உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 டிசம்பர், 2015

மிச்சம் தொலைப்பது தொலைந்ததின் மிச்சம்

*


மழை விட்டுச் சென்ற மிச்சத்தில் 
குதித்து விளையாடுகிற சிறுவனின் பாதம்  
அள்ளித் தெளிக்கிறது அடைபட்டுக்கிடந்த 
 ஈரத்தை

சிறு கண்ஜாடையெனும் நெருப்பு
காட்டிக் கொடுத்துவிடுகிறது
யூதாஸை

மேல் சிதறிய நீர்த் துளிகள்
வெள்ளிக் காசுகள்
காட்டிக் கொடுத்துவிடுகிறோம்
நம்மைத் தொலைத்ததாய் நாமே
 

0 கருத்துகள்: