உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 31 டிசம்பர், 2015

நினைவின் சந்திப்பு
*

கிளப்பிக் கொண்டு போகிற சத்தங்கள்
கட்டமைக்கிறது   
பழைய நினைவுகளை

தூரத்து ரயில் வண்டியின் புகையென  
மேலெழும்புகிறாய்
பயணத்திற்கான களிப்போடு

அந்த ஜன்னல் இருக்கையின் நீர் கோத்திருக்கும்  
கண்ணாடியை துடைத்து வை
சலங்கை கட்டி ஆட  இரவின் அருகாமையை விட  
வேறென்ன ஒத்திகை வேண்டும்  
இந்த தனிமைக்கு0 கருத்துகள்: