உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 30 டிசம்பர், 2015

நீள்கிற பாதையில் மிச்சம் இருப்பது*
இல்லை என்பது மாற்றமற்று நீள்கிறது ஒவ்வொரு இருப்பதிலும்
நீ இருக்கிறாய்

எட்டாக் கனியாகிவிட்ட ப்ரியம் நரித் தந்திரத்தின் புளிப்பு 


சட்டென ஏற்பதில்லை எந்த சுவையும் 
தனிமையின் நாவிற்கு


சப்புக் கொட்டக் காத்திருக்கும் பேசா நாவில்
சலங்கை அணிவித்து
ஆட வைக்கிற மெளனத்திரைக்குப் பின்  
விளக்குகள் இல்லை

விட்டில் ஆகா சொல் சுற்றிப் பறக்கிறது
சுடரை சூரியனாக்கி

சாம்பலில் மீண்டெழும் சடங்குகள்
பீனிக்ஸ் பிரியத்திற்கு வாய்ப்பதில்லை
இருந்தும்
இல்லை என்பது மாற்றமற்று நீள்கிறது
ஒவ்வொரு இருப்பதிலும்
 

0 கருத்துகள்: