உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 டிசம்பர், 2015

இன்றின் கோப்பையில் நிரம்பும் சூடு*
சூடு பறக்கும் தேனீரின் ஆவி ரட்சிக்கிறது  
இன்றிலிருக்கும் நேற்றை

கைபற்றி அருந்தத் தொடங்கும் சூடு  
ஆளாய் பறக்கிறது  
பசித்து நடுங்கும் நாவிற்குள்

குளிரூட்டப்பட்ட அறையாய் இருக்கிற ஒப்பனை  
காட்டிக்கொடுத்துவிடுகிறது போர்வையற்று இருப்பதை

அசல் குணம் வெளிப்பட்டுவிடும் கசப்பில்  
காலியாகிற கோப்பைக்குள் தேங்கிவிடுகிறது 
  நாளையிலிருக்கும் இன்று

0 கருத்துகள்: