உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 31 டிசம்பர், 2015

முன்பை விட

* இறுக்கமாக இருக்கமுடிகிறது முன்பை விட நேர்த்தியாய்  வெயில் பட்டுச் சிதறும் நீர்த்துளிக்குள் ஒளிந்திருக்கும் வண்ணத்தை நிலம் மட்டுமே உடுத்த முடிவது எத்தனை பெரிய கொடுப்பனை விளையாடுகிற கண்ணாம்பூச்சி ஆட்டம்  காட்டிக்கொடுக்காத திசை நோக்கி இருத்தி வைக்கட்டும் அகப்படாத யாவற்றையும் கைகளை காற்றுக்கு ஒப்படைப்பதில் விரிகிற வானம் கைகளின் சிறகுகள் பறப்பதில் எத்தனை சுதந்திரம் இறுக்கத்தில்...

தற்காலிகத்தின் நிறம்

* தற்காலத்தின் மீதேறும் எதுவொன்றையும் பச்சோந்தியின் நிறமாக்குகிறது காலம் குதித்து விளையாடும் நீர்த்தவளைக்கு மழைகாலத்தின் மீது ஏன் இத்தனை காதல் அடித்துப் பெய்தும் வீழ்ந்து போகாத வேரின் போராட்டத்தை மெச்சுவதற்கு நேரமில்லை  வானவில் வளைவுகளை வார்த்தெடுக்கும் மழைக்காலங்களை ஏன் நம்பவேண்டும் அதுவும் இந்த கோடையில்?! வெறித்துக் கடக்கும் எதுவொன்றையும் தன்னிறமாக்கும் பச்சோந்தியின் கண்கள்...

பனிக்கால இரவுகள்

 பனிக்கால இரவுகள் எத்தனை அழகானவை.. கொட்டும் பனியில் பாதம் ஊன்றி நடப்பது பனிக்குடத்தில் ஒரு புழுவைப் போல் கிடந்த பொழுதுகளை அறிவின் துணையோடு ஈரமாய் மனதில் தவழவிடுகிறது.. பிடித்த நேரத்தில் பிடித்த பாடலோ அல்லது பிடித்தவரோடு கொஞ்சமாய் உரையாடலோ கொடுக்கும் ஆனந்தத்தை விட, அழகால் நிரம்பித்...

அது மட்டும்

கட்டுப்பாடுகள் அவிழ்ந்துவிடாது பயணப்படு அது மட்டும் அது மட்டுமே கட்டுடைக்கட்டும் பயணத்தின் மீதான அத்தனை ஒழுங்கையும் ...

இது

நொடி பிசகிவிடும் போது வருடங்கள் கனக்கிறது  இது எந்த நொடி பாரம் இது எத்தனை வருட கனம்  வலிக்கிறது...