உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஒரு போதும் இடுவதாய் இல்லை
*
 
ஆணைக்கு அடிபணிகிற அடிமைத்தனத்தின் வாலை  
என்றைக்கும் மடக்கவே முடியாது

நாலுகால் தந்திரங்களை  
சட்டைப்பையில் வைத்திருக்கும் மனிதர்கள்  
ஆபத்தானவர்கள்

ரொட்டித்துண்டுகளை வீசியெறிந்ததும்  
வாலாட்டி நிற்கத் தெரிந்த பிறவிக் குணம் 
நா தொங்க வழிய விடுகிறது  
உண்மையின் உமிழ் நீரை

பின் தொடரும் பாதுகாப்பிற்கு  
பழக்கப்படுத்திக் கொண்ட பக்குவம்  
போலிச் சாமியார்களின் தியானக்கூடம்

ஓங்கார ஒலியை உச்சரிக்கக் கூசா  
அடிவயிற்றின் ரேகையில்  
பிழைப்பு வாதம்

அண்டிப் பிழைப்பதை ஆண்டியின்  
திருவோட்டைப் போல் பார்க்கிறேன்

யாசிக்கும் சொல்லின் சில்லறை
எப்போதும் கைவசம் இருப்பதேயில்லை

0 கருத்துகள்: