உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

பதம்பார்க்கும் உரையாடலின் அனஸ்தீஸியா
*

முன் தீர்மானத்தோடு நடக்கிற உரையாடல் அறுவைச் சிகிச்சைக்கு முன் செலுத்தப்படும் மருந்துகள்
 

ஆழம் பார்க்க அனுமதிக்கும் கத்தியின் வீரியம் உரைக்காது உளறித் தள்ளுகிற வார்த்தைகள் அரைமயக்கத்தின் மொழி்பெயர்ப்பு
  

கழற்றியெறியப்படும் கையுறை முடிவிற்காக அணியப்பட்ட முன்னுரை


மயக்கத்திலிருந்து திரும்ப நேரும் தருணத்தின் வலி
குறிப்பெடுக்கிறது
தையல்களின் எண்ணிக்கையை

காத்திருப்பில் ஆறிடும் காயங்கள்
வடுக்களாக்கி வதைக்கிறது
இதுவென்று தெரியவந்த தீர்மானங்களின் நோய்த் தன்மையை

 

0 கருத்துகள்: