உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 டிசம்பர், 2015

சுழிக்குள் விரிந்திடும் இறுக்கத்தின் கடல்*
முன்னுரிமையின் முக்கியத்துவம்  
பின்னுக்குத் தள்ளுகிறது இருப்பதைப் பறித்து

தொடர் சுழிக்குள் அகப்பட்ட பிரியம்
இழுத்துவருகிறது
நதியற்ற கூழாங்கல்லின் இடத்திற்கு

செதுக்கப்பட்ட பாறைகளின் இறுக்க வடிவம்
அறிவிப்பதில்லை
அதற்குள் நதியிருப்பதை
இனி நதி
கூழாங்கல்லின் சுழி
 

0 கருத்துகள்: