உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 31 டிசம்பர், 2015

சொல் காட்டில் தொலைகிற நினைவின் சுவடு

 *


கச்சிதமாக நடந்துகொள்ள முடிகிறது உங்களால்

முன்னெப்போதையும் விட இந்த மெளனம்  
ஏன் இத்தனை வாதையாய் இருக்கிறது


தவித்து அடங்குகிற பெருமூச்சின்
ரத்த வாடை தலைதாழ்த்துகிறது
பிரியம் கொஞ்சிய வார்த்தைகளின் தலையெடுப்பிற்காய்

துடிக்கிற நினைவுகளின் சிரசு
ஒரே கணத்தில் அடங்குவதில்லை
அது துடிக்கிறது
மேலும் துடிப்பதின் வாயிலாய் துன்புறுத்துகிறது

மெளனமேற்கும் எந்தவொரு மனமும்
காணச்சகியாத மொழியால் காறி உமிழ்கிற
தனிமையின் நாற்றம் அடங்குவதற்குள்
உயிர்த்தெழ வேண்டும்

அதற்கு முன் கொலைக்கு தயாராகுகிற
சொற்களிடம்
கருணையோடு கையேந்துகிறேன்

இப்போது முன்பைவிட கச்சிதமாக
நடந்துகொள்ள முடிகிறது சொற்களால்
 

0 கருத்துகள்: