உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 டிசம்பர், 2015

கதவிலக்கம் 1 கீழ் நேசம் 143*
பொருந்திப் போகமுடியா கதவுகளோடு திரிகிறோம்  
இலக்குகளை இலக்கங்களாக்கிக் கொண்டு

தட்டப்படும் சத்தம் திறந்து பார்க்கிற  
அந்நியப் பார்வையில் அனுமதிப்பதென்ற  
அரை நொடி சம்மதம் 
சப்பளமிட்டு அமர்கிறது நடுக்கூடத்தில்


திறப்பதற்கும் 
மூடுவதற்குமான
நிமிடங்களில் உள்ளும் வெளியும்
பரிமாறிக் கொள்கிறது
கூடையும் காட்டையும்


 

0 கருத்துகள்: