உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 டிசம்பர், 2015

பரிசுத்தத்தின் நியாயத் தராசு
*

பிரார்த்தனைகளின் வழியாக தான் மண்டியிட வேண்டியிருக்கிறது பரிசுத்த அன்பின் முன்

கேட்கிறோம் தருவதை மறுத்து தட்டுகிறோம் திறப்பதைக் கடந்து காட்டிக்கொடுக்கிற செல்லுபடியாக நியாயங்கள் நியாயத் தராசுகளாவதை நாமே விரும்புகிறோம்


எடைக்கு எடை பாவக் கணக்குகள்
எவர் கையும் இடுவதில்லை
எடையுடைய கல்லில் சரி நிகர் பிரியத்தை

தூக்கி நிறுத்தும் கேள்விகள்
முன்னும் பின்னும் அலைக்கழிக்கும் நிமிடங்களின் முட்கள்
நிமிர்கிறது
நகர்விற்கான தேவையோடு

0 கருத்துகள்: