உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

பிடித்த பாடல்கள்

மனச்சோர்வு பிடிக்கும் போதெல்லாம் கையிலெடுத்து உட்கார்ந்துகொள்கிற காபிக் கோப்பையின் மீதிருக்கும் இணக்கம் இந்த படத்தின் மீதும் கூடுதலாய் இந்த பாடலின் மீதும் எனக்கு எப்போதும் இருக்கும்..

ஒவ்வொரு சிரிப்பிற்கு பின்னும் அறியப்படாத வாசத்தை மறைத்துவைத்திருக்கிற இந்த வாழ்வின் சிக்கல் 36 பல் வரிசைகளுக்குள் அடங்கிப்போய்விடுவதில்லை..
அது கூடுகிறது..

இன்று புதிதாய் பிறந்திருக்கிற நவீனத்தின் சவலைப்பிள்ளைகளாகிவிட்ட ஸ்மைலிக்குள் புதைக்கப்படுகிற நம் மனதின் நிறம், ஒப்பனைகட்டிக்கொண்ட செளகர்யம், அல்லது ஆடைகள் போர்த்திக் கொண்டதிலிருக்கும் நிர்வாணம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
நடப்பதைப் போன்ற விழுதல்கள் நம்மை தூக்கி நிறுத்துவதில்லை, அது நம்மை நாமாய் பிறரிடம் அறியத் தருகிறது.
இங்கு மிகப்பெரிய சவால்களெல்லாம் நம்மோடு நாம் இணக்கமாய் இருப்பது மட்டுமே..

நம்மை ஆட்டுவிக்கிற, அடிபணியத் தூண்டுகிற அடங்கமறுக்கிற, சுயத்தை ஒரு புகைப்படச் சட்டகமாக்கி ஏதோ ஒரு மூலையில் அறைந்துவிடுகிற கணக்கற்ற சம்பவங்கள் நம்மை காலத்தின் முன்
பிரதியெடுக்கிறது 


காலம், மாறாதது என்ற சொல்லிருந்து மாறும் போது நாம் பிறக்கிறோம்..
ஒற்றைப் பிறப்பு,
உறுப்புகளின் வித்தியாசங்களில் மாறிப்போகிற பாலினம், மற்றபடி கொண்டாடப்படவேண்டிய இந்த வாழ்வு எல்லோருக்கும் பொதுவானது..
நம் பாதை முட்கள் நாமேயன்றி வேர் யாராய் இருக்கமுடியும்..

எல்லா கலைகளுக்குள்ளும் நமக்கேற்ற ஒன்றைத் தேடியெடுக்கமுடியுமெனில் இந்த அறிவும் அதைச் செதுக்குகிற இந்த வாழ்வும் கொண்டாடப்படவேண்டியது தான்..

எப்போதும் எனக்குள் பாஸிட்டிவ் வைப்ரேஷனைத் தரத்தவறாத பாடலை பகிர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே 


அலைபாயுதே நெஞ்சம் சாயுதே மனம் வலிக்கிறதே
அலைபாயுதே நெஞ்சம் தேம்பியதே கொஞ்சம் ஏங்கியதே
என் வாசல் தென்றல் வரவே இல்லை
ஏன் தூரத்தில் நீ நின்று அருகில் நீ இம்சிக்கிறாய்

என் கண்ணில் நீரை வரவைக்கிறாய்
சரி அதற்கும் தவறிற்கும் இடையில் ஏன் நிற்கிறாய்

(அலைபாயுதே)
உன்மீதெல்லாம் குளிர்வாசம்
உன்னுள்ளே அனல் மேகமே
வரும் இன்பங்கள் துன்பங்கள் எல்லாம் உன் விளையாடலே
உனை நீயே கொல்கிறாய்
உனை நம்ப மறுக்கிறாய்

உன் பாதை முள்ளை நீ செய்கிறாய்
ஏன் உன் பேச்சை கேட்காமல் நீயே தான் தடுமாறினாய்
அலைபாயுதே 


2 கருத்துகள்:

மாசிலா சொன்னது…

மிக அற்புதமான வருணனை. மன அலைகளை அற்புதமாக நம் அழகு தமிழில் வரைந்து கொடுத்திருக்கிறீர்கள்.

நன்றி.

Nagendra Bharathi சொன்னது…

அருமை