உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

தனிமை



ஒரு நீண்ட தனிமைக்கு எப்போதாவது மனம் ஏங்கும் போது சொற்களற்ற நிலத்திற்கு அப்படியே சென்றுவிட தோன்றுகிறது.

எந்த பார்வையும் பழக்கப்பட்டவைகளைப் போல் நம்மை பார்க்க அனுமதிக்காத இடமும், பழகியது தானென்று பார்த்து ஒதுக்காத குணமும், இரண்டின் முரணுக்கு இடையே முண்டியடித்துக் கொண்டு உட்கார்ந்து கொள்கிற மெளனமும், ஒரு கடல் இரவில் அலைகளின் சத்தத்தைக் காது நிறைய வாங்குவதைப் போல்..

உப்புக் காற்றும், உதடு உலர உச்சரிக்க ஆசைப்படும் ஆழத்தில் விலைபோகா உரையாடல்களும், அலையில் பெயரெழுதி கடலுக்கு கொடுப்பதைப் போல்..
திரும்பி வருவது நம் கடல்
 
திரும்பிப் போக அனுமதிப்பது நம் அலை

அலை மோதிச் சிரிக்கும் சொல்லின் கடல் அத்தனையும் நீலம்...

கடல் என்பது கடல் மட்டுமே அல்ல..

அது சொல்லின் நீலம்
சொல்ல முற்படுகிற மெளனத்தின் ஆழம்
போராடித் தீர்க்கிற சத்தத்தின் இசை
கடல் என்பது கடல் மட்டுமே அல்ல
அது ஒரு நீண்ட தனிமை.

0 கருத்துகள்: