உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 31 டிசம்பர், 2015

நீளமற்றதில் நீளும் கணங்கள்*
யோசனைகள் ஓய்வதில்லை
பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதைப் போல்  
சுற்றிக் கொண்டே இருக்கிறது

அந்த மின்விசிறியை சற்று நேரம் அணைக்கலாம்  
என்ற யோசனையில்  
சிறு துரும்பை கிள்ளிப் போடுகிறேன்

ஆளற்ற இரவும்  
ஆட்படுகிற நிலவும்  
வழிதவறிய காகமொன்றின் இந்நேரத்துக் கரைதலும்  
அதற்காய் கூடொன்று கட்டப் பிரயத்தனப்படும்  
மனதின் முடைதலும் வீடாவதில்லை

அது பறக்கிறது குரலுக்குத் துணையாகி

வீடுள்ள குரல்கள்  
விளக்கணைத்து தூங்கும் இந்த பொழுதிலும்  
பூமி சுற்றிக் கொண்டே இருக்கிறது

இச்சிறிய யோசனையின் மீது  
பேப்பர் வெயிட்டாகித் துடிக்கும் அந்த சிறு துரும்பு 
இப்போது எதுவாக இருந்திட முடியும்0 கருத்துகள்: