உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

நிலைகுத்திக் கிடக்கும் எதிர்பார்ப்பின் ஆதித் தடம்*
எழுதிப்பார்ப்பதைப் போல் எளிதானதாய் இல்லை
ஒரு ஏமாற்றம்

பழக்கப்பட்ட வழிகள் வந்து விடும் வாசலில்
வலியின் ஆதித்தடம்

கடக்கும் முயற்சியின் ஒப்பனையில்
கழுவேறும் நிறத்தின் கோமாளி முகம்

திரும்பத் திரும்ப வந்து நிற்கும் இடம்
திரும்ப முடியா திசை நோக்கி
அழைக்கும் நிமிடத்தின் அடர்த்தி
பலியிடக் காத்திருக்கும் தலையசைவு

துள்ளத் துடிக்க ஏற்றுக்கொண்ட போதும்
நிலைகுத்தும் பார்வைக்குள்
அதே உலகம்

0 கருத்துகள்: