலம் வாங்கிப் பழகிவிட்ட அர்த்தங்கள்
இருள் சத்தம் கிழித்துப் பறக்கிறது
நிகழ்காலத்தின் முன்

மண்டியிட்டு பணியும் விளங்குதலை
வேறொருவரும் அறியா வண்ணம் மொழிபெயர்ப்பு செய்கிற
 நிரந்தரமற்ற எதிர்காலத்தின் முன்
எவரேனும் தட்டுப்படலாம்
விளங்காப் பொருளை விடுவிக்க
0 கருத்துகள்: