உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 31 டிசம்பர், 2016

இருப்பதில் எப்போதும்


*

சற்றும் எதிர்பாராத இருள்
ஓசைகள் வெளிச்சங்களாகிட பிறக்கும் கண்

உறுப்பொன்றின் உறுப்பற்ற பிறப்பு
 நாம் அரூபவெளிக்குள் அதைப் போலே சஞ்சரிப்போம்மெளனக்கூட்டிற்கு திரும்பும் வார்த்தைகளின் 
சிறகுகளைப் போல்
வானத்தில் அத்தனை அமைதி
அமைதிக்குள் ஆழ்ந்த பவித்திரம்


சுத்ததைப் போன்ற அசுத்தம் விளைவிக்கிற 
நியாபகத்தின் தீனிக்கு 
இரையாகாத இடத்தில் பசித்துக் கிடக்கும் தேடல்
இந்த இருள்


இங்கிருக்கிறாய் என்பது
உணர்வொன்றின் உறுப்பற்ற பிறப்பு


மரணமற்று நிறைந்துகிட
இந்த மழை வானைப் போல்
எப்போதும்


-ரேவா

0 கருத்துகள்: