உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 டிசம்பர், 2015

அகால நினைவின் நனைதல்*
பெளர்ணமி நிலவு தரையிறங்குகிறது நினைவின் முற்றத்தில்


வெளிச்சம் அதிகரிக்கும் தாகத்தில்
பொழியும் பனி
பாட்டில் நீரின் குளுமையாய் உறைந்து
நனைக்கிறது
கனவின் அடித்தொண்டையை

ஓர் அகாலத்தின் ஆலகாலம்
குட் நைட் எனும் குறுஞ்செய்தியில்
விழித்துக் கொள்ள
நிலா பெய்கிறது

0 கருத்துகள்: